சோடசாம்சம் என்பதற்கு காலாம்சம் என்றும் நிருபாம்சம் என்ற பெயர்களும் உண்டு.

Thank you for reading this post, don't forget to subscribe!

காலாம்சம் என்பதற்கு வளர்பிறை சந்திரனின் 16 விதமான நிலைகளைக் குறிக்கும்.

மனமகிழ்ச்சியை குறிக்கும் கிரகம் சந்திரனே.

ஒருவரது வாழ்வில் – சுக போகத்திற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களால் ஏற்படும் மனமகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் பலவற்றை சொல்வது.

மன மகிழ்ச்சிக்கு – சந்திரன்.

சுக போகங்கள் – தனம் – நிம்மதிக்கு காரகர் – குரு.

வாகன காரகன் – சுக்கிரன். மகிழ்ச்சி, இன்பம், செல்வத்திற்கு காரகர்.

ஆக சுக்கிரன் மற்றும் குரு ஆகிய இருவரும் முக்கிய காரகர்கள் என அறியவேண்டும். 

இவர்களின் வழியாக இவ்வுலகம், சுகபோகங்களையும், மகிழ்ச்சியையும், ஆடம்பர பொருட்களையும் பெற்று வாழ்வது.

பாவம்: 4- ஆம் பாவம்.

4-ஆம் பாவத்திற்கு 11-ம் பாவம் இரண்டாமிடமாகும். 

இரண்டாமிடம் மூலமாக குடும்பத்திற்கான வரவு, வாகனங்கள் மூலமான லாபம், செல்வம் ஆகியவற்றைக் குறிக்கும்.

4-ஆம் இடத்திற்கு 6-ம் இடம் 9-ம் இடமாகும். இந்த ஒன்பதாம் இடம் போட்டி, பகை போன்றவற்றை தெரிவிக்கும்.

லக்னம் பலமாக இருந்தால் – லக்னத்திற்கு 7-ம் இடமும் பலமும் பெற்றிருந்தால் ஜாதகர் வாகனங்களை பெற்றிருப்பார். லக்கினம் மட்டும் பலம் பெற்றிருந்தால், ஜாதகர் தனது சுய சேவைக்காக வாகனங்களைப் பயன்படுத்துவார். 7-ம் இடம் பலம் பெற்றால், வணிகத்திற்காக வாகனத்தைப் பயன் படுத்துவார்கள்.

4-ஆம் இடத்திற்கு 12-ம் இடம் – மூன்றாமிடம். இதன் மூலம் வாகனங்க்கள் ஒப்பந்தம் மூலம் கிடைக்குமா ? வாகனம் ஒப்பந்தம் மூலம் பிறருக்கு கொடுக்கப்படுமா ? என்பதனையும் அறியலாம்.

4-ஆம் இடத்திற்கு 2-ம் இடமான ஐந்தாம் இடத்தைக் கொண்டு பரம்பரைச் சொத்து பற்றி அறியலாம்.

ஆக ஜாதகரின் மகிழ்ச்சிக்கான – செல்வம் – பரம்பரை சொத்து – வாகன வருமானம் – பயன்பாடு ஆகியவற்றை அறிய சோடசாம்சம் படுகிறது.

சோடசாம்சம் என்பது 30 டிகிரி கொண்ட ஒரு ராசியை 16 பிரிவுகளாக பிரித்து அமைக்கப் படுகின்றது. ஒரு பிரிவு 1 டிகிரி 52 கலை ஆகும் [ 1.52 டிகிரி ]

ராசி சக்கரத்தில் 12 ராசிகளில் ….

1. சர ராசியில் இருக்கும் கோள்கள் – மேஷத்திலிருந்தும்

2. ஸ்திர ராசியில் இருக்கும் கோள்கள் – சிம்மத்திலிருந்தும்

3. உபய ராசியில் இருக்கும் கோள்கள் – தனுசுவிலிருந்தும் தொடங்கி வரிசையாக அமையும்.

ராகு 17.20

 

சுக்ரன் 19.20

சூரி 9.40 புத 3.51

 

ராசி

லக் 2.10  குரு 2.13

 

செவ் 15

சனி 28.20

 

சந்திரன் 6.26

கேது 17.20

 

செவ் சனி

 

லக்னம் சூரி குரு

சுக்

 

சோடசாம்சம் – D16.

 

 

 

 

சந்திரன்

 

ராகு கேது

ராசி சக்கரம் ஆய்வு செய்தல்:

லக்னம் – கடகம். குருவின் நட்சத்திரத்தில் – புனர்பூசம் 4ல். 

லக்னத்தின் 9-ஆம் அதிபதியான குரு , லக்னத்தில் சுயசாரம் பெற்று லக்னமாக உள்ளது. ஆக, குரு, சந்திரன் இரு கோள்களின் தன்மைகள் தான் வாழ் நாள் முழுவதும் எதிரொலிக்கும். கடக அதிபதியான சந்திரன் (வளர்பிறை) திக்பலம் பெற்று 4-ல் செவ்வாயின் நட்சத்திரத்தில். குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் அமைந்துள்ளனர். எனவே கஜகேசரி யோகம் அமைந்துள்ளது. சந்திரனுக்கு வீடு கொடுத்தவரான சுக்கிரன் தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ளார். [ கடகத்திற்கு லாபஸ்தானம் மற்றும் பாதகஸ்தானம் ] 

சுக்கிரன் வாகனங்களுக்கு காரகர். சுக்கிரன் ரோஹிணி நட்சத்திரத்தில். குரு, சுக்கிரன், சந்திரன் மூவருமே பலம் பெற்றுள்ளதால் ஜாதகர் இயற்கையிலே அதாவது பிறந்தது முதலே செல்வந்தர்.

12-ல் சூரியன் ராகு சாரம் பெற்று உள்ளார். சூரியனுக்கு நேர் 7-ல் உள்ள சனி பகவான் சூரியன் சாரம் பெற்று உள்ளார். பகை பெற்ற கிரகங்கள சமசப்தமாக பார்த்துக் கொள்வதால் , இவரது தந்தையுடன் பலவித விரும்பத் தகாத கருத்து வேற்றுமைகள் இருக்கும். 

சோடசாம்சத்தில் – லக்னம் ராசி சக்கரத்தின் லாபஸ்தானமான 11ம் வீடு. 

சோடாம்ச லக்னத்தின் 4-ஆம் அதிபதியான சூரியன் லக்னத்தில். லக்னத்திற்கு 11-ம் அதிபதியான குருவும் லக்னத்தில். ஆக, குரு – சூரியன் இணைவு பெற்றுள்ளனர். 

ரிஷப லக்னத்தின் யோக காரகர் சனி பார்வை பெற்று அமைந்துள்ளதால் அனைத்துவித வசதி வாய்ப்புகள் செல்வங்கள் அனைத்தையும் சிறப்பாக அனுபவித்து வருகிறார்.

சோடசாம்ச லக்னாதிபதி சுக்கிரன் 2-ல் அமர்ந்துள்ளதால் செல்வ வளம், வருமானம் ஆகியவை குறைவில்லாமல் வந்து கொண்டிருப்பதை காட்டுகிறது.

4-ஆம் வீட்டு அதிபதியே லக்னத்தில் இருப்பதும், லக்னாதிபதி சுக்கிரனுக்கு வீடு கொடுத்த புதன் 4-ஆம் வீட்டை பார்ப்பதும் நல்ல பெரிய பூர்வீக வீட்டில், சகல சௌகரியங்களுடன் வாழ்ந்து வருவதைக் காட்டுகிறது.