நவாம்சம்
நட்சத்திரம், நட்சத்திர அதிபதிகள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். இவர்கள் இல்லாமல் எதனைப் பற்றியும் சொல்ல முடியாது.
நட்சத்திர அதிபதி | நட்சத்திரங்கள் |
கேது | அஸ்வினி, மகம், மூலம் – மேஷமண்டலம் – மேஷம் (1), ரிஷபம் (2), மிதுனம் (3), கடகம் (4) பாதங்கள் |
சுக்கிரன் | பரணி, பூரம், பூராடம் – சிம்ம மண்டலம் – சிம்மம் (1), கன்னி (2), துலாம் (3), விருச்சிகம் (4) பாதங்கள் |
சூரியன் | கிருத்திகை, உத்திரம், உத்திராடம் – தனுர் மண்டலம் – தனுசு (1), மகரம் (2), கும்பம் (3), மீனம் (4) பாதங்கள் |
சந்திரன் | ரோகிணி, அஸ்தம். திருஓணம் – மேஷ மண்டலம் – மேஷம் (1), ரிஷபம் (2), மிதுனம் (3), கடகம் (4) பாதங்கள் |
செவ்வாய் | மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – சிம்ம மண்டலம் – சிம்மம் (1), கன்னி (2), துலாம் (3), விருச்சிகம் (4) பாதங்கள் |
ராகு | திருஆதிரை, சுவாதி, சதயம் – தனுர் மண்டலம் – தனுசு (1), மகரம் (2), கும்பம் (3), மீனம் (4) பாதங்கள் |
குரு | புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – மேஷ மண்டலம் – மேஷம் (1), ரிஷபம் (2), மிதுனம் (3), கடகம் (4) பாதங்கள் |
சனி | பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சிம்ம மண்டலம் – சிம்மம் (1), கன்னி (2), துலாம் (3), விருச்சிகம் (4) பாதங்கள் |
புதன் | ஆயில்யம், கேட்டை, ரேவதி – தனுர் மண்டலம் – தனுசு (1), மகரம் (2), கும்பம் (3), மீனம் (4) பாதங்கள் |
நவம் – ஒன்பது – பாக்கியம். ஜாதகர் என்ன பாக்கியம் பெற்றார் என்பதை சொல்கின்றது. ஒவ்வொரு ராசியிலும் 9 நட்சத்திர பாதங்கள் உள்ளது. ஆக, என்ன பாக்கியத்தை ஜாதகர் பெற்றிருக்கின்றார், எந்த காலகட்டத்தில் பெறுவார் என்பதனை நவாம்சம் கொண்டு அறியலாம்.
ஒரு கிரகம் ராசி சக்கரத்திலிருந்து எந்த பாக்கியத்தை நமக்கு தரப்போகின்றது என்பதனை நவாம்சம் கொண்டு அறியலாம்.
கேதுவின் நட்சத்திரமே ஒரு மண்டலத்தை ஆரம்பிக்கும் புள்ளி. மேஷமண்டலம். 2-ம் நட்சத்திரமான சுக்கிரன் – 2-ம் மணடலம் – சிம்ம மண்டலம்.3-ம் நட்சத்திரமான சூரியன் – மூன்றாம் மண்டலம் – தனுர் மண்டலம் இடம் பெறுகின்றது. இவ்வாறே 1, 2, 3 என 9 கிரகத்திற்கும் எடுக்கவேண்டும். 27 நட்சத்திரங்களும் இந்த மூன்று மண்டலத்தில் அடங்கிவிடுவதை கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் காண்க.
தனுர் மண்டலம் 4ம் பாதம் | மேஷ மண்டலம் 1ம் பாதம் | மேஷ மண்டலம் 2ம் பாதம் | மேஷ மண்டலம் 3ம் பாதம் |
தனுர் மண்டலம் 3ம் பாதம் | நவாம்ச சக்கரம் மேஷ மண்டலம்-கேது, சந்திரன், குருவின் நட்சத்திரங்கள் சிம்ம மண்டலம்- சுக், செவ், சனியின் நட்சத்திரங்கள் தனுர் மண்டலம் – சூரி, ராகு, புதனின் நட்சத்திரங்கள். | மேஷ மண்டலம் 4ம் பாதம் | |
தனுர் மண்டலம் 2ம் பாதம் | சிம்ம மண்டலம் 1ம் பாதம் | ||
தனுர் மண்டலம் 1ம் பாதம் | சிம்ம மண்டலம் 4ம் பாதம் | சிம்ம மண்டலம் 3ம் பாதம் | சிம்ம மண்டலம் 2ம் பாதம் |
சூரியன் அஸ்வினி 3ம் பாதத்தில் இருக்கின்றார் எனில் நவாம்சத்தில் மிதுனத்தில் சூரியன் இருப்பார்.
புதன் மூலம் 2ல் எனில் நவாம்சத்தில் ரிஷபத்தில் புதன் இருப்பார்.
குரு மிருகசீரிடம்3 எனில் நவாம்சத்தில் துலாமில் குரு இருப்பார்.
சுக்கிரன் திருஆதிரை 3 ல் எனில் நவாம்சத்தில் கும்பத்தில் சுக்கிரன் இருப்பார் . இவ்வாறு கிரக அமர்வு நவாம்சத்தில் நட்சத்திர பாதம் கொண்டு அமையும்.
ராசி சக்கரத்தின் 4-ம் அதிபதி நவாம்சத்தில் நில ராசியில் இருந்தால் நன்மை. 6/8/12-ல் இருக்க கூடாது.
நவாம்சம்:
ராசியையும், நவாம்ச சக்கரத்தையும் ஒப்பிட்டு தான் பலன் காண வேண்டும். ராசியோட லக்னத்திற்கு நவாம்ச லக்னம் 6 / 8 /12 ஆக அமையக் கூடாது.
நவாம்ச லக்னம் , ராசி நாதன் நீச்ச வீட்டில் விழக் கூடாது. உ-ம். மகர ராசி
ராசி | |||
மகர லக்னம் | |||
லக்னம் | |||
நவாம்சம் | |||
மகர லக்னத்தின் அதிபதி சனி பகவான் நீச்சமாகும் மேஷ வீட்டில் நவாம்ச லக்னம் மேஷமாக அமையக் கூடாது. அப்படி அமைந்தால், ஜாதகருக்கு பாக்கியங்கள் கிட்டினாலும் அனுபவிக்க பாக்கியம் இல்லை. அதனில், குறைவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். திருப்தியற்ற நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஜெனன ராசியின் லக்னத்திற்கு 6 வது வீட்டில் நவாம்ச லக்னம் அமைந்தால், திருமணத் தாமதம் திருமண வாழ்வில் சண்டை சச்சரவுகள் ஜாதகருக்கு மன நிம்மதியற்ற நிலைமை. வீடு இடமாற்றம் சிறப்பில்லை. பிரச்சினைகள்இருந்து கொண்டே இருக்கும். திருப்தியாக அமையாது. ஆனால், இவர்கள் அதிக இடமாற்றம் செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இவர்கள் யாரிடமும் வாக்கு வாதம் செய்யக் கூடாது. இதனாலே இவரை மற்றவர்களால் ஒதுக்கப்படுவார். சித்தி மணவாழ்க்கை சிறக்காது. சித்தி பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். இருந்தால் திருப்தியற்ற வாழ்க்கை.
நவாம்ச லக்னம் எட்டாக அமைந்தால், மண வாழ்க்கை சிறப்பில்லை. ஒரு சிலருக்கு திருமண பாக்கியமே இருக்காது. திருமணம் நடந்தால், ஒரு சிலருக்கு முதல் திருமணம் கசப்பு. அன்னியோன்யம் இருக்காது. பிரித்து விடும். இரண்டாவது திருமணத்தை கொடுத்து விடும். வயிறு பிரஸ்னை இருக்கும். விபத்து, வழக்கு உண்டு. ஆயுள் பயம் உண்டு. பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். [ பெண்களுக்கு 36 வயது. ஆண்கள் 40 ] தாமதமாக 32 வயதுக்கு மேல் திருமணம் செய்வது நல்லது. இருந்தாலும் 36 வயதிற்கு மேல் தான் நன்றாக இருக்கும். அதுவரை திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது. இவர்கள் சுய முயற்சியாலே அடுத்த நிலைக்கு செல்வார்கள். நவாம்ச லக்னம் 12 ஆக இருந்தால்- சிறிய வயதில் ஆரோக்யக் குறைவு ஏற்படும். போகப் போக சரியாகும். முதலில் வேலைக்கு சென்று பின் அடுத்த தொழில், வேலை தான் நிலைக்கும். அதீதமான மன வாழ்க்கை 40% அமைவதில்லை. அமைந்தால் பிரிந்து வாழும் நிலை ஏற்படும். வெளியூர் / வெளி மானிலம் / வெளி நாடு செல்வார். ஆவணங்கள் தொலைப்பார். அதனால் ஒரு விரயம் ஏற்படும். பெரும் பணம் / தங்கம் விரயம் ஆகும். முதல் தொழிலில் சம்பாதித்ததை இரண்டாவது தொழிலில் இன்வெஸ்ட் செய்து விரயமாகி விடும். லாபத்தை வைத்து லாபம் பார்க்க எண்ண கூடாது. சீட்டு, வட்டிக்கு விடுவது கூடாது. ஜாதகருக்கு ஜாதகரே தடையாக இருப்பார்.
ஜெனன ராசியில் வக்கிரமான கிரகத்தின் வீட்டில் நவாம்ச வீடு லக்னமாக வருவது (அ) செவ்வாய் சுக்ரன் இருப்பது தாமத திருமணம், மந்த நிலை, மணக் கசப்பான வாழ்க்கை, இல்லற சுகக் குறைவு, கருத்து வேறுபாடுகள் அதிகம். உடலில் அடிக்கடி பாதிப்பு ( அடிபடுதல் ) ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ராசி | |||
சுக்ரன் (வ) | |||
செவ்வாய் | |||
நவாம்சம் | |||
சுக்ரன்(வ) | |||
நவாம்ச லக்னாதிபதி நவாம்சத்தில் நீச்சம் பெற்றால், நவாம்ச லக்னத்தில் கேது நின்றால் பாக்யங்கள் அனுபவிக்கத் தடை. திருப்தி இருக்காது. இவர்கள் திருமணத்திற்கு பார்க்கும் பெண் வேறொருவருக்கு திருமணமாகி விடும்.
நவாம்ச லக்னம் – கும்பமாக இருந்தால் – மண வாழ்க்கை திருப்தி இருக்காது. கருத்து வேறுபாடு பிரச்சினை இருக்கும். இவர்கள் பாசத்தால் ஏமாந்து விடுவார்கள். இவர்கள் அங்கீகாரத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள். பாசத்துக்கு ஏங்குவார். ஆனால் கிடைக்காது. [ கும்பத்துக்கு 6ம் அதிபதி 4ம் வீட்டில் உச்சம் – 4 மனசு. 6 – போராட்டம். ]