நவாம்சம்: ஒரு ராசியில் உள்ள 30 டிகிரியை 9 பிரிவுகளாக பிரிப்பது நவாம்சம். மூவகை மண்டலம்:
1. மேஷ மண்டலம்: மேஷத்திலிருந்து கடகம் வரை. இப்பிரிவில் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய 3 நட்சத்திரங்களும்; சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திரு ஓணம் ஆகிய 3 நட்சத்திரங்களும், குரு பகவானின் 3 நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களும் மேஷ மண்டலத்தில் இடம் பெறும்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். முதல் பாதம் மேஷத்திலும், 2-ம் பாதம் ரிஷபத்திலும், 3-ம் பாதம் மிதுனத்திலும், 4-ம் பாதம் கடகத்திலும் என கேது, சந்திரன், குருவின் 3*3=9 நட்சத்திரங்களும் இடம் பெறும்.
| 1-ம் பாதம் அஸ்வினி மகம் மூலம் ரோகிணி அஸ்தம் திருஓணம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி | 2-ம் பாதம் அஸ்வினி மகம் மூலம் ரோகிணி அஸ்தம் திருஓணம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி | 3-ம் பாதம் அஸ்வினி மகம் மூலம் ரோகிணி அஸ்தம் திருஓணம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி |
| நவாம்ச – மேஷ மண்டலம் | 4-ம் பாதம் அஸ்வினி மகம் மூலம் ரோகிணி அஸ்தம் திருஓணம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி | |
|
| ||
|
|
|
|
சிம்ம மண்டலம் : சுக்கிரன், செவ்வாய் & சனி பகவானின் நட்சத்திரங்களின் முதல் பாதம் சிம்மத்திலும், 2-ம் பாதம் கன்னியிலும், 3-ம் பாதம் துலாமிலும், 4-ஆம் பாதம் விருச்சிகத்திலும் அமையும்.
|
|
|
|
| சிம்ம மண்டலம் நவாம்சம் |
| |
| 1ம் பாதம் பரணி பூரம் பூராடம் மிருக சீரிடம் சித்திரை அவிட்டம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி | ||
| 4ம் பாதம் பரணி பூரம் பூராடம் மிருக சீரிடம் சித்திரை அவிட்டம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி | 3ம் பாதம் பரணி பூரம் பூராடம் மிருக சீரிடம் சித்திரை அவிட்டம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி | 2ம் பாதம் பரணி பூரம் பூராடம் மிருக சீரிடம் சித்திரை அவிட்டம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி |
தனுசு மண்டலம்: சூரியன், ராகு மற்றும் புதனின் நட்சத்திரங்கள் : முதல் பாதம் தனுசுவிலும், 2-ம் பாதம் மகரத்திலும், 3-ம் பாதம் கும்பத்திலும், 4-ம் பாதம் மீனத்திலும் அமையும்.
4-ம் பாதம் கிருத்திகை திருஆதிரை ஆயில்யம் உத்திரம் அஸ்தம் சுவாதி உத்திராடம் சதயம் ரேவதி -ம் பாதம் ரேவதி | மேஷம் | ரிஷபம் | மிதுனம் |
3-ம் பாதம் கிருத்திகை திருஆதிரை ஆயில்யம் உத்திரம் அஸ்தம் சுவாதி உத்திராடம் சதயம் ரேவதி | தனுசு மண்டலம் நவாம்சம் | கடகம் | |
2-ம் பாதம் கிருத்திகை திருஆதிரை ஆயில்யம் உத்திரம் அஸ்தம் சுவாதி உத்திராடம் சதயம் ரேவதி | சிம்மம் | ||
1-ம் பாதம் கிருத்திகை திருஆதிரை ஆயில்யம் உத்திரம் அஸ்தம் சுவாதி உத்திராடம் சதயம் ரேவதி | விருச்சிகம் | துலாம் | கன்னி |
உதாரண ஜாதக கட்டம்.
குறிப்பு: ஒரு கிரகம் நிற்கும் நட்சத்திர பாதம் நன்றாக கவனித்து நவாம்ச சக்கரம் அமைக்க வேண்டும். உ-ம் சந்திரன் – கேட்டை 4 எனில் தனுர் மண்டலத்தில் மீனத்தில் சந்திரன் அமையும்.
இனி ஜாதக கட்டம்:
லக்னம் செவ் |
| ராகு | சந்திரன் |
| ராசி சக்கரம் |
| |
சனி |
| ||
குரு | கேது | புதன் சூரியன் | சுக்கிரன் |
கிரகங்கள் – டிகிரி – நட்சத்திர பாதம்
லக்னம் – 22.17 டிகிரி – ரேவதி -2 ; சூரியன்: 18.19 – சுவாதி 4 சந்திரன் 0.12 மிருகசீரிடம் 3; செவ்வாய்- 22.17 – ரேவதி 2; புதன்- 1.48 – சித்திரை 3. குரு – 27.23 – உத்திராடம் 1; சுக்கிரன்- 14.49 – அஸ்தம் 2; சனி 2.16 – உத்திராடம் 2; ராகு 27.45 – மிருக சீரிடம் 2. கேது 27.45 – கேட்டை 4
சூரி கேது |
| சுக்கிரன் |
|
| நவாம்சம் |
| |
லக்னம் செவ் சனி |
| ||
குரு |
| சந்திரன் புதன் | ராகு |
1. ஒரு கிரகத்தின் பலம், பலவீனம் தெளிவாக அறியலாம்.
2. ராசி சக்கரத்தின் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தின் விரிவாக்கமே நவாம்சம் ஆகும்.
3. நவாம்சம் – ஜாதகரின் அதிர்ஷ்டம், தர்ம குணம் மற்றும் கணவன் மனைவி அமையும் விதம், திருமணத்திற்குப் பின் விளைவுகள், கணவன் மனைவி ஒற்றுமை, பிரிவினை போன்ற அனைத்து பலனையும் பார்க்க முடியும்.
ராசி சக்கரம் உடல் என்றால் நவாம்ச சக்கரம் உயிர்,
நவாம்சத்தின் பிரிவுகள்:
1. தெய்வம் : சந்திரன் ஒரு ராசியில் 1 – 4 – 7 வது நவாம்ச பிரிவில் இருந்தால் அந்த ஜாதகர் புனிதமானவர். செல்வந்தர். தாராள மனது, குணம் கொண்டவர். மரியாதைக்குரியவர்.
2. மனிதன்: சந்திரன் ஒரு ராசியில் 2 – 5- 8 வது நவாம்சத்தில் இருந்தால், ஜாதகர் உண்மையானவர். நேர்மையானவர். கடின உழைப்பாளி. அதிகாரமிக்கவர். பிறருக்கு உதவும் தன்மை, சேவை செய்வதில் நாட்டம் கொண்டவர்.
3. ராட்சசன்: சந்திரன் ஒரு ராசியில் 3 – 6 – 9 வது நவாம்ச பிரிவுகளில் இருந்தால் ஜாதகர் இரக்கமற்றவர், தீய எண்ணமும், செயலும் உடையவர். வன்முறையாளர். பேராசைக்காரர். பாப காரியங்கள் செய்பவர். தீய எண்ணம் உடையவர். பொறாமை குணம் உடையவர்.
வர்கோத்தமம்: ஒரு கிரகம் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது வர்கோத்தமம் எனப்படும்.
அனைத்து வர்க்கங்களிலும் ஒரே ராசியில் இருப்பது மிகவும் சிறப்பு.
வர்கோத்தமம் பெற்ற கிரகங்களின் தசா புத்தி காலங்களிலும் கோச்சாரத்திலும் ஜாதகருக்கு நன்மை தரக்கூடியவை.
வர்கோத்தமம் பெற்ற கிரகங்கள், உச்சம் பெற்ற கிரகங்கள், ஆட்சி பெற்ற கிரகங்கள் மிக நன்மையான யோக பலன் களைத் தரும்.
அஸ்வினி 1, ரோகிணி 2. மிருகசீரிடம் 3, புனர்பூசம் 4. பூரம் 1, உத்திரம் 2, சித்திரை 3, அனுஷம் 4, புத்திராடம் 1, அவிட்டம் 2, சதயம் 3, ரேவதி 4 ஆகிய நட்சத்திரங்கள் வர்கோத்தமம் பெறுகின்றன. இவற்றில் நிற்கும் கிரகங்களும் வர்கோத்தமம் அடைகின்றன.
புஷ்கர நவாம்சம்:
1. நெருப்புராசிகளில் – மேஷம், சிம்மம், தனுசு வில் – 7 & 9வது பாதம் புஷ்கர நவாம்சம் பெறும்.
2. நில ராசிகளில் – ரிஷபம், கன்னி, மகரம் – 3 & 5 வது பாதம்
3. காற்று ராசிகளில் – மிதுனம், துலாம், கும்பம் – 6 & 8 வது பாதம்
4. நீர் ராசிகளில் – கடகம், விருச்சிகம், மீனம் – 1 & 3 வது பாதம் – புஷ்கர நவாம்சம் பெறும்.
எந்த ஒரு கிரகமும் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் நல்ல பலனைத் தரும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால், ஜாதகர் மதிப்பு மரியாதை கொண்டவர். செல்வந்தர்.
நெருப்பு ராசியில் 21- டிகிரி
நில ராசியில் 14 வது டிகிரி
காற்று ராசியில் 24 வது டிகிரி
நீர் ராசியில் 7 வது டிகிரி புஷ்கராம்சம் எனப்படும்.புஷ்கராம்ச பாகையில் இருக்கும் கிரகங்கள் சுப பலனைத் தருகின்றன.
சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து எண்ண 64 வது நவாம்ச பாதம் கணக்கிட வேண்டும். 64 வது நவாம்ச பாதம் – அந்த நட்சத்திர அதிபதி – ஜாதகருக்கு துன்பம், துயரம் தரும். இந்த கிரகத்தின் தசா புத்தி காலங்களில் நடக்கும். கோச்சார சந்திரன் இந்த கிரகத்தின் மீது வரும் போது உடல் நிலை பாதிப்படையும். உடல் நலக் குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த 64 வது நட்சத்திர பாதம் – லக்னத்திற்கு – 6 – 8 – 12 ஆக இருந்து அந்த இடத்திற்கு சனி தொடர்பு ஏற்பட்டால் ஜாதகருக்கு விஷம் மூலமாக கண்டம் ஏற்படும்.
லக்னம் மற்றும் தசா நாதனுக்கு 64 வது நவாம்ச பாதத்தில் இருக்கும் கிரகம் ஜாதகருக்கு மாரகம் அல்லது மாரகத்திற்கு நிகரான கண்டத்தை தரும்.