சூரியன் சுற்றி வரும் தனது நீள்வட்டப்பாதையின் அளவு 360 டிகிரி . இதனை 12 இராசிகளுக்கும் சேர்த்து 30 டிகிரி அளவாக எடுக்கப்பட்டுள்ளது.

12 ராசிகள் : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியனவாகும். 

 நட்சத்திரங்கள் மொத்தம் 27. அவை அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருஓணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியன்.

ஒரு நட்சத்திரத்தின் அளவு = 13 டிகிரி 20 கலை ஆகும். 

ஒரு நட்சத்திரம் 4 பாதங்களைக் கொண்டது. ஒரு பாதத்தின் அளவு 03.20 டிகிரி ஆகும். அதாவது 3 டிகிரி 20 கலை ஆகும்.

ஒரு ராசிக்கு 9 நட்சத்திர பாதங்களாகும். 12 ராசிக்கு 27 நட்சத்திரங்களின் 108 பாதங்களைக் கொண்டிருக்கின்றன.

இராசியின் உட்பிரிவுகளாக ஹோரா, திரேக்கானம், சதுர்த்தாம்சம், பஞ்சாம்சம், சப்தமாம்சம், அஷ்டமாம்சம், நவாம்சம், தசாம்சம், ஏகதசாம்சம், துவாதசாம்சம், இன்னும் விரிவாக நுட்பமாக பிரித்து உள்ளனர். ராசியின் விரிவாக்கமே இந்த அம்ச கட்டங்களாகும்.

பொதுவாக ஜாதக கட்டம் ஜெனன ஜாதக நிலை Divisional Chart [ D1 ] மற்றும் நவாம்சம் என்ற இரு கட்டங்களை வரைந்திருப்பர்.

நவாம்சம் – திருமண வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுவது ஆகும்.

இராசி மண்டலம், மேஷ மண்டலம், சிம்ம மண்டலம், தனுசு மண்டலம் என 3 மண்டலங்களைக் கொண்டது. 

நவாம்சத்தில்: 

ஒரு நட்சத்திரம் தனது 4 பாதங்களில் ஒவ்வொரு பாதமும் ஒரு வீட்டில் அடுத்தடுத்த வீட்டில் கொண்டிருக்கும். 

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரம். தனது 4 பாதங்களில் 1ம் பாதம் மேஷத்திலும் , 2ம் பாதம் ரிஷபத்திலும், 3ம் பாதம் மிதுனத்திலும், 4ம் பாதம் கடகத்திலும் கொண்டிருக்கும்.

மேஷமண்டலம் :  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் – கேது, குரு, சந்திரன் ஆகிய 3 கிரகங்களின் நட்சத்திர பாதங்கள் வியாபித்திருக்கும். 

கேதுவின் நட்சத்திரங்கள்: அஸ்வினி, மகம், மூலம்

சந்திரனின் நட்சத்திரங்கள்: ரோகிணி, அஸ்தம், திருஓணம்.

குருவின் நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.

சிம்ம மண்டலம்: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம். இவற்றில் செவ்வாய், சுக்கிரன், மற்றும் சனி கிரகத்தின்  நட்சத்திரங்கள் வியாபித்திருக்கும். 

செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் 

சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம்

சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், பூரட்டாதி ஆகியன.

தனுசு மண்டலம்: தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியன.

இவற்றில் சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

இராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம்

புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியன ஆகும்.

ராசிகள் பஞ்ச பூத தத்துவத்தின் அடிப்படையில் நெருப்புத் தத்துவம், நிலத் தத்துவம், காற்றுத் தத்துவம், நீர் தத்துவம் என 4 தத்துவத்திலும் ஆகாய தத்துவத்திற்கு ராசி ஒதுக்கப்பட வில்லை என அறிய வேண்டும்.

 

நெருப்பு தத்துவம் – மேஷம், சிம்மம், தனுசு

நில தத்துவம் – ரிஷபம், கன்னி, மகரம்

காற்று தத்துவம் – மிதுனம், துலாம், கும்பம்

 நீர் தத்துவம் – கடகம், விருச்சிகம், மீனம்.

 

நெருப்பு தத்துவத்தில் மேஷம் – காட்டில் எரியும் நெருப்பு தீப்பந்தம் போன்றது. சிம்மம் – வீட்டில் எரியும் விளக்கு போன்றது.

தனுசு – ஆலயத்தில் எரியும் விளக்கு போன்றது. நெருப்பின் தன்மைகள் மாறிக் கொண்டிருக்கும். 

 

 நில தத்துவம் – மண் தத்துவம் – ரிஷபம் – விவசாய பூமி. கன்னி – வானம் பார்த்த விவசாய பூமி, மகரம் – சேறும் நிலமும் [ நீரும் நிலமும் கலந்த களிமண் கலந்த ] பூமியாகும்.

 

காற்று தத்துவம் – மிதுனம் – தென்றல் காற்று. துலாம் – சூரைக் காற்று. கும்பம் – புயல் காற்று.

 

நீர் தத்துவம் – கடகம் – ஆறு, ஓடையைக் குறிப்பன. விருச்சிகம் – நிலையான இடத்தில் இருக்கும் நீர்-கிணறு, குட்டை, குளம் மற்றும், வாய்க்காலில் ஓடிக் கொண்டிருக்கும்  நீர். மீனம் – கடல் நீர்.

இவ்வாறு நான்கு தத்துவங்களின் அடிப்படையில் பிரிக்கப் பட்டாலும், ஒரு ராசியானது 4 தத்துவங்களையும் கொண்டது. ஒரு நட்சத்திரத்தின் 4 பாதங்களும் இந்த 4  தத்துவங்களைக் கொண்டுள்ளன. 

உதாரணமாக அஸ்வினி 1ம் பாதம் – நெருப்பு. 2ம் பாதம் – நிலம் 3ம் பாதம் – காற்று 4ம் பாதம் – நீர் தத்துவம். 

இந்த தத்துவங்களைக் கொண்டு ஒரு மனிதனின் குணாதிசியம், செயல்பாடுகள் எப்படி இருக்கும் என சொல்லலாம். 

 நெருப்பு – வேகமான பரவக்கூடியது. ஒன்று இருந்தால் தான் பற்றக் கூடியது. ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடம் என பரவக் கூடியது. நகரக் கூடியது. இதை குணாதிசயமாக எடுத்துக் கொண்டால் நெருப்பு ராசியினர் செயல் பாடுகள் வேகமானது. கோபம் இருக்கும். அடுத்தவர் துணையுடன் செயல்படும் போது இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள். தொழிலுக்காக (அ) செய்யும் வேலைக்காக ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் கோபம் அடைந்தாலும் சமாதானமாவார்கள். ஆனால் மனதினில் கோபத்தை வைத்திருந்து பழி வாங்கவும் செய்வார்கள்.

இவ்வாறே ஒவ்வொரு தத்துவத்தின் அடிப்படையில் மனிதர்களின் குணாதிசயங்கள் அமையும். அமைந்திருக்கும்.

ராசிகள் – சரம், ஸ்திரம், உபயம் என 3 தன்மை கொண்டது. 

சரம் – மேஷம், கடகம், துலாம், மகரம்

ஸ்திரம் – ரிஷபம், சிம்மம்., விருச்சிகம், கும்பம்

உபயம்- மிதுனம், கன்னி, தனுசு,மீனம்.

 

சரம் என்பது நகரக் கூடியது. ஸ்திரம் – நிலையானது. உபயம் – இந்த இரு தன்மைகளையும் நகரவும் செய்யும். நிலையாகவும் இருக்கும். இரட்டை தன்மை கொண்டது. 

 

ஒருவர் பிறக்கும் போது லக்னப்புள்ளி நிற்கும் நட்சத்திரம் மற்றும் ராசி, சந்திரன் நிற்கும் நட்சத்திரம் இவற்றின் தன்மைக்கேற்ப ஒருவரது ஆளுமைத் திறன், செயல்பாடுகள் குணாதிசயம் மேற்குறிப்பிட்ட தத்துவம் மற்றும் அதன் உட்பிரிவிற்கேற்ப இருக்கும் என்பதனை எளிமையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

சூரியன் என்பது உயிர்கிரகம் என்றும் ஆத்ம காரகன் என்றும், சந்திரன் – உடல் கிரகம் என்றும் திரேக காரகன் என்றும் குறிப்பிடப்படும். 

 

உயிர் என்ற சூரியனும், உடல் என்ற சந்திரனும், எண்ணம் என்ற லக்னமும் செயல் என்ற தசம லக்னமும் சேர்ந்து தான் ஒரு சம்பவத்தை நிர்ணயக்கின்றன. செயல்படுகின்றன. இதுவே வாழ்வியல் முறையாக உள்ளது. 

 

தினம் நாம் செய்யும் செயல்களையும் காலத்தோடு இணைத்துப் பார்த்தால் கிரகத்தின் செயல்பாடுகளையும் நட்சத்திரத்தின் செயல்பாடுகளையும் கொண்டதாகவே நமது செயல்கள் இருக்கும் என்பதனை உணர வேண்டும்.

[ லக்னம் – எண்ணம். சந்திரன் – இடம், சூரியன் – காலம் ]

உடல் காரகன் [ திரேக காரகன் ] சந்திரன் – உடல் இருந்தால் தான் உணர்வுகள் செயலாக்கம் நடக்கும். வெறும் உயிருக்கு செயலாக்கம் இல்லை. இந்த சரீரத்தின் [ உடலின் ] உணர்வுகளுக்கும் பஞ்ச பூத சூழ் நிலைகளுக்கும் ஏற்ப 5 வித குணங்கள் – அரசாட்சி செய்தல் அல்லது செயல்படுதல், ஆகாரம் உண்ணுதல், நடைத்தனமையில் சலனம் [ இயங்குதல்], தூங்கும் நிலை – மற்றும் செயல் அற்ற தன்மையில் ஜடப் பொருளாக இருத்தல் , மேலும் பேசும் தன்மை ஆகிய பஞ்ச பூத செயல்பாடுகள் அமைகின்றன.

 

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் இவற்றையே அரசு, ஊண், நடை, துயில், மரணம் எனும் ஐந்து நிலைப் பாட்டை குறிப்பிடுகின்றனர். ஒருவரின் செயல்பாடு அவரின் நட்சத்திர செயல்பாட்டையே பிரதிபலிக்கின்றது. 

 

இந்த அடிப்படைத் தன்மைகளையே கிரக காரகத்துவம், நட்சத்திர காரகத்துவம்.. பாவக காரகத்துவம் என்று வகைப் படுத்தி அனைத்தையும் கொடுத்து சென்றுள்ளனர் நமது ஆன்றோர்கள். 

 

இனி வரும் பாடங்களில் அடிப்படைகள் அனைத்தையும் வரிசைப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும்படியாகவே பாடங்கள் இருக்கும்.