திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, தம்பதியர்களுக்கு சந்தான [ புத்திர ] பாக்கியம் உள்ளதா என்பதனை கவனிக்க வேண்டும்.

இங்கு முக்கியமான விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

  • லக்னாதிபதியும் 5-ஆம் அதிபதியும் சேர்ந்து திரிகோணம் அல்லது கேந்திரத்தில் இருந்தால் ஜாதகருக்கு புத்திரர் உண்டு. அவர்கள், புத்திரர்களால் அதிகமான சுகங்களைப் பெறுவார்கள்.
  • ஐந்தாம் அதிபதி 6 – 8 – 12 ல் நின்றால் புத்திர சுகம் தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மனத் திருப்தி ஏற்படாது.
  • ஐந்தாம் அதிபதி சூரியனுடன் அஸ்தங்கம் , அசுபர் சேர்க்கை அடையக் கூடாது.
  • ஐந்தாம் பாவ அதிபதி 6-ல் நின்றிருக்க, லக்னாதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் காகபத்திய தோஷம் ஜாதகருக்கு ஏற்படுகின்றது. காகபத்திய தோஷம் என்பது குழந்தை பிறக்கும் ஆனால் அந்த குழந்தை தங்காமல் போய்விடக் கூடிய நிலை. அதாவது குழந்தை பிறந்தபின் இறந்துவிடும்.
  • ஐந்தாம் அதிபதி நீச்சம் அடைந்து, ஐந்தாம் பாவத்தில் சனி அல்லது கேது இருந்தால் ஜாதகரின் களத்திரம் காகபத்திய தோஷத்திற்கு ஆளாகின்றார்.
  • ஐந்தாம் அதிபதி 6 – 8 – 12 ல் நின்று நீச்சம் நிலையில் இருந்தாலும், காகபந்திய தோஷம் ஏற்படும். [ குழந்தை பிறந்த பின் அல்லது வளர்ந்த பின் திடீரென நோய்வாய்ப்பட்டு, தீவிர நோயாகி திடீரென இறந்து விடும் ]
  • ஒன்பதாம் அதிபதி ஐந்தில் நின்று, ஐந்தாம் அதிபதி நீச்சம் பெற்றிருந்து புதன் அல்லது கேது நின்றால் – ஜாதகர் மருத்துவம் பார்த்தோ அல்லது தனது ஜாதகப்படி உரிய பரிகாரம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். தீவிர கடின முயற்சிக்குப் பின் குழந்தை பாக்கியம் கிட்டும்.
  • ஐந்தாம் அதிபதி 6 – 8 – 12 ல் நின்று நீச்சம் பெற்று ஐந்தாம் பாவத்தில் அசுபர்கள் நின்றால் தீவிர முயற்சிக்குப் பின் குழந்தை பிறக்கலாம்.
  • ஐந்தாம் பாவம் புதனின் ராசியாக அமைந்து சனி அல்லது மாந்தி ஐந்தாம் பாவத்துடன் தொடர்பு கொண்டால், ஜாதகருக்கு தத்து புத்திர வாய்ப்பு உண்டு.
  • ஐந்தாம் பாவத்தில் 6 கோள்கள் நின்று, ஐந்தாம் அதிபதி 12-ல் நின்று, லக்னாதிபதி சந்திரன் பலம் பெற்றால் அந்த ஜாதகருக்கு தத்து புத்திரன் எடுக்க வாய்ப்பு உண்டு.
  • ஐந்தாம் பாவத்தில் அசுபர்கள் நின்று, குருவிற்கு ஐந்தாம் பாவத்திலும் அசுபர்கள் இருந்தால், ஜாதகரின் முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை என அறிய வேண்டும்.
  • இந்த விதிகள் மனப்பாடமாக மனதில் இருக்க வேண்டும். 
  • பாவ அதிபதி, காரகர், லக்னாதிபதி, சந்திரனின் பலம் இவைகளை நன்றாக கவனித்து பலன் சொல்லுதல் அவசியம்.