கோள்களுக்கு ஆதாரமே நட்சத்திரங்கள்தானே. ஒருவரின் உயர்ந்த நிலை,
பதவி, கௌரவம், பணபலம், உடல்பலம் போன்ற எல்லாவற்றிற்கும்
நட்சத்திரத்தூண்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகும்..
ஒருஜாதகத்தைகையில்எடுத்துக்கொண்டோமேயானால், அந்த ஜாதகனின் நிலை
இப்படித்தான் என்பதை முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வழி வகுப்பது இந்த நட்சத்திரத்தூண்களே. இந்த நட்சத்திரத் தூண்கள் பலம் இழந்து எதிரிடையான நிலையில் இருந்தால் என்னதான்யோகவானாக ஜனித்து இருந்தாலும் அது செயல்படுவதில்லை என்பதுகண்கூடு. ஜாதகர் பிறக்கும் போது நின்ற கோள்களின் அடிப்படையான ஆதாரமான
ஊன்றுகோலான நட்சத்திரங்கள் ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரங்களின் கோள்கள் நின்று விட்டால் அவ்வளவே..
ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள்.
- ஜென்ம லக்கின ஸ்புடத்தை 5 ஆல் பெருக்கி வரும் தொகையுடன்
ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்ட வருகிற மொத்த ஸ்புடம் ஜீவன் அல்லது பிராணன் என்றும் - ஜெனன காலத்தில் சந்திரனுடைய ஸ்புடத்தை 8 ஆல் பெருக்கி
வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்டி வருகின்ற மொத்த ஸ்புடம் தேகம் என்றம் - ஜெனன காலத்தில் மாந்தியினுடைய ஸ்புடத்தை 7 ஆல் பெருக்கி
வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் சூரியனுடைய ஸ்புடத்தை கூட்டிவருகின்ற மொத்த ஸ்புடம் மிருத்தியு என்றும் - ஜீவஸ்புடத்தையும், தேகஸ்புடத்தையும் கூட்டி வருகின்ற மொத்த
தொகை மிருத்தியூ ஸ்புடத்தை விட அதிகமாக இருப்பின் பூர்ண ஆயுள் ஏற்படும். குறைந்தால் அற்ப ஆயுள் - ஜீவன் – தேகம் – மிருத்தியு இந்த மூன்று ஸ்புடங்களையும்
ஒன்றாக கூட்டி வருகின்ற மொத்த ஸ்புட தொகைக்கு உரிய ராசியில் சனி கோச்சாரத்தில வரும்போது தன நாசம் ஏற்படும். இந்த ராசிக்கு 1, 5, 9 – ல், அல்லது ஸ்புட தொகைக்குரிய நவாம்ச ராசியில் சனி வரும்போது கண்டம் மாரகம் ஏற்படும்.
- சூரியனுடைய அஷ்டவர்கத்தில் சூரியன் இருக்கும் ராசியில்
எத்தனை பரல் உண்டோ அத்தனையாவது கெற்பமாக ஜாதகர்
ஜெனிப்பர். சூரியன் பலத்தை பொருத்து ஏற்றம் இறக்கம் செய்யவும். - ஜென்ம லக்கினத்திற்கு 1, 4, 7, 10 -ல் புதன் இருந்து சூரியனுக்கும்
சந்திரனுக்கும் 1, 4, 7, 10 – ல் செவ்வாய் இருப்பின் அவதாரயோகம் நல்ல நிலையில் வாழ்வர். - சுக்கிரன் கோபுரம்சத்திலும், குரு பர்வதாம்சத்திலும் இருந்து
சந்திரனும், பர்வதாம்சத்திலிருந்தாலும், ஹரிஹர பிரம்மயோகம், இது எவ்வித குறைவும் இன்றி ஆரோக்கியத்துடன் தர்மவான் என பெயர் கிட்டும்.
9. மாளவியாயோகம், குரு, சனி சேர்க்கை இருப்பினும்,பார்வை
இருப்பினும், சுக்கிரனுடன் கேது சேர்ந்தாலும் மாளவியாயோகம் கிட்டாது
- ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின்
லட்சுமி யோகம். - லக்கினத்தில் குரு, சக்கிரன் சேர்க்கை 3 – ல் செவ்வாய் – சனி
சேர்க்கை இருப்பின் லட்சுமி யோகம். 25 வயதுக்கு மேல் பாக்கியமும் 30 வயதுக்குமேல் அதிபாக்கிய யோகமும் ஏற்படும். - ஸ்திர ராசியில் பிறந்தவர்களுக்கு 2 – ல் பாவர் இருந்து
சந்திரனுக்கு 8, 12 – ல் பாவர் இருப்பின் யோக பங்கம் ஏற்படும். துக்கம்
ஏற்படும். - எந்தக் கிரகம் நீச்சஸ்தானத்தில் உள்ளதோ அந்த ஸ்தானாதி –
யாவது, அல்லது அந்த நீச்சஸ்தானத்தில் உச்சமடையும் கிரகமாவது
சந்திரனுக்க 1, 4, 7, 10 – ல் இருப்பின் நீச்ச பங்கம் ஏற்படும்.
ஜெனன லக்கினாதிபதிக்கு சுகஸ்தானத்தில் ஆட்சிக் கோள்களும், சந்திரன் இருந்த ராசிக்கு 3 – ம் வீட்டோன் உச்சம் பெற்று இருந்தால், 30 வயதிற்கு மேல் சகல விதமான செல்வங்களோடு சௌக்கியமாக இருப்பான்.
பாக்கியாதிபதி 3 – ம் இடத்திலிருக்க அவனை குரு பார்க்க உள்ள அமைப்பிற்கு சர்ப்பயோகம் என்று பெயர். இதன் பலன் 6 – வயது முதல் 9 வயது வரை பாக்கியத்தோடு இருப்பான்.
5 – ம் வீட்டோன் 3, அல்லது 11 – ம் வீட்டிலிருக்க எங்கேனும் குருவோடு புதன் கூடியிருக்க சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெற சந்திரன் 9 – லிருக்க கந்தவர்வ யோகம் என்று பெயர். இதன் பலன் 6 – வயதிலிருந்த 14 – யோகத்தோடு இருப்பான்
ஜெனன லக்னாதிபதி எவர் அங்கீசம் பெற்றாரோ அந்த அங்கீசாதிபதி 9 – ஆம் வீட்டிலிருக்க 9 – ஆம் வீட்டோன் உச்சம் பெற்றிருக்க உள்ள அமைப்பிற்கு ம்ருக யோகம் என்று பெயர். இதன் பலன் 7 – வயது முதல் 16 வயது வரை யோகத்தோடு இருப்பான்.
12 – ஆம் வீட்டதிபதி 12 – ம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்க 8 – ஆம் வீட்டோன் 4 – லிருக்க அல்லது 12 – ம் வீட்டிலிருக்க அவனை 9 – ஆம் வீட்டதிபதி பார்க்க இதற்கும் ம்ருக யோகம் என்றே சொல்லுவர். இதன் பலன் 40 வயது முதல் 72 – வயது வரை யோகத்தோடு இருப்பான்
- லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும். லக்கினாதிபதியால் கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது..
- 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்
லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும்
பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது..
3. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால்
3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள் முழுமையாக இல்லாமல் போகலாம்.
- அப்படி கிடைத்தாலும் அதை அனுபவிக்க முடியாமல்போகும்.
- இதே போல் 12 பாவத்திற்குரியவர் அமைப்பும் பார்த்து பலன்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்,.
- லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில்
லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய
பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்..
- 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில்
லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால்
கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும்
அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்..
- 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில்
லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால்
கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும்
அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்..
- இதே போல் 12 பாவத்திற்குரியவர்களின் பலனையும் பார்த்து
நிர்ணயம் செய்து கொள்ளலாம்..
- நட்சத்திரங்களின் எதிரிடை, சாதக நிலைகளை அந்தந்த பாதரீதியாக
பார்ப்பது சூட்சம நிலையாகும்
அப்படி பாத ரீதியாக நட்சத்திர எதிரிடை, சாதக நிலை அமைந்து விட்டால்
சொல்லும் பலன்களில் தவறு வருவதற்கில்லை..
லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தம் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்..
- இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமானஅனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும். இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக செயல்பட்டு நல்ல பலன்களை அதன் தசாபுத்தி காலங்களில் தரும்..
- நட்சத்திரங்களின் எதிரிடை — சாதக தன்மைகளை நட்சத்திரத்திற்குநட்சத்திரம் பார்ப்பது சூட்சும நிலை.
பாதரீதியாக பார்ப்பது அதி சூட்சும நிலை இவ்வகை நிலைகளைப் பொறுத்தே கோள்களின் சூட்சமவிளையாட்டுக்கள் ஏற்படுகிறது..
- எந்த ஒரு பாவாதிபதியானாலும் அந்த பாவாதிபதி பெற்ற
நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் எந்த ஒரு பாவத்தின் அதிபதி
நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி எதிரிடையாக செயல்படுவார்..
5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையானநட்சத்திரத்தில்
9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு எதிரிடையான செயல்கள்
இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது.
இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்..
- எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையானநட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக
- ஜாதக செயல்படுவார்.. உதாரணமாக சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம்.அல்லது லக்கினாதிபதி இருந்தால் ஜாதகர் தந்தைக்கு எதிராக செயல்படுவார். தந்தை மீது பற்றில்லாதவராக தந்தை மகன் மீது பற்று இல்லாதவராக அரசாங்கத்திற்கு விரோதமாக, அரசாங்க ஆதரவு இல்லாதவராக இருப்பார். ஆக சூரியனுக்கு உரிய காரக பலன்கள் இல்லாமல் இருக்கும்.
ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..
1. ஒருவரின் பிறந்த கிழமைக்குரியவர்,
2. நட்சத்திரத்திற்குரியவர்,
3. ராசிக்குரியவர்,
4. லக்கினத்திற்கு உரியவர்,
லக்கினம் நின்ற நட்சத்திரத்திற்கு உரியவர்களாக எந்த கிரகங்கள் வருகிறதோ
அந்த கிரகத்தின் நட்சத்திரத்திலோ, ராசியிலோ, அந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் உள்ள ராசியிலோ, அந்த கிரகம் உள்ள ராசியிலோ அல்லது அக்கிரகம் பார்த்த ராசிகளிலோ எந்த பாவாதிபதி உள்ளாரோ அப்பாவாதிபதிகளின் இயக்கமே ஜாதகருக்கு மேலோங்கி இருக்கும்..