விம்சாம்சம்:
விம்சாம்ச சக்கரம் என்பது ஒரு ராசியின் 30 டிகிரியை 20 பிரிவுகளாகப் பிரித்து அமைக்கப்படுகிறது. ஒரு பிரிவு 1டிகிரி 30 கலை. [ 1.30 டிகிரி ]
ராசி சக்கரத்தில் உள்ள கோள்கள் இருக்குமிடம்
1. சர ராசிகள் எனில் மேஷம் முதலாகவும்
2. ஸ்திர ராசிகள் எனில் தனுசு முதலாகவும்
3. உபய ராசிகள் எனில் சிம்மம் முதலாகவும் தொடங்கி வரிசையாக விம்சாம்சம் சக்கரத்தில் அமையும்.
ஒருவருக்கு உருவாகும் ஆன்மீக உணர்வு மத நம்பிக்கை இவற்றை தெரிவிக்கும் சக்கரம் மற்றும் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதையும் தெரிவிக்கும். – விம்சாம்சம்.
லக்னத்திற்கு 5 – 9 ல் இருக்கும் கிரகத்திற்குரிய தெய்வத்தை வணங்கி வருவதால் இறைவனின் அருளைப் பெறலாம்.
கிரகங்கள் இல்லை எனில் அதன் அதிபதிக்குரிய தெய்வத்தை வணங்கி வரலாம்.
லக்னத்திற்கு 1 – 5 – 9 அதிபதிகள் பலத்தைப் பொறுத்து ஒருவர் இறை அருள் பெறுவாரா என்பதை அறியலாம்.
சுக்கிரன் – சனி – கேது ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டால் துறவியாக வாழ்வார்கள்.
சனி பகவான் லக்னத்தை அல்லது லக்னாதிபதியைப் பார்த்தால் சன்னியாசி யோகம். இல்லற சுகம் அவ்வளவாக கிடைப்பது இல்லை.
சுக்கிரன் சனி ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருப்பது மற்றும் பல கோள்கள் விம்சாம்ச லக்னத்தைப் பார்ப்பதுவும் சன்னியாச யோகம் தான்.
விம்சாம்ச லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி ஆட்சி / உச்சம் பெற்றாலோ, அல்லது 12ம் இடம் சம்பந்தம் பெறுமானால் அவருக்கு இந்தப் பிறவியே கடைசி பிறவி.
ராசிக்கு 10-ம் அதிபதியும், விம்சாம்ச சக்கரத்தின் 10-ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் / சம்பந்தப்பட்டால் மனித நேயம் கொண்ட ஆன்மீகவாதிகள்.
ஆத்ம காரகன் [ அதிக பாகை பெற்ற கிரகம் ] நவாம்சத்தில் அல்லது விம்சாம்சத்தில் 12-ம் பாவ தொடர்பு பெறுமானால் இப்பிறவியே கடைசிப் பிறவியாகும்.
விம்சாம்ச சக்கரத்தில் 5 – 6 ஆம் அதிபதிகளின் தொடர்பு பெறுமானால், ஆன்மீக உலகில் சித்தி பெறுவார்கள்.
விம்சாம்ச சக்கரத்தில் 5 – 11ம் இடம் சுபர் தொடர்பு பெறுமானால், ஜாதகர் மந்திர சித்தி அல்லது ஆன்மீக சக்தி பெற்றவர்.
இரண்டாமிடம் நீதி நெறி, ஒழுக்கம், மனசாட்சி, நியாய உணர்வை குறிக்கும் இடம்.
இரண்டாமிடம், இரண்டாமிட அதிபதி சுபர் தொடர்பு பெற்றால் ஆன்மீக நிலையில் முன்னேற்றம் உண்டு. பாவர் சம்பந்தப்பட்டால், பாசாங்கு போலி பகட்டு, வெளிப்பகட்டுக்காக செய்பவர்.
3-ம் இடம் ஆன்மீகம் பலம் சேர்க்க உதவும் மந்திர உச்சரிப்பு, தியானம், விரதம் போன்றவைகளுக்கு தேவையான கடின உழைப்பை காட்டுமிடமாகும்.
ஜாதகரின் தற்போதைய வாழ்வின் கர்ம வினைகளை பத்தாமிடமும், பத்தாமிட அதிபதிய்ம் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பத்தாமிடம், பத்துக்கு பத்தாமிடமான ஏழாமிடம் ஆகியவற்றை ஆராய்ந்து ஜாதகரின் ஆன்மீக சிறப்பு நிலைகளை காண வேண்டும்.
சுக்கிரன், சனி கேது திரிகோணங்களில் இருந்தால் தபஸ்வி யோகம்.
சந்திரன் – குரு – லக்னம் ஆகிய மூன்றும் சனியின் ஆதிக்கத்தில் (பார்வையில்) இருந்தால் ஜாதகரின் இல்வாழ்க்கை மகிழ்ச்சி குறைவு தான்.
விம்சாம்ச சக்கரத்தில் அதிக கோள்கள் நீச்சம் பெற்றாலும் அந்த ஜாதகருக்கு இல்லற சுகம் குறைவு. துறவு வாழ்க்கை போல வாழ வேண்டி இருக்கும்.
விம்சாம்ச சக்கரம்: 20 தேவதைகள்
0-1.30 காளி | 1.30 – 3.0 கௌரி | 3.0 – 4.30 ஜெயா | 4.30 – 6.0 லஷ்மி |
6.0 – 7.30 விஜயா | 7.30- 9.0 விமலா | 9.0 – 10.30 சதி | 10.30 -12.0 தாரா |
12.0 – 13.30 ஜ்வாலா முகி | 13.30 – 15.0 ஸ்வேதா | 15.0 – 16.30 லலிதா | 16.30 – 18.0 பகலாமுகி |
18.0 – 19.30 பிரத்யங்கிராதேவி | 19.30 – 21.0 சசி | 21.0 – 22.30 ரௌத்ரி | 22.30 – 24.0 பவானி |
24.0 – 25.30 வரதா | 25.30 – 27.0 ஜெயா | 27.0 – 28.30 திரிபுர | 28.30 – 30.0 கமுகி |