சதுர் விம்சாம்சம் – சித்தாம்சம் என்றும் அழைப்பர்.
ஒரு ராசியை அதாவது 30 டிகிரியை 24 சம பங்காக பிரிக்க ஒரு பிரிவு 1.15 டிகிரி.
கல்வி உயர் கல்வி பற்றி அறியலாம்.
முதல் பிரிவு 0 டிகிரி முதல் 1.15 டிகிரி
2-ம் பிரிவு 1.15 – 2.30 டிகிரி வரை
3-ம் பிரிவு 2.30 – 3.45 டிகிரி வரை
4-ம் பிரிவு 3.45 – 5.0 டிகிரி வரை
….. இவ்வாறு 24 வது பிரிவு 28.45 – 30.0 டிகிரி வரை.
ராசியில் உள்ள கிரகங்கள்
1. ஆண் ராசியில் இருந்தால் சதுர் விம்சாம்சத்தில் சிம்மம் முதலாகவும், தொடங்கி வரிசையாக அமையும்.
2. பெண் ராசியில் இருந்தால் சதுர் விம்சாம்சத்தில் கடகம் முதலாகவும், தொடங்கி வரிசையாக அமையும்.
சதுர் விம்சாம்சத்தில் 12 பாவங்களுமே கல்விக்கு உறுதுணையாக இருக்கின்றது. இவ்வாறு அனைத்து பாவங்களும் கல்விக்குத் தொடர்புடையது என்றாலும், 2-ம் , 4-ம், 9-ம் , 11-ம் பாவம் முக்கியமானவையாகும்.
அயல் நாட்டு கல்விக்கு 9 மற்றும் 12ம் பாவம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆன்மீகக் கல்விக்கு 5-ம் பாவம் பார்க்க வேண்டும்.
கல்விக்கு காரகன் – புதன். ஆன்மீகக் கல்விக்கு குரு. மனோகாரகனும் காலப் புருஷனுக்கு 4-ம் அதிபதியுமான சந்திரன் மற்றும் சூரியன் இவர்களை முக்கியமாக கவனத்தில் கொண்டு சதுர் விம்சாம்ச ராசிக்கட்டத்தை ஆராய வேண்டும்.
லக்னம்: தனது சுய நிலைக்கான கல்வி, பாதுகாப்பான கல்வி.
2 -ம் பாவம்: பொருளாதாரம் சார்ந்த கல்வி, உணவு சார்ந்த, வாய் மூலம் மொழி அறிவு போதனைக் கல்வி, விற்பனை மற்றும் பிரதி நிதி பற்றிய கல்வி & அடிப்படைக் கல்வி.
3 -ம் பாவம்: தகவல் தொடர்பு, எழுத்து, விளம்பரம், பயணம் சார்ந்த கல்விகள்
4-ம் பாவம்: உற்பத்தித் தொழில்கள் அனைத்தும், விவசாயம், தோட்டக்கலை, கட்டுமானம், வாகனத்துறை, பள்ளிக்கல்வி போன்றவை.
5-ம் பாவம்: குழந்தை வளம், மனவளக் கலை, ஆன்மீக குருகுல கல்வி, 4-ம் பாவம் தோட்டம் என்பதால் 5-ம் பாவம் அதை வளர்ச்சிப்படுத்த தேவையான மூல விதைகள், பயிர்கள், செடிகள் தயாரித்து வழங்க்கும் ஆராய்ச்சித் துறை.
6ம் பாவம்: ஆயுதக் கல்வி ( சிலம்பம் ), சட்டம், மருத்துவம் தொடர்புடைய கல்விகளும்
7-ம் பாவம்: வெகுஜனத் தொடர்பு ஸ்தானம் என்பதால் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் , தொழில் வளம். நிர்வாகம் போன்றன.
8-ம் பாவம் மறைவு ஸ்தானம் என்பதால் ஜோதிடம், புதைபொருள் ஆராய்ச்சி, கனிம வளம், ஆய்வுக் கல்வி…
9-ம் பாவம்: வெளி நாடுத் தொடர்புடைய கல்வி, மத ஆச்சார கல்விகள், உயர்கல்வி.
10-ம் பாவம்: சுய தொழிலைக் குறிப்பிடும் பாவம் [ சனியும் சந்திரனும் தொடர்பு ] நன்றாக அமையுமானால், நிர்வாகக் கல்வியும் அரசியல் கல்வியும் மற்றும் சுயதொழில் கல்வி.
11-ம் பாவம்: லாப ஸ்தானம் என்பதால் பொருளாதாரம் பற்றிய கல்விகள், வருவாயை ஈட்டி உடனடி லாபம் தரக்கூடிய கல்விகள்; பல உயர் நிலை கல்விகளை முடித்து பட்டங்கள் பெறுவதையும் குறிப்பிடும் பாவமாகும்.
12-ம் பாவம்: வெளி நாட்டு வாழ்வைக் குறிப்பிடும் இடம், ஆகாய மார்கத்தை குறிப்பிடும் பாவம், வெளி நாட்டு மொழிகள், கணினி அறிவியல், கடல் கடந்த தொடர்பால அமையும் கல்விகள் [ Shipping, Marine Engg., Fisheries, Logistics ]…
விதிகள்:
1. சந்திரன் – ஸ்திர ராசிகளான – ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் – ஆகிய ராசிகளில் இருந்தால் உறுதியான மன நிலை கொண்டவர்கள்.
2. 4 மற்றும் 9ம் பாவங்கள் பலம் பெற்று இருக்க வேண்டும்.
கல்வி காரகன் புதன் வலுவாக இருந்தால் பட்டப்படிப்பிற்கு குறைவில்லாத கல்விமான்.
3. லக்னம் – சந்திரன் – புதன் தொடர்பு : ஆராய்ச்சிப் படிப்பு. அனைத்து நிலைகளிலும் குருவின் பார்வை மேன்மை மேலும் தரும்.
கல்வி கற்க செவ்வாய் – கேது சிறு தடைகளை ஏற்படுத்தும்.
புதனிற்குத் திரிகோணத்தில் உள்ள கோள்களும் கல்விக்கு உறு துணையாக இருக்கும்.
3 – மற்றும் 10ம் அதிபதி – மாரக – பாதக ஸ்தான அதிபதிகளின் திசா புத்தி காலத்தில் கல்வியில் தடை, குறுக்கீடு, தாமதம் போன்றவை ஏற்படும்.
சித்தா, ஆயுர்வேதம் – குரு சிறப்பாக இருக்க வேண்டும்.
ஆங்கில மருத்துவம் – செவ்வாய்
பாம்பு – மருத்துவ கிரகம்.
மருத்துவ கல்விக்கு சந்திரன் ஆட்சி / உச்சம் பெற்றால் …
லக்னத்திலிருந்து கேது 1 – 2- 9 – 10 – 11 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால்
சனி செவ்வாய் தொடர்பு பெற்றிருப்பது
செவ்வாய் பலம் பெற்று லக்னத்திற்கு 10ம் இடம் தொடர்பு வரவேண்டும். + இவர்களுடன் கல்விக்காரகன் புதனும் லக்னாதிபதியும் வலு பெற்றிருக்க வேண்டும்.