lat: 13.0827, lng: 80.2707
கணக்கிடுகிறது…
தாராபலன் என்றால் என்ன?
தாரை என்பது சந்திரன் பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நட்சத்திரத்தை குறிக்கும். ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றாரோ அந்த நட்சத்திரமே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும் — இது என்றும் மாறாது. மனோகாரகனான சந்திரன் தினம்தினம் வெவ்வேறு நட்சத்திரங்களில் பயணம் செய்துகொண்டே இருப்பார். ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும்போது வரும் எண்ணை 9-ஆல் வகுத்து மீதியை கொண்டு தாரா பலனை காண வேண்டும்.
தாரைகளின் பெயர்களும், பலன்களும்
1.ஜென்ம தாரை(அதிபதி: சூரியன்)
அசுபம்மனக்குழப்பம் மற்றும் பதற்றத்தை தரும்.
2.சம்பத்து தாரை(அதிபதி: புதன்)
சுபம்பொருள்வரவு, காரிய சித்தி, சுபகாரியம் தொடர்பான செயல்களை மேற்கொள்ளலாம்.
3.விபத்து தாரை(அதிபதி: ராகு)
அசுபம்கோபத்தால் காரிய இழப்பு, வாய்ப்புகள் தவறுதல் போன்றவை உண்டாகும்.
4.க்ஷேமத் தாரை(அதிபதி: குரு)
சுபம்ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான நாள்.
5.பிரத்யக் தாரை(அதிபதி: கேது)
அசுபம்சிக்கல்கள், கவனச்சிதறல், வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும்.
6.சாதகத் தாரை(அதிபதி: சந்திரன்)
சுபம்எண்ணம் ஈடேறுதல், முயற்சிகள் பலிதமாகுதல் மற்றும் செயல்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
7.வத (நைதன) தாரை(அதிபதி: சனி)
அசுபம்உடலில் சோர்வு, மனதில் இனம் புரியாத கவலைகள், பணிகளில் நாட்டமில்லாமல் இருப்பது போன்றவை உண்டாகும்.
8.மைத்ர தாரை(அதிபதி: சுக்கிரன்)
சுபம்தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் செய்யலாம்.
9.பரம மைத்ர தாரை(அதிபதி: செவ்வாய்)
சுபம்அனைத்து சுபச்செயல்களுக்கும் உகந்தது.
கணக்கிடுகிறது…
