சப்தாம்சம் மூலம் குழந்தைப்பேறுக்கான விதிகள்
- லக்னத்திற்கு கேந்திர – திரிகோணத்தில் இருக்கும் கிரகங்கள் அதன் தசா புத்திகளில் குழந்தை பிறக்க வாய்ப்பு.
- 2-11 ல் கிரகம் வலுப்பெற்று இருந்தாலும் நன்மை தரும்.
- சப்தாம்சத்தில் ஐந்தாம் பாவத்தில் சந்திரன் பலமற்ற நிலையில் இருந்தாலும், அல்லது நீச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும், அல்லது புதன் சந்திரன் இருந்தாலும் கர்பப்பையில் கோளாறு வர வாய்ப்புள்ளதால் மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- 3 – 6 – 7 – 12 ல் இருக்கும் கிரகங்கள் அதன் தசா புத்திகளில் நன்மை தருவதில்லை.
- சப்தாம்சம் லக்னாதிபதிக்கு இருபுறமும் சுபர் இருப்பது நன்மை தரும்.
- ராசி அல்லது சப்தாம்ச ஐந்தாம் அதிபதி மற்றும் குழந்தைக்கு காரகரான குரு வர்கோத்தம் அடைவது மிகச்சிறப்பு.
- சப்தாம்சத்தில் ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவ அதிபதி பலம் பெறுமானால் குழந்தை செல்வங்கள் உண்டு.
- ராசி மற்றும் சப்தாம்சத்தில் அதனதன் ஐந்தாம் அதிபதி ஆண் ராசியில் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
- சப்தாம்சத்தில் ஐந்தாம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்து பலம் குறைந்திருந்தால் குழந்தைகள் பிறக்க மருத்துவ உதவி நாட வேண்டும்.
- குரு ஐந்தாம் அதிபதியாகி லக்னத்தில் நின்றால் ஆண் குழந்தை பெறுவார்.
- இரண்டாம் அதிபதி ஐந்து அல்லது பத்தாம் பாவத்தில் இருந்தால் குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்பு அதிகம்.
- சப்தாம்சத்தில் ஐந்தில் (பெண்ராசி) சந்திரன் + புதன் இருந்து ஸனி பார்வை ஏற்பட்டால் கர்ப்பப்பை கோளாறு ஏற்படும்.
- சப்தாம்சத்தில் 5 – 8 – 10ம் பாவத்தில் சனி செவ்வாய் சுக்கிரன் இருந்தால் குழந்தை பிறக்க கண்டிப்பாக மருத்துவ உதவி தேவைப்படும்.
- சப்தாம்சத்தில் 7-ம் அதிபதி மற்றும் குருவை வைத்து பெண்களுக்கும், 7-ம் அதிபதி + சுக்ரனை வைத்து ஆண்களுக்கும் குழந்தைச் செல்வம் கிடைக்குமா ? என அறியலாம்.
| லக் சனி | சுக் கேது | சந்திரன் | |
| சப்தாம்சம் | புதன் குரு | ||
| செவ் சூரியன் | ராகு | ||
உதாரண ஜாதகம் [ சப்தாம்சம் ]
மீன லக்னம். ஐந்தாம் வீடு – கடகம் – அதிபதி – சந்திரன். கடகத்தில் நிற்கும் கிரகங்கள் – புதன் குரு.
ஏழாம் பாவம்- கன்னி. அதிபதி புதன். அவர் ஐந்தில் இருக்கின்றார்.
சுக்கிரன் – மூன்றில் ஆட்சி பலத்துடன் உள்ளார். எனவே குழந்தை பாக்கியம் உண்டு என முடிவுக்கு வந்து விடலாம்.
ஐந்தாம் அதிபதியான சந்திரனும், ஒன்பதாம் அதிபதியான செவ்வாயும் ஆண் ராசியில் இருந்து சம சப்தமாகவும் பார்த்துக் கொள்கின்றனர்.இரண்டாம் அதிபதியான செவ்வாய், பத்தாம் பாவத்தில் இருப்பதால், ஆண் ராசியில் இருப்பதால் ஒரு ஆண் குழந்தை .ஐந்தாம் அதிபதியும் ஆண் ராசியில் இருப்பதையும் கவனிக்கவும்.
லக்னம் – இரண்டாம் பிரிவான பால்சப்தாம்சத்தில் இருப்பதால், ஜாதகரின் குழந்தை நற்பண்புள்ள, ஆடம்பரமில்லாத நல்ல குழந்தையாகவே வளரும். பின்னாளில், பெற்றோரை பாதுகாக்கும். சமுதாயத்தில் பொருளாதார நிலையில் மேம்படுவதுடன் பெற்றோர்களை முன்னிலைப்படுத்தவும் செய்வார்கள்.