1. தசாம்சத்தில் தசாம்ச லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

2. தசாம்சத்தில் தசாம்ச லக்னாதிபதி , தொழில் காரகனான சனி பகவானும் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.

3. தசாம்சத்தில் 6-ம் இடம் நன்றாக இருந்தால் வேலைக்கு சென்று சம்பளம் பெறுவார். 7-ம் இடம் நன்றாக இருந்தால் வேலை ஒத்து வராது. அவருக்கு தொழில் தான்.

4. தசாம்ச சக்கரத்தில் 2, 11 ம் வீட்டில் இருக்கும் கிரக காரகம் மூலம் பணம் / வருவாய் கிடைக்கும். 

5.தசாம்சத்தில் 9-ல் லக்னாதிபதி இருந்தால் ஜாதகர் தொழிலதிபர். 

6. தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால், தொழிலில் ஏற்றம் இறக்கம் இருக்கும். அடிக்கடி தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார்.

7. தசாம்சத்தில் 10ம் வீடும், 10ம் அதிபனும் நன்றாக அமையுமானால், தொழிலில் வெற்றி. அசுபமானால், தொழில் திணறி திணறிச் செல்லும். 

8. தசாம்சத்தில் 10ம் வீட்டுக்கு 8ம் வீடு 5ம் வீடாகும். தசாம்சத்தில் 5-ம் வீடு அசுப விளைவுகளைத் தரும்.

9. தசாம்சத்தில் 9ம் வீடு, 9ம் அதிபதி, சூரியன் – தொழிலில் மேலதிகாரி யைக் குறிக்கும். அசுபர் தொடர்பு ஏற்பட்டால், மேலதிகாரிகளால் தொல்லை ஏற்படும்.

10. சூரியன் வலுவாக இருந்தால், நிர்வாகத் திறனுடன், வருவாயும் இருக்கும். சூரியன் கெட்டிருந்தால் வருவாய் குறைவு. அரசு மூலம் தொந்தரவு ஏற்படும்.

11. சனி நன்றாக இருந்தால், தொழில் நன்றாக இருக்கும்.தொழிலில் வேலைக்காரர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.  சனி பலமிழந்து விட்டால், வேலை செய்பவர்களின் ஆதரவு இருக்காது. 

12. 4-ஆம் வீடு தொழிலால் உண்டாகும் சுகத்தை / சந்தோஷத்தையும் சொல்லும்.

13. தசாம்ச லக்னத்தில் 2 – 6 – 10 ம் வீட்டினை குரு பார்த்தால், தொழிலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும். அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிடுவார். தொழில் கைவிட்டு போனாலும், மறுபடியும் அதைவிட நல்ல தொழிலாக அமையும். 

14. 10-ல் வக்கிர கிரகங்கள் இருந்தாலும், சனி பகவான் 10-ல் இருந்தாலும் அல்லது பார்த்தால் தொழில் ஸ்திரத் தன்மையற்று இருக்கும். அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். 2- 6- 10 -ல் ராகு / கேது இருந்தால் அடிக்கடி தொழிலில் தடை பிரச்சினைகள் ஏற்படும். முன்னேற்றம் தடைபடும். வேலையில் முன்னேற்றம் , பதவி உயர்வு தடையாகும்.

15. தசாம்ச லக்னாதிபதி, 7 மற்றும் 11 ஆம் அதிபதி இணைந்து 1 – 2 – 7 – 9 – 10 – 11 வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு தொழில் செய்ய அதிக ஆர்வம் இருக்கும். 

16. 3 – 8 -ல் இருக்கும் கிரகங்களின் தொழில் ரீதியாக திசா காலத்தில் நன்மை தராது. தீய விளைவுகள் தான் தரும். 5 – 6 – 12 ல் இருக்கும் கிரகங்களும் அவற்றின் திசா புத்தியில் நல்ல பலனைத் தராது. பாவர்கள் பார்வை இருந்தால் கடுமையான பலனே. 

17. 2-ல் உள்ள கிரகம் / 2-ம் இடத்தைக் கொண்டு எந்த மாதிரியான மக்களுடன் பழகும் நிலை, செய்யும் வேலை, சமூக அந்தஸ்தும, மற்றும் பேச்சுத் திறனையும் அறியலாம்.

18. தசாம்ச லக்னத்தைப் பார்க்கும் சுப, அசுப கிரகங்களைக் கொண்டு வேலையின் தன்மை பற்றி, அவரது அணுகுமுறை பற்றி சொல்லலாம். தசாம்சத்தின் லக்கின அதிபதி எங்கு அமர்கின்றாரோ, அதற்கேற்ற தொழில் அந்த இடத்தின் காரத்துவத்தின் படி அமையும். உதாரணமாக லக்னாதிபதி 6-ல் என்றால் சேவைத் துறையில் பணி புரிவார் என சொல்லலாம்.

19. 3-ம் இடத்தைக் கொண்டு ஜாதகரின் முயற்சி, படைப்புத் திறன், தகவல் தொடர்பு திறமைகள், ஒப்பந்தங்கள் மட்டுமல்ல சிறு சிறு தடைகள் உருவாவதையும் அறியலாம்.சிறு தூர பயணம் பற்றியும் அறியலாம்.

20. 4-ம் இடத்தைக் கொண்டு உத்தியோகம் / தொழிலில் ஏற்படும் மகிழ்ச்சி, சந்தோஷத்தை அறியலாம். பிறப்பு நேரம் சரி செய்யவும் உதவும். சுற்றுச் சூழ் நிலைகள் அமையும் விதம் அறியலாம்.

21. திரைத்துறை சார்ந்த தொழில்கள் எனில் 3 – 7- 11 இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.

22. வேலை மற்றும் வேலை சார்ந்த இடங்களில் உள்ள பணியாளர்கள் பற்றி அறியலாம்.

23. 7-ம் இடத்தைக் கொண்டு வேலை / தொழிலில் பணிபுரியும் நபர்கள் பற்றி சொல்லலாம். சுக்கிரன் / சந்திரன் கிரக அமர்வு செய்யும் தொழில் பற்றிய இடத்தில் பெண்கள் கூட்டத்தில் பணிபுரியும் சூழல் ஏற்படும். 

24. ஒருவரின் ஜாதகத்தில் தசாம்ச 10ம் அதிபதியே மேலதிகாரி. 

25. 11-ம் இடத்தைக் கொண்டு ஜாதகருக்கு கிடைக்கும் உதவிகள், யார் உதவுவார்கள் என்பதனை அறியலாம்.

26. 12-ம் இடத்தைக் கொண்டு வேலை / தொழில் காரணமாக வெளியூர் / வெளி நாட்டுவிற்பனை, வாடிக்கையாளர் நிலை – பற்றி அறியலாம்.

27. ராசி சக்கரத்தில் உள்ள யோகி தசாம்சத்திலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காரக கிரகம் அது தொடர்பான வர்க்கத்தில் இருக்க கூடாது. தொழில் காரகனான சனி பகவான் 10 -ல் இருக்க கூடாது. மேலும், எந்த கிரகமும் 3 – 6 – 8 – 12 ல் மறையக் கூடாது. நீச்சம் அஸ்தங்கம் பாதகம் பெறக் கூடாது. லக்கினத்தில் சனி இருக்க கூடாது.