தாய் தந்தையின் நிலை, தந்தை தாய் வழி முன்னோர்கள்; ஒருவரின் கடந்த பிறவியில் செய்த நன்வினை, தீவினை கர்மா பற்றிய விதியை தெரிவிப்பதாகும்.
துவதசாம்சத்தின் லக்னாதிபதி இவ்வுலக வாழ்க்கையின் நிகழ்காலத்தையும், வருங்காலத்தை 9ஆம் பாவமும் , சென்ற பிறவியின் பலனை12ம் பாவம் மூலமும் உணர்த்துவதாகும்.
இதில் சூரியன், சந்திரன், சனி, 12-ஆம் பாவ அதிபதி ஆகியோர் முக்கிய பலனைத் தருவதாக கொள்ளலாம்.
தாய்க்கும், தந்தைக்கும் சந்திரன், சூரியன் இயற்கைக் காரர்கள். தந்தை வழி முன்னோர்களுக்கு குருவும், தாய்வழி உறவிற்கு புதன் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்காலத்தில் – ராகுவை தந்தை வழி பாட்டன், பாட்டி எனவும், கேதுவை தாய்வழி பாட்டன், பாட்டி எனவும் கூறுகின்றனர்.
ஸ்தானங்கள்: லக்னம் / சூரியனுக்கு 9-ம் இடம் தந்தையைப் பற்றியும், லக்னம் / சந்திரனுக்கு 4-ம் இடம் தாயாரைப் பற்றி அறியும் விதியாகும்.
சூரியனுக்கு 12ம் இடம் [ ஒன்பதாம் இடத்திற்கு 4-ஆம் இடம் ] மூலம் தந்தை வழி பாட்டியைப் பற்றியும், தாய்வழிப் பாட்டி பற்றி அறிய சந்திரனிலிருந்து 7-ம் இடம் கொண்டும் அறியலாம்.
இந்த இடங்களுக்கு 2 மற்றும் 7மிடம் மாரக ஸ்தானங்கள் ஆகும்.
எனவே, மாரக ஸ்தானத்தில் இருக்கின்ற கோள்கள் அல்லது மாரக ஸ்தான அதிபதிகளின் திசை நடந்தால், மேற்கண்ட உறவுகளுக்கு மாரகம் ஏற்படலாம்.
துவதசாம்சத்தின் விதிகள்:
- லக்னத்திற்கு 12-ல் சந்திரன் இருப்பது தாய்க்கு நன்மை தராது. இளமையில் தாயை பிரியும் நிலை ஏற்படும். அல்லது தாயாரல் நன்மை பெற இயலாது.
- சூரியன் 6 – 8 – 12 ல் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் தந்தையின் உறவு பாதிக்கப்படும்.
- சூரியன் 6 – 8 – 12 ல் இருந்து அல்லது அதன் அதிபதிகளுடன் சம்பந்தம் ஏற்பட்டு, சந்திரன் – தனுசு ராசியில் இருந்தால், தான் பிறக்கும் முன்பே தந்தையை பிரித்து விடுவார் – பிரிந்து விடுவார்.
- ராசியில் சந்திரன், புதன் இணைந்திருந்தாலும், சம சப்தமாக இருந்தாலும் ஜாதகரின் தந்தை இரண்டு திருமணம் செய்து கொள்வார். அல்லது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு இருப்பார். அவர்களுடன் ராகு, கேது தொடர்பு பெறுமானால், கலப்புத் திருமணமாக அமையும்.
- துவதசாம்சத்தில் சந்திரன் + கேது தொடர்பு – தாய்க்கு முன் தந்தை இறந்துவிடுவார்.
- சூரியன் + ராகு சம்பந்தம் தந்தை மனைவியை இழந்து விடுவார்.
- பொதுவாக ஒன்பதாம் பாவம் தரும் பலாபலனை இதன் மூலம் அறியலாம். [ ஆன்மீக உணர்வு, தெய்வ பக்தி, மத நம்பிக்கை, மதம் மாற்றம், அயல் நாடு செல்லும் யோகம், தனது செயலால் செய்யும் சாதனை, உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்தாலும் – தன் பெயரைச் சொல்லும் தகுதி / சாதனைகள் / திறமை பற்றி அறியலாம். 9-ம் பாவம் & அதிபதி பலம் பெற்றிருந்தால் தான் மேற்குறிப்பிட்டவற்றை அனுபவிக்கலாம். ]
- ஒன்பதாம் பாவமும் அதன் அதிபதியும் பலம் பெற்றால், அதாவது கேந்திர திரிகோணங்க்களில் அமர்ந்திருப்பது அல்லது 2 – 11 ல் இருப்பது நன்மை தரும். மாறாக, 6 – 8 – 12ல் இருந்தால் நன்மை குறைவாகும்.
துவாதசாம்சம் என்பது துரியாம்சம் என்றும் கூறப்படும்.
ராசியின் பனிரெண்டாம் பாவத்தின் விரிவாக்கம் துவதசாம்சம் ஆகும்.
ஒரு ராசியில் உள்ள 30 பாகையை 12 சம பிரிவுகளாக பிரிக்க – ஒரு பிரிவிற்கு 2 டிகிரி 30 கலை [ 2.30 டிகிரி ] ஆகும்.
ராசியில் கிரகம் எந்த இத்தில் இருக்கிறதோ, அந்த இட த்தில் இருந்து ஆரம்பித்து வரிசையாக – 12 பிரிவில் எந்த பிரிவில் வருகின்றதோ – அங்கு நிரப்ப வேண்டும்.
0 – 2.30 | 2.30 – 5. | 5 – 7.30 | 7.30 – 10 | 10 – 12.30 | 12.30 – 15 |
15 – 17.30 | 17.30 – 20 | 20 – 22.30 | 22.30 – 25 | 25 – 27.30 | 27.30 – 30 |