தசாம்சம் சக்கரம் அமைக்கும் முறை:
ஓரு ராசியின் 30 பாகையை (டிகிரியை) பத்து சம பாகங்களாகப் பிரிக்கப்படுவது தசாம்சம் எனப்படும். ஒரு பிரிவிற்கு 3 பாகை (டிகிரி) வரும்.
ஆண் ராசிகள் [ மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியன] பெண் ராசிகள் [ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியன]
1. 00 = 03 டிகிரி | 2. 03-06 டிகிரி | 3, 06 -09 டிகிரி | 4. 09 – 12 டிகிரி | 5. 12 – 15 டிகிரி |
6. 15-18 டிகிரி | 7. 18 – 21 டிகிரி | 8. 21 – 24 டிகிரி | 9. 24 – 27 டிகிரி | 10. 27 – 30 டிகிரி |
ராசிக் கட்டத்தில் லக்னம் அல்லது கிரகம் ஆண் ராசி எனில் தசாம்சத்தில் அந்த ராசியிலிருந்தே துவங்கி வரிசையாக பத்தாவது ராசியில் முடியும்.
ராசிக் கட்டத்தில் லக்னம் அல்லது கிரகம் பெண் ராசி எனில் தசாம்சத்தில் ஒன்பதாம் ராசியில் இருந்து துவங்கி வரிசையாக 10ம் ராசியில் முடியும்..
உ-ம். சூரியன் சிம்மத்தில் 4.57.18 டிகிரி எனில், [ தசாம்சத்தில் 3-6 டிகிரி 2-ம் வீட்டில் வருவதால் கன்னியில் போட வேண்டும். இவ்வாறே,
லக்னம் 27.57 | சுக் 5.24 | செவ 5.51 சூரி 16.41 | புதன் 6.14 |
சனி 4.52 |
| கேது20.38 | |
ராகு 20.38 |
| ||
சந்திரன் 28.13 |
|
| குரு 20.19 |
லக்னம் , பெண் ராசி என்பதால், அதிலிருந்து ஒன்பதாம் ராசியான விருச்சிகத்திலிருந்து எண்ண வேண்டும். 10ம் ராசி சிம்மத்தில் லக்னம் அமையும். சுக்கிரன் மேஷத்தில் – அது தசாம்சத்தில் ரிஷபத்தில் அமையும். [ மேஷம் 3 டிகிரி வரை. ரிஷபம் 3-6 டிகிரி வரை என்பதால் ].இவ்வாறு கிரகங்கள் அமைக்க தசாம்ச சக்கரம் அமையும் விதம்
சனி ராகு |
| சுக்கிரன் | சூரியன் |
செவ்வாய் | தசாம்சம் |
| |
| லக்னம் புதன் | ||
| குரு |
| கேது சந்திரன் |
தசாம்ச சக்கரம் ஜாதரின் கௌரவம், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறுதல், அந்தஸ்து, செல்வ வளம், வெற்றி பெறுதல், பேரும் புகழும் பெறுதல், வேலை மற்றும் தொழில் பற்றி அறியலாம்.
பொதுவாக ஜோதிடத்தில் பத்தாம் பாவம் – தசம கேந்திரம், வான் – உச்சி வீடு என்ற பெருமையுடன் அழைக்கப்படும்.
1. தசாம்ச லக்னத்திற்கு 2 – 11 ஆம் அதிபதிகள் இணைந்து இருந்தாலோ அல்லது சுப பார்வை பெற்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அவர் சொந்தத் தொழில் செய்யலாம்.
2. 2 – 11 ஆம் அதிபதிகள் ஆட்சி / உச்சம் பெற்றிருந்தால் சொந்தத் தொழில் சிறக்கும்.
3. ஏழாம் பத்தாம் அதிபதிகள் சம்பந்தம் பெற்றால் கூட்டுத் தொழில் லாபம் தரும்.
4. புதன் ஏழு அல்லது பத்தில் பலம் பெற்றால் கூட்டுத் தொழில் சிறப்பாக விளங்கும்.
5. லக்னத்திற்கு 4-ஆம் அதிபதியுடன் செவ்வாய் தொடர்பு பெறுமானால் ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும்.
6. 2 – 7ம் அதிபதிகளுடன் புதன் சம்பந்தம் கூட்டுத் தொழிலைத் தரும்.
7. இரண்டாம் பாவத்தை புதன் பார்த்தாலும் தொழில் சிறப்பாக நடைபெறும்.
8. ராசியின் பத்தாம் அதிபதி தசாம்சத்தில் பனிரெண்டில் இருந்தால், அயல் நாட்டுத் தொடர்புடைய தொழிலான ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமையும்.
9.ராகு 11-ல் இருந்து அந்த வீடு சர ராசியாக இருந்து சுபர் பார்வையும் பெறுமானால், அயல் நாட்டுத் தொழிலால் லாபம் உண்டு.
10. 8 – 10ம் அதிபதிகள் தொடர்பு பெற்றால் கமிஷன் தொழிலைத் தரும்.
11. பத்தாம் பாவத்திற்கு சூரியன், செவ்வாய், சனி, புதன் சம்பந்தப்பட்டால் பொறியாளராக இருக்க வாய்ப்புண்டு.
12. தசாம்சத்தில் பத்தாம் அதிபதி பலமாக இருந்தால் வாழ்க்கைப் பாதையை எளிதில் கடந்து விடலாம்.
உத்தியோகத்திற்கான விதிகள்:
- தசாம்சத்திற்கு 2 -6ம் பாவம் ஒருவன் தன் ஊதியத்திற்காக வேலை / பணி செய்யும் நிலையைக் குறிக்கும்.
- தசாம்சத்தில் 2 – 6ம் அதிபதிகள் பத்தாம் பாவம் அல்லது பத்தாம் பாவ அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் அலுவலகத்தில் பணியாற்றும் நிலை.
- ஆறாம் அதிபதி 2 – 10ம் பாவங்களுக்கு சம்பந்தப்பட்டால் நிச்சயம் பணியாற்றும் நிலையைத் தரும்.
- தசாம்சத்தில் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதி சம்பந்தப்பட்டால் அயல் நாட்டில் பணி அமையும்.
- தசாம்சத்தில் 2 -6 – 11ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுமானால் உயர்வான உத்தியோகம் பெறுவர்.
- தசாம்சத்தில் பத்தாம் அதிபதி + 12-ஆம் அதிபதி சம்பந்தம் அயல் நாட்டில் தொழில் பணி அமையும்.
தசாம்சத்தில் நன்மை தரும் தசா / புத்திகள்:
1. தசாம்சத்தில் – 1, 10 -ல் இருக்கும் கிரகங்களின் தசா புத்திகள் நன்மை தரும்.
2. 1 – 10ம் அதிபதிகள் / 1 – 10ம் பாவத்தை பார்க்கும் கிரகங்கள் அல்லது 1 – 10ம் அதிபதிகளைப் பார்க்கும் கிரகங்களின் தசா புத்திகளில் நன்மை தரும்.
ஐந்து – ஒன்பது -ல் இருக்கும் கிரகங்கள் அதன் தசா புத்தி அந்தரத்தில் நன்மை தரும்.
கேந்திரத்தில் இருக்கும் கிரகங்களின் தசா புத்திகள் மத்திம பலன் தரும்.
6 – 8 – 12 ல் இருக்கும் கிரகங்களின் தசா புத்தி நன்மை தருவதில்லை. ஆனால், மேற்கண்ட அமைப்பை பத்தாம் அதிபதி அல்லது குரு பார்க்கப்பட்டால் நன்மை தரும்.
தசாம்ச லக்னாதிபதி, தசாம்ச லக்னத்திற்கு 5 – 8 – 10 – 11 ம் அதிபதிகளுடன் தொடர்பு பெறுமானால், அவர்களின் தசா புத்தி அந்தர காலங்களில் நன்மை தரும்.
தசாம்ச லக்னாதி ஆட்சி / உச்சம் / மூலத் திரிகோணம் அடைந்தால் அதன் தசா புத்தி அந்தரத்தில் நன்மை தரும்.
தசாம்ச லக்னாதிபதி தசாம்சத்தில் 6 – 8 – 12 ல் இருந்தால் அதன் தசா புத்தி அந்தரத்தில் நன்மை தருவதில்லை.
ஒரு கிரகம் ராசியில் அஸ்தமனம் பெற்று, தசாம்சத்தில் பலம் பெற்று இருந்தாலும் அதன் தசா புத்தி நன்மை தருவதில்லை.
தசாம்சத்தில் நெருப்பு ராசியாக பத்தாம் பாவம் அமைந்து, அங்கு செவ்வாய் இருந்தால் காவல் துறை / ராணுவத்தில் பணியாற்றும் நிலை ஏற்படும்.
மூன்றாம் பாவத்தில் பாவிகள் இருந்து மூன்றாம் அதிபதி ராகு / கேது சம்பந்தப்பட்டால் இராணுவத்தில் மேஜர், கமாண்டர் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றுவர்.
நடைபெறும் தசா புத்திக்குரிய கிரகம் 6 – 8 – 12 ல் இருந்தால் நன்மை தருவதில்லை.
கேந்திரத்தில் இருக்கும் கிரகம் பலம் பெற்று இருந்தால், அதன் தசா புத்தி அந்தர காலங்களில் தொழில் / உத்தியோகத்தில் நன்மை தரும்.
| செவ் சனி | குரு |
|
கேது | ராசி சக்கரம் | லக்னம் | |
சூரி சந்தி புதன் சுக் | ராகு | ||
|
|
|
|
சூரி புதன் ராகு |
|
| சுக்ரன் |
| தசாம்சம் | செவ் குரு | |
சனி |
| ||
| லக்னம் | சூரி | கேது |
ராசி சக்கரம் – ஆய்வு:
பார்க்க வேண்டிய பாவங்கள்: 1 -2 – 10 -11. லக்னம் : ஜாதகர். ஜீவன ஸ்தானம் ( தொழில் ) -10. லாபஸ்தானம் (11) தொழில் மூலம் பெறும் லாபங்கள். இந்த பாவங்கள் வலுவாக இருந்தால், ஒரு ஜாதகர் குடும்பம் நடத்த எந்த குறையுமில்லாமல் வருமானம் ஈட்டுவார்.
கடக லக்ன ஜாதகம். தனஸ்தானம் (2) – சிம்மம். அதிபதி சூரியன் லக்னத்திற்கு 7-ல் நின்று லக்னத்தை பார்க்கின்றார்.
ஜீவன ஸ்தானம் (10) – மேஷம். அதன் அதிபதி செவ்வாய் அங்கு ஆட்சி பலத்துடன். மேலும் 4-ம் பார்வையாக லக்னத்தைப் பார்க்கின்றார்.
லாபஸ்தானம் (11). ரிஷபம் – அதன் அதிபதி சுக்கிரன். 7-ல் இருந்து லக்னத்தைப் பார்க்கின்றார். ஆக மூன்று ஸ்தானங்களும் வலு பெற்றுள்ளன.
அடுத்தி 1 – 2- 10 -11ல் உள்ள கிரகங்களின் நிலை: லக்னத்தில் கிரகங்கள் இல்லை.
2-ல் ராகு என்பதால் பொருள் வரும் வழியைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். 10-ல் ஆட்சி பெற்ற செவ்வாய் என்பதால் எந்த தொழில் செய்தாலும் தைரியத்துடன் இறங்குவார். மேலும் உடல்வலிமையை பயன்படுத்துவார். உடன் சனி நீச்ச நிலையில் இருந்தாலும், ஆட்சி பெற்ற செவ்வாயுடன் இருப்பதால் நீச்சத்தை இழந்து [ நீச்ச பங்கம் பெற்று ] ராஜயோகத்தை தொழிலில் கொடுப்பார்.
செவ்வாய் 5 – 10ம் இடத்து அதிபதி. 5-ம் பாவம் விளையாட்டு. எனவே, விளையாட்டின் மூலம் பொருள் சம்பாதிப்பார். மேலும், 6-ஆம் அதிபதி 11-ல் இருப்பதால் எதிரிகளால் லாபம் / வருவாய் பெறக்கூடியவர் .
உப ஜெய ஸ்தான (3-ம் அதிபதி) மூன்றாம் அதிபதியான புதன் 7-ல் இருந்து லக்னத்தை பார்ப்பதால், போட்டிகளில் வெற்றியை ஈட்டக்கூடியவர் என அறியலாம்.
தசாம்ச லக்ன ஆய்வு:
லக்னம் – விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய் நீச்ச நிலையில் கடகத்தில். இருப்பினும் உச்சம் பெற்ற குருவுடன் சேர்ந்திருப்பதால் நீச்ச பங்கம் பெற்று ராஜயோகம் பெறுகிறார்.
இரண்டாம் பாவமான தனுசுவின் அதிபதியான குருபகவான் உச்சம் பெற்று, ஐந்தாம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதால் ஜாதகர் பெரும் பொருளீட்டக் கூடியவர் என்பதனை சுட்டிக் காட்டுகின்றது.அதே குருபகவான் – விருச்சிக லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதியாக (விளையாட்டு) வருவதால் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவார்.
பத்தாம் அதிபதியான சிம்ம சூரியன் 12-ல் துலாமில் நீச்ச நிலையில் இருப்பது சிறப்பல்ல என்றாலும், நீச்ச பங்கம் பெற்ற செவ்வாயின் 4-ம் பார்வையால் சூரியனை பார்ப்பதுவும், உப ஜெய (3ம்) ஸ்தான அதிபதியான சனி பகவான் தன் 10ம் பார்வையால், சூரியனைப் பார்ப்பதால் சூரியன் பலம் பெறுகிறார்.
பத்தாம் அதிபதியான சூரியன் [ 1-6 க்குரிய செவ்வாய், 3-4க்குரிய சனி பகவானின் பார்வை ] பெறுவதால் உடல் வலிமை – தைரியம் – எதிரிகளை வெல்லும் தொழிலில் வெற்றி பெறுவார். – இது மல்யுத்த அமைப்பை சுட்டிக் காட்டுகின்றது. எனவே, மல்யுத்த போட்டியில் பல வீரர்களை வென்று ஜாதகர் பெரும் பொருள் ஈட்டுவார்.
தசாம்சம் நிறைவு பெற்றது.