அடிப்படை ஜோதிடம் Basic Astrology

About Course
இறை வணக்கம்
ஓம்! ஓம்! ஓம்!
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
நம்மை எல்லாம் வாழவைக்கும் இறை அருளுக்கும், ஜோதிடத்தை கற்றுத் தந்த குருமார்களுக்கும் நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையர்களுக்கும் நன்றியும் வணக்கமும் கூறி இனிமை, எளிமையான அற்புத ஜோதிடக்கல்வியை பயில ஆரம்பிப்போம்!
ஜோதிடம் ஒரு அற்புதம்! மஹா எளிமை ! இனிமை ! என்பதனை கற்றுணர்ந்த பின் உணர்வீர்கள் என்பதில் ஐயமில்லை!
முன்னுரை:
ஜோதிடம் என்பது வான செயல்பாடுகளுக்கும், பூமிக்குரிய நிகழ்வுகளுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய ஆய்வு.
“The Essential Guide to Practical Astrology: Everything from Zodiac Signs to Prediction, Made Easy and Entertaining” – April Eliat Kent.[ Epral eliyad keNd]
ஜோதிடத்தைப் பயிற்சி செய்பவர்கள் ஜோதிடர்கள் என்றழைக்கப் படுகின்றனர்.
ஜோதிடம் – Jyorish = [இஷ்: தெய்வீக] ஜோதி – ஒளி] – தெய்வீக ஒளி.
பண்டைய காலத்தில் தமது நுண் அறிவைக் கொண்டு வானியல் பற்றிய – வானில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், சூரியன், சந்திரன் – ஒளி பிரதிபலிப்பின் விளைவாக ஏற்படும் மாற்றங்கள் அவ்வற்றின் விளைவுகள் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பிரதிபலிக்கின்றது. இதனைப் பற்றிய அறிவை ஜோதிடம் தெரிவிக்கின்றது.
ஜோதிடத்தை மூன்று பிரிவாக சொல்வார்கள். 1. கணித ஸ்கந்தம் 2. ஜாதக ஸ்கந்தம் 3. ஸம்ஹிதாஸ்கந்தம் .
1. கணித ஸ்கந்தம்: இது சித்தாந்தம், தந்திரம் மற்றும் கரணம் எனும் 3 பிரிவுகளைக் கொண்டது.இவைகள் – சிருஷ்டி, யுகம் மற்றும் இஷ்டசக ஆண்டுகள் முதலாகக் கொண்டு கணிதங்கள் இயற்றப்பட்டன.
2. ஜாதக ஸ்கந்தம்: ஹோரை, தாஜிகம் எனும் இரு பிரிவுகளைக் கொண்டது.
ஹோரை என்பது ஜாதகன் பிறந்த காலத்தில் நேரத்தில் வானில் காணப்பட்ட கோள்களின் அமைப்பைக் கொண்டு பலன்களைக் கூறப் பயன்படுவது ஹோரை ஆகும்.
தாஜிகம் என்பது ஒருவருடத்தில் கோட்சாரத்தில் காணப்படும் கிரக அமைவுகளைக் கொண்டு, ஜாதகனின் சோதனைக் காலத்தில் பலன்கூறப் பயன்படுவது தாஜிகமாகும்.
3. ஸ்ம்ஹிதாஸ்கந்தம்
முகூர்த்தம், வாஸ்து, வருஷபணி மற்றும் ஆருடம் எனும் 4 பிரிவுகளைக் கொண்டது.
தினந்தோறும் செய்ய வேண்டிய கடமைகளுக்கும், விசேஷமாக செய்ய வேண்டிய செயல்களுக்கும் நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்கும் வழியைக் காட்டுவது முகூர்த்தமாகும்.
கோயில்கள், அரண்மனை, வீடுகள், சத்திரம் [ ஹோட்டல் ] பிற பெரிய கட்டிடங்கள் கட்டிடவும், குளம், கிணறு தோண்ட நல்ல நேரம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க வழிகாட்டுவது வாஸ்து எனப்படும்.
பூமியில் நிகழும் நன்மை தீமைகளை இயற்கையின் பிரதிபலிப்புகளை வானிலை முன்னறிவிப்பைத் தருவது வருஷப் பணி ஆகும்.
ஆருடம் என்பது ஒருவர் தனது மனதில் ஒரு செயலை நினைத்துக் கொண்டு வந்து, தான் நினைத்த காரியம் நிறைவேறிடுமா ? என்ற ஐயத்தோடு வருபவர்களுக்கு அன்றைய நாளின் கோள்சாரத்தைக் கொண்டும் நட்சத்திர அமைவைக் கொண்டும் தாம்பூலம், சோழி, சகுனம், நிமித்தம், பஞ்சபட்சி, ஜாமக் கோள் இவற்றில் எதாவது ஒரு முறையை பின்பற்றி பலன் அறிந்து சொல்லும் முறையாகும்.
ஜாதகம்:
ஜாதகம் என்பதன் பொருள்- ஜா என்றால் பிறப்பு. தக் என்றால் ஏடு என்று அர்த்தம். ஆக ஜாதக் என்பதை ஜாதகம் எனக் கூறுகின்றோம். ஒருவர் பிறந்த நேரத்திற்கான பிறப்பேடு என்று அர்த்தம்.
வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை ஒரு வரைபடமாக அமைத்து காட்டப்படும் குறிப்பேடு ஆகும்.
ஒரு ராசி 9 நட்சத்திர பாதங்கள் கொண்டது. ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் எந்த நட்சத்திர பாதத்தில் குழந்தை பிறந்துள்ளது என்பதக் காண்பிக்கும் வரைபடமே ராசிச் சக்கரமாகும்.
இராசிமண்டலம்: 12 ராசிகள் கொண்டது இராசி மண்டலம். 12 கட்டங்கள் அமைத்து ஒவ்வொரு கிரக அமைவையும் அதாவது கிரக சஞ்சார நிலையை ஒரு குறிப்பிட்ட ராசியில் ஒரு குறிப்பிட்ட கிரகம் இருக்கின்றது என அமைத்து காட்டப்படுவதாகும்.
சந்திரன் எந்த ராசிக் கட்டத்தில் சஞ்சரிக்கின்றாரோ அதுவே அவரது ஜெனன ராசியாக கருதப்படுகின்றது. இதனை ஜென்ம ராசி என்றும் சொல்வர்.
இந்த ஜாதக கட்டம் அமைக்க பஞ்சாங்கம் அவசியமாகும்.
பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்கள் : 1. வாரம் [ கிழமை ] 2. நட்சத்திரம். 3. திதி 4. யோகம். 5. கரணம் .
வாரம்: ஞாயிறு [ சூரியன் ], திங்கள் [ சந்திரன்], செவ்வாய் [ செவ்வாய்], புதன் [ புதன்], வியாழன் [ குரு ], வெள்ளி [ சுக்கிரன் ], சனி [ சனி ] என்று 7 கிரகங்களின் நாமங்களையே [ பெயர்களையே ] கொடுத்துள்ளனர். இவற்றில் நிழல் கிரகங்கள் (அ) சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகு கேது விற்கு நாட்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ராகுவிற்க்கு ஒன்றரை மணி நேரம் [ ராகு காலம் என்றும் ] கேதுவிற்கு ஒன்றரை மணி நேரம் [ எம கண்ட நேரம் ] என்றும் கொடுத்துள்ளனர்.
2. நட்சத்திரம்:
மொத்தம் 28 நட்சத்திரங்கள். பின்னர் ஒரு நட்சத்திரம் குறைத்து 27 நட்சத்திரங்களாக குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம்.
மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை.
மூலம், பூராடம், உத்திராடம், அபிஜித் – உத்திராடத்தின் பின்னிரு பாதங்களும் அடுத்துவரும் திருஓணத்தில் முதல் பாதமும் கொண்டது. இந்த அபிஜித் தவிர்த்துவிட்டனர். உத்திராடம் அடுத்து திருஓணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
ஆகிய 27 நட்சத்திரங்களாகும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் அபிஜித் நேரமாக – அனைத்து சுப செயல்களுக்கும் உகந்த நேரமாக – காலை 11.40 மணிமுதல் 12.20 வரை குறிப்பிடுவர்.
3. திதிகள் : பிரதமை, துவிதி, திருதி, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகும். அமாவாசை முதல் வரும் திதிகள் வளர்பிறை என்றும்.பௌர்ணமி முதல் வரும் திதிகள் தேய்பிறை என்றும் சொல்வர்.
4. யோகம் : 27 நாம யோகங்கள்.
விஷ்கம்பம், பிரிதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம்.
கண்டம், விருத்தி, துருவம், வியாகதம், ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வியதிபாதம், வரியான்.
பரிகம், சிவம், சித்தம், சாத்யம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம், வைதிருதி ஆகியனவாம்.
யோகம் என்பது சேர்க்கை எனும் பொருள் . வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சேர்ந்து நகர்ந்து செல்லுகின்ற தூரம் தான் யோகம் எனக் கூறப்படும்.
5. கரணம்:
கரணம் என்பது திதியில் பாதி ஆகும். பவம், பாலவம், கௌலவம். தைதுலை, கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய 11 கரணங்களாகும்.
நாம் வாழும் பூமியைச் சுற்றி 160 கி.மீ. உயரத்திற்கு மேல் வாயு உள்ளது. வாயு துவக்கத்திற்கு மேலே விண்வெளி துவங்குகிறது.
பிரபஞ்சங்கள், பால் வழி மண்டலங்கள், விண்மீன்கள் [ நட்சத்திரம் ], சூரிய குடும்பம் அனைத்தையும் அடக்கியதே விண்வெளி ஆகும்.
இதனை அளவிடுவதற்கு ஒளி ஆண்டு மற்றும் வானவியல் அலகு [ Light Year & Astronomical Unit ] பயன்படுத்தப் படுகிறது.
சூரிய குடும்பமாக இந்த ஒன்பது கிரகங்களை குறிப்பிடுவர். [ சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகியன ]
சூரியனின் சுழற்சிப்பாதையை [ நீள்வட்டப்பாதையில் சுழன்று வருகின்றது ] இராசி மண்டலம் – 12 ராசிகளாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவை 360 டிகிரி அளவில் உள்ளதாக கருதப்படுகிறது. ஒரு ராசி 30 டிகிரி கொண்டது.
சூரியனின் பயணிக்கும் சஞ்சாரத்தைக் கொண்டு, உத்திராயணம், தட்சிணாயனம் என இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர்.
உத்திராயணம் என்பது 12 மாதங்களில் ஆறு தமிழ் மாத காலமாகும். அவை தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகியனவாகும்.
தட்சிணாயனம் என்பது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களும் தட்சிணாயன காலமாகும்.
இராசி மண்டலத்தின் 12 ராசிகளின் பெயர்கள்:
1. மேஷம். 2. ரிஷபம் 3. மிதுனம். 4. கடகம் 5. சிம்மம். 6. கன்னி 7. துலாம். 8. விருச்சிகம். 9. தனுசு. 10. மகரம். 11. கும்பம். 12. மீனம்.
இந்த 12 ராசிகளில் சூரியனுக்கு சிம்மம் என்ற ஒரு வீடும், சந்திரனுக்கு கடகம் என்ற ஒரு வீடும், செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகம் என இரு வீடுகளும், சுக்கிரனுக்கு ரிஷபம் மற்றும் துலாம் என இரு வீடுகள். புதனுக்கு மிதுனம், கன்னி என இரு வீடுகள். குருவிற்கு தனுசு மற்றும் மீனம் என இரு வீடுகள். சனி பகவானுக்கு மகரம், கும்பம் என இரு வீடுகள். ஆக 12 ராசிகளையும் 7 கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. இந்த 7 கிரகங்களும் உச்சம் பெரும் ராசிக்கு 7ம் ராசியில் நீச்சம் அடைகின்றன. அதே போல மூலத் திரிகோணம் பெரும் ராசியிலிருந்து 7ம் வீட்டில் நிஷ்பலம் [ பலமிழத்தல் ] பெறுகின்றன.
சூரியன் – மேஷத்தில் உச்சமும், சிம்மத்தில் மூலத்திரிகோணம் மற்றும் ஆட்சியும், துலாமில் நீச்சமும் அடைகிறது.
சந்திரன் – ரிஷபத்தில் உச்சமும், கடகம் மூலத்திரிகோண வீடாகவும், ஆட்சி வீடாகவும், விருச்சிகத்தில் நீச்சமும் பெறுகின்றது.
செவ்வாய் – மேஷத்தில் ஆட்சி மற்றும் மூலத்திரிகோணமும், கடகத்தில் நீச்சமும், தனது பகைகிரகமான சனியின் வீடான மகரத்தில் உச்சமும் பெறுகின்றது. மேஷத்தில் செவ்வாய் மூலத்திரிகோணம் பெறுவதால் செவ்வாய் துலாமில் நிஷ்பலம் (அ) பலமிழக்கிறது.
புதன் – மிதுனம் புதனின் ஆட்சி வீடாகும். இந்த மிதுன வீட்டில் எந்த கிரகமும் உச்சமும். நீச்சமும், மூலத்திரிகோணமும் பெறவில்லை. புதனின் மற்றொரு வீடான கன்னியில் புதன் உச்சம் மற்றும் மூலத்திரிகோணம் பெறுகின்றது. சுக்கிரன் கன்னியில் நீச்சம் அடைகின்றது.
குரு – தனுசு தனது ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடாகவும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீச்சமும் பெறுகின்றன. குருவின் தனுசு வீட்டில் எந்த கிரகமும் உச்சமோ நீச்சமோ பெறவில்லை. குருவின் மற்றொரு வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சமும், புதன் நீச்சமும் குரு ஆட்சியாகவும் பலம் பெற்றுள்ளனர்.
சுக்கிரன்: தனது வீடான துலாமில் சனிஉச்சம் பெறுகிறது. சூரியன் நீச்சம் பெறுகிறது. சுக்கிரன் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமும் பெறுகின்றன. சுக்கிரன் மேஷத்தில் நிஷ்பலம் அடைகிறது.
சனி பகவான்: தனது மகர வீட்டில் குரு நீச்சமும், செவ்வாய் உச்சமும், சனிபகவான் மகரத்தில் ஆட்சியும் பெறுகின்றன.
சனி பகவானது மற்றொரு வீடான கும்பத்தில் சனி பகவான் ஆட்சியும் மூலத்திரிகோணமும் பெறுகின்றார். இங்கு சூரியன் நிஷ்பலம் [ பலம் இழக்கின்றார் ] பெறுகின்றார்.
ஒவ்வொரு கிரகமும் நட்பு, பக, சமம் என்ற 3 நிலைகளைக் கொண்டு தாம் இருக்கும் இடத்திற்கேற்ப பலனளிக்கின்றன.
இனி விரிவாக அடுத்து வரும் பாடங்களில் 1. இராசிமண்டலம் 2. பஞ்சாங்கம். பற்றி பார்ப்போம்.
Course Content
பாடம்: 1. இராசி மண்டலமும் பாவகமும்
பஞ்ச பட்சி தத்துவமும் பஞ்சபூத தத்துவமும்:
கிரகங்கள் – சில முக்கிய குறிப்புகள்
ஷட்பலம்
ஓரை
கால சர்ப்ப தோஷம் & அபகால சர்ப்ப தோஷம்
2. பஞ்சாங்கம்
Earn a certificate
Add this certificate to your resume to demonstrate your skills & increase your chances of getting noticed.

