சப்தாம்சம் வர்க்கச் சக்கரம் மூலமாக குழந்தைப் பேறு பற்றி நன் கு அறியலாம். 

ராசியில் ஐந்தாம் பாவத்தின் செயல்பாடுகலை தெளிவாக காட்டும் வர்க்கப் பிரிவு டி7 எனப்படும் சப்தாம்சம்.

ஜாதகரின் குழந்தைகளால் கிடைக்கும் இன்ப துன்பங்கள். குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தை ஆணா பெண்ணா, குழந்தைகளுடனான உறவு நிலை ஆகியவற்றை அறியலாம்.

ஒரு ராசி சக்கரத்தின் 30 டிகிரி அளவை 7 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

ராசிக் கட்டத்தில் ஆண் ராசியில் கிரகம் இருப்பின், கிரகம் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணி வரிசையாக அமைக்க வேண்டும். 

பெண் ராசியில் கிரகம் இருப்பின் கிரகம் இருக்கும் இடத்திலிருந்து ராசிக் கட்டத்தில் 7வது ராசியில் இருந்து எண்ணி வரிசையாக அமைக்கப்பட வேண்டும்.

  •  முதல் பிரிவு: 0 – 4.17 டிகிரி வரை – ராசி கட்டத்தில் இருக்கும் கிரகம் , கிரகம் டி7-ல் இருக்கும் இடத்திலேயே அமையும். 
  •  இரண்டாம் பிரிவு: 4.17 டிகிரி முதல் 8.34 டிகிரி வரை – இரண்டாம் பிரிவு. ராசிக்கட்டத்தில் கிரகம் இருக்கும் இடத்திலிருந்து இரண்டாம் இடத்தில் டி7.ல் போட வேண்டும்.
  • மூன்றாவது பிரிவு: 8.34 டிகிரி முதல் 12.51 டிகிரி வரை – டி7-ல் 3 வது இடத்தில் போட வேண்டும்.
  • நான்காம் பிரிவு: 12.51 டிகிரி முதல் 17.08 டிகிரி வரை. ராசி கட்டத்தில் கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 4ம் ராசியில் டி7-ல் போட வேண்டும்.
  • ஐந்தாம் பிரிவு: 17.08 டிகிரி முதல் 21.25 டிகிரி வரை – ராசியில் கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 5 வது ராசியில் டி7-ல் போட வேண்டும்.
  • ஆறாம் பிரிவு: 21.25 டிகிரி முதல் 25.42 டிகிரி வரை – ராசியில் கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 6 வது ராசியில் டி7-ல் போட வேண்டும்.
  • ஏழாம் பிரிவு: 25.42 டிகிரி முதல் 30 டிகிரி வரை – ராசியில் கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 7வது ராசியில் டி7-ல் போட வேண்டும்.
  • கிரகங்கள் பெண் ராசியில் இருந்தால் ராசிக்கட்டத்தில் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் பாவத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
  • டி7 அமைக்கும் முறை : உதாரண ஜாதக கட்டம்.
  •   செவ்சந்திரன்லக் ராகு மா
     ஆண் ஜாதகர் –  ராசி கட்டம் 
     சனி 
     குருகேது பு  சூரிசுக்
  •  லக்னம் 27.10 ; சூரியன் – 15.30 ; சந்திரன் – 26.23 டிகிரி; செவ்வாய் – 22.0 டிகிரி; புதன் – 02.11 டிகிரி; குரு 26.59 டிகிரி ; சுக்கிரன் 11.22 டிகிரி; சனி 02.06 டிகிரி; ராகு / கேது – 27.54 டிகிரி 
  •   சு ரா லக் குரு
     செவ்சப்தாம்சம் சனி
     சூரி 
     கே பு சந்தி மா

 

1. முதல் பிரிவு: காரம்சப்தாம்சம் எனப் பெயர். 0 டிகிரி முதல் 4.17 டிகிரி வரை. 

இந்தப் பிரிவில் பிறந்த ஜாதகர் குழந்தைகளின் மூலமாக சுகப்பட மாட்டார்கள். குழந்தைகளின் மூலம் துன்பத்தையும் அவ மரியாதையும்  உண்டாகும். மற்றும் குழந்தைகளால் அவமரியாதையாகவும் நடத்தப்படுவார்கள்.

குழந்தைகளின் மூலம் தன்மானம் இழத்தல், மன உளைச்சல், சோர்வு போன்றவற்றை அனுபவிப்பார்கள்.

2. இரண்டாம் பிரிவு: பால் சப்தாம்சம் எனப்படும். இந்த பிரிவில் பிறந்த ஜாதகர் உண்மையுள்ள நற்பண்புகளை ஆடம்பரமில்லாத குழந்தைகளை பெறுவார்கள்.

குழந்தைகள் பெற்றோர்களை நன்கு பராமரிப்பார்கள்.

மேலும், சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பெற்றோர்களை முன்னிலையில் வகிக்கச் செய்வார்கள்.

3. மூன்றாம் பிரிவு: தயிர் சப்தாம்சம்: உறுதியான மனம்; அமைதி; மென்மை; கவர்ச்சிகரமான தோற்றமுள்ள பிள்ளைகளை பெறுவார்கள்.

மேலும், ஜாதகரின் குழந்தைகள் பெற்றோரை பாதுகாப்பவர்கள். தங்களின் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். பெற்றோருக்கு மகிழ்ச்சித் தரதக்கவர்கள் ஆவர்.

4. நான்காம் பிரிவு: நெய் சப்தாம்சம் ; நன்னடத்தை; மதப்பற்று; மரியாதைக்குரிய குழந்தைகள்.

ஜாதகருக்கு பேரும் புகழும் செல்வமும் பெற்று தருவார்கள்.

மேலும், சாத்வீக குணம் உடையவராகவும் சேவை செய்து மன திருப்தி அடைபவராகவும் இருப்பார்கள்.

5. ஐந்தாம் பிரிவு: கரும்புச்சாறு சப்தாம்சம்: இயற்கையில் இனிமையான நேர்மையான குணம் உடையவர்கள். சில சமயம் குழந்தைகள் முரட்டுத் தனம் பலம் பெற்றவர்கள் மற்றும் உறுதியான மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

6. ஆறாம் பிரிவு: தேன் சப்தாம்சம்: ஜாதகரின் குழந்தைகள் வேடிக்கை, வினோத பிரியர்கள். எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் குணம் உடையவர்கள். 

மகிழ்ச்சி தான் வாழ்க்கை என்ற எண்ணம் உடையவர்கள். ஜாதகருக்கு உதவும் குணம் உள்ளவர்கள்.

7. ஏழாம் பிரிவு: சுத்த ஜல சப்தாம்சம்: குழந்தையின் புனிதத் தன்மை மதப்பற்று; சுத்தமான நல்ல பழக்க வழக்கங்கள்; உயர்ந்த குணங்களை  உடைய குழந்தைகள் பிறப்பார்கள்.

தீயவர்களின் சேர்க்கை இவர்களுக்கு கிடையாது. குழந்தைகளுக்கு ஜாதகருக்கு சுகவாசம், மதிப்பை மகிழ்ச்சியை பெற்றுத் தருவார்கள்.

இது ஆண் ராசியில் லக்னம் இருந்தால் . இதுவே பெண் ராசியில் லக்னம் இருந்தால் இந்த வரிசை தலைகீழாக அமையும்.