கட்டண திரும்பப்பெறல் & ரத்து கொள்கை (Refund & Cancellation Policy)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2 அக்டோபர் 2026

1. பொது விதி

Atchaya’s Astrology Learning (atchayakrishna.com) வழங்கும் கோர்ஸ்கள் டிஜிட்டல் கல்வி உள்ளடக்கம் ஆகும். கோர்ஸ் கட்டணம் நிர்வாக மற்றும் உள்ளடக்கத் தயாரிப்புச் செலவுகளுக்காகப் பெறப்படுவதால், செலுத்தப்பட்ட கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படுவதில்லை.

2. பகுதி Refund (நிபந்தனையுடன்)

கோர்சில் சேர்ந்த 24 மணி நேரத்திற்குள், தகுந்த காரணத்துடன் Refund கோரிக்கையை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் மட்டுமே அது பரிசீலிக்கப்படும்.

ஒப்புக்கொள்ளப்பட்ட Refund கோரிக்கைகளுக்கு, செலுத்திய மொத்தத் தொகையில் 25% நிர்வாகக் கட்டணமாகக் கழிக்கப்பட்டு, மீதமுள்ள 75% மட்டும் திருப்பி வழங்கப்படும்.

கோர்சில் சேர்ந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் எந்த Refund கோரிக்கையும் நிராகரிக்கப்படும்.

3. Refund கோருவது எப்படி

உங்கள் கோரிக்கையை atchaya@atchayakrishna.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். மின்னஞ்சலில் பின்வருவன இருக்க வேண்டும்:

  • கோர்ஸ் வாங்கும்போது பயன்படுத்திய பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி
  • Order எண் அல்லது Razorpay Payment ID
  • Refund கோருவதற்கான காரணம்

4. Refund செலுத்தப்படும் முறை

ஒப்புக்கொள்ளப்பட்ட Refund, நீங்கள் கட்டணம் செலுத்திய அதே Payment முறையில் (Razorpay மூலம்) 7–10 வேலை நாட்களுக்குள் திருப்பி அனுப்பப்படும். வங்கி அல்லது Payment நிறுவனத்தின் செயல்முறையைப் பொறுத்து கூடுதல் நேரம் ஆகலாம்.

Refund ஒப்புக்கொள்ளப்பட்டால், அந்த கோர்சுக்கான உங்கள் அணுகல் நீக்கப்படும்.

5. ரத்து செய்தல்

கோர்ஸ் அணுகல் வழங்கப்பட்ட பிறகு அதை ரத்து செய்ய இயலாது. தவறுதலாக இரு முறை கட்டணம் செலுத்தப்பட்டிருந்தால் (Duplicate Payment) அல்லது தொழில்நுட்பக் கோளாறால் கோர்ஸ் அணுகல் கிடைக்கவில்லை என்றால், மேற்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். அத்தகைய தருணங்களில் உண்மை நிலை சரிபார்க்கப்பட்டு தீர்வு வழங்கப்படும்.

6. தொடர்புக்கு

இந்தக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு atchaya@atchayakrishna.com முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.