ASTROLOGY
Thank you for reading this post, don't forget to subscribe!கிரகங்கள் தரும் பலங்கள்
- சந்திரன்
இடம் | பலன் |
லக்னத்தில் | நீண்ட ஆயுள் உண்டு. |
2-ல் 2-5-7-9-10-11ல் | அழகானவர். உணவில் உப்பு இல்லாததால் சண்டை வரும். நீண்ட ஆயுள் உண்டு. |
6-8-12 -ல் | 60% நன்மைகள் தருவார். |
3- 4 ல் | சகோதர வழி உறவுகள் மற்றும் தாயார் வழி உறவுகளால் ஆதரவு உண்டு. |
விருச்சிகத்தில் | நீச்ச நிலையில் இருந்தால் மன பயம், சில நேரங்களில் பைத்தியம் போன்ற மன நிலை, மறதி இருக்கும். ஆனாலும் பாக்கியவான். |
| சந்திரன் நின்ற வீட்டிற்கு நேர் 7-ம் பாவ உறவிற்கு மண வாழ்க்கை சரியிருக்காது. |
செவ்வாய்
2-ல் | புகையிலை போடும் பழக்கம் வரும். தவிர்க்க வேண்டும். ஆயுள் குற்றம் உண்டு. |
3-4ல் | சகோதரரால், தாயாரால் பலம் கூடும். அனுசரித்து செல்வதுடன் நல்ல ஒத்துழைப்பும் தருவார்கள். |
6 – 7 – 8 ல் | மண வாழ்வில் சிக்கல், போராட்டம் |
9-ல் | மொழி அறிஞர். 9-ம் வீடு செவ்வாய் வீடானால், வேதியியல் பேராசிரியராக ; உருக்காலை அதிகாரியாகவோ – உயர் பதிவியில் இருப்பார். |
12-ல் | கோயிலில் திருமணம் நடக்கும். |
7-ல் | களத்திரம் சண்டையிடுவார். சண்டைக்காரி. கோபக்காரி. |
3-ம் பாவத்திற்கு 7-ல் சந்திரன் இருந்தால் சகோதரது மணவாழ்வு சரியில்லை.
4-ம் அதிபதிக்கு 7-ல் சனி இருந்தால் தாயார் வய்து மூத்தவர் கணவரைவிட [ அதிக வயது வித்தியாசம் இருக்கும் . சூரியன் நின்றால் கணவர் வயது மூத்தவர். ]
4-ம் அதிபதி 7-ல் புதன் இருந்தால் வயது குறைந்த கணவர் / மனைவி.
சனி பார்க்கும் இடம் உடைசல். சனியுடன் வேறு கிரகம் இருந்து பார்த்தால் உடையும்.
லக்னம், லக்னாதிபதியை ராகு பார்த்தால் உடல் பெரியது. அதிக ஆசை, திருட்டுத்தனம் இருக்கும்.
4ஆகு 5-ம் இடத்தை / குருவை பார்த்தால் குழந்தை குண்டாக இருக்கும். வயிறு பெரிதாக இருக்கும். 7-ம் இடத்தை ராகு பார்த்தால் மனைவி குண்டு. பேராசை கொண்டவர்.
சுக்கிரன் பார்க்கும் இடம் தப்பி பிழைப்பார்கள். பிழைத்து மீண்டு வருவார்கள். 6-ம் இடம் / 12-ம் இடத்தின் மீது சுக்கிரனின் பார்வை பட்டால் நோயிலிருந்து மீண்டு விடுவார்.
சுக்கிரன் இருக்கும் இடத்தை தாங்குவார். தாங்க கூடிய இடம்.
குருவின் 5-ம் பார்வை போராடி வெற்றி பெறும். கெடுதலையும் அதிகம் தரும். 7-ம் பார்வை படும் இடத்தில் திருட்டுப் போகும். அல்லது திருட்டுத்தனமும் இருக்கும். 9-ம் பார்வை படும் இடம் எளிதில் வெற்றி பெறும். நன்மை அதிகம் கிட்டும்.
லக்னாதிபதி + 7ம் அதிபதி தொடர்பு / லக்னாதிபதி + 3ம் அதிபதி தொடர்பு / சந்திரன் + 7ம் அதிபதி தொடர்பு – பரிசு கிடைக்கும்.
கேது எங்கு உள்ளாரோ அந்த நாளில் எமகண்ட நேரத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்கி வைத்தால் அது தங்கம் சேர்வதற்கான யோகத்தைத் தரும்.
கேது 6 – 8 – 12ல் சம்பந்தப் பட்டால் பசி தாங்கமாட்டார்.
ஒவ்வொரு கிரகமும் ஒரு வீட்டை பாதிக்கும்.
- சூரியன் நின்ற இடத்திலிருந்து 9ம் வீட்டை பாதிக்கும்.
- சந்திரன் நின்ற இடத்திலிருந்து 6-ம் வீட்டை பாதிக்கும்.
- செவ்வாய் – 7ம் வீட்டை பாதிக்கும்
- சுக்கிரன் – 8ம் வீட்டை பாதிக்கும்.
- புதன் – 10ம் வீட்டை பாதிக்கும்.
- குரு – 11ம் வீட்டை பாதிக்கும்.
- கேது – 12ம் வீட்டை பாதிக்கும்.
- சனி நின்ற இடமே பாதிக்கும்.
- குருவும் நின்ற இடமே பாதிக்கும்.
ஒரு கிரகம் அஸ்தமனம் ஆனால், அஸ்தமனம் ஆன கிரகம் நின்ற நட்சத்திர சார நாதனின் விருட்சத்தை [ மரம் ] வணங்கினால் அந்த கிரகம் பலம் பெற்று இயங்க ஆரம்பித்து விடும்.
குரு, புதன், சுக்கிரன் லக்கினத்திற்கு கேந்திரங்களிலோ அல்லது திரிகோணங்களிலோ நின்றால் தீர்க்காயுசு. இவர்கள் 2-3-11ல் இருந்தால் மத்திம வயது. 6-8-12ல் இருந்தால் அற்ப ஆயுள்.
12-8-6 ல் இருக்கும் கிரகம் தனது ராசிக்குண்டான அசுப பலன்களஈச் செய்யும்.
6-8-12ம் இடத்து அதிபர்கள் தாங்கள் பார்க்கும் பாவத்திற்கு நாசம் செய்வார்கள்.
சுக்கிரன் (12), புதன் (8), குரு (6)-ல் இருந்தால் சுபத்தையே செய்வார்கள்.
12, 8, 6 ம் இடத்து அதிபர்கள் தங்களின் சத்துரு வீட்டில் இருந்தாலோ / நீச்ச வீட்டில் இருந்தாலோ / அஸ்தமனம் அடைந்தாலோ / கிரக யுத்த த்தில் தோல்வி அடைந்தாலும் 6 – 8 -12 ல் உள்ள கிரகங்கள் ஜாதகனுக்கு நல்ல பலனைத் தருவார்கள்.
சூரியன், சனி பகவான் – 9ம் வீட்டில் இருந்தால் நல்ல பலன் தருவார்கள்.
புதன் – 8ல் நல்ல பலன் தருவார்.
சுக்கிரன் -12ல் இருந்தாலும், சனி வீட்டில் இருந்தாலும் பொருளாதாரம் மற்றும் சுகமுண்டு. ஆனால் குடும்பத்தில் சண்டை, நிம்மதியின்மை இருக்கும்.
வளர்பிறை சந்திரன், குரு, சனி இருக்கும் இட த்திலிருந்து 2 மற்றும் 12 ம் வீட்டிற்கு நன்மை செய்வார்கள்.
அங்கங்களுக்குரிய ராசியில் – பாவ கிரகங்களில் இருந்தால் காயத்தினால் நோய் உண்டாகும். சுப கிரகங்கள் பார்த்தால் காயம் ஆறி வடுவாக மாறிவிடும்.
சுப கிரகங்கள் இருந்தால் மரு உண்டாகும்..
நவாம்சத்தில் எல்லா கிரகங்களும் குரு வீட்டில் இருந்தால் இளம் வயதிலே சன்னியாசி ஆவார்.
ஜென்ம லக்னத்திற்கு 9-ல் குரு இருந்தால், அந்த ஜாதகனுக்கு விவசாயம் செய்து நல்ல தனம் ஈட்டுவான்.
நவாம்ச லக்னத்தில் கேது இருந்து, சுக்ரன் பார்த்தால் யாகம் செய்து வைப்பவராகவோ, தானே யாகம் செய்பவராகவோ இருப்பார்.
கோட்சாரத்திற்க குரு ஜென்ம நட்சத்திரத்திற்கு 3 – 5- 10 – 15 – 19 – 25 – 27 ம் நட் சத்திரத்தில் நற்பயனையும், சனி பகவான் இந்த நட்சத்திரங்களில் கெடு பலனையும் தருவார்கள்.
2-ம் இடம் மரணம் ஏற்படும் சந்தர்ப்ப சூ நிலை சொல்லும்.
6-ம் பாவம் மரணத்திற்குரிய காரணத்தைக் குறிக்கும்.
8-ம் பாவம் மரணத்தைக் குறிக்கும்.
11-ம் பாவம் மரணத்தை தவிர்ப்பதற்கு வழி சொல்லும்.
உப கிரகங்கள் தீமை தான் தரும். அரிதாக சில வீடுகளில் மட்டும் நற்பலன் தரும். 6-ல் தூம கேது இருந்தால் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். 11-ல் தூமன் இருந்தால், சொத்து சேரும். உபகேது / தூம கேது 2-ல் இருந்தால் பிரசவம் மிகவும் சிரமத்தை அனுபவிப்பார்கள். குழந்தை கொடி சுற்றி பிறக்கும். இந்த குழந்தை வாழ்க்கையில் நிறைய கஷ்டப்படும். கஷ்டப்பட்டு தான் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
சூரியன் – காலன் – உத்தியோகம்
சந்திரன் – அமிர்தம் – சுகம்
செவ்வாய் – மிருத்யூ – ரோகம்
புதன் – அர்த்தப் பிரகணன் – தனம்’
குரு – எமகண்டன் – லாபம்.
சனி – சோரம் – விஷம்.
எமகண்ட நேரத்தில் செடி, கொடி வைக்க அருமையாக வளரும். எமகண்ட நேரம் – வளர்ச்சி தரும்.
மையப் பகுதி – உப கிரகங்கள் நிற்கும் இடமாகும். [ 22.5 /2 = 11.25 = 47 நிமிடம் ]. பிரச்சினை தரும் செவ்வாய் கிழமை . சூரிய உதயம் + 22.5 [ சூரியன் 45 டிகிரியில் பயணிக்கின்றார் எனில் 45 டிகிரி + 22.5 டிகிரி = 67. 5 டிகிரி மிருத்யூ ( கடுமையான நேரம் – 11.25 . சூரிய உதயத்திலிருந்து 47 நிமிடங்கள் அசுபமான நேரம். கடுமையான பிரச்சினைத் தரக்கூடிய நேரம் என உணர்க.
ஒரு ஜாதகத்தில் சனி, செவ்வாய், சுக்கிரன் மூவரும் சேர்ந்து எங்கிருந்தாலும் அந்த ஜாதகர் விதவையை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் மூவரும் ஒரே நட்சத்திர சாரம் பெற்றாலும் விதவையை திருமணம் செய்வது நல்லது. பெண் ஜாதகத்தில் இருந்தால் மனைவியை இழந்த ஆணை / விவாகரத்து பெற்ற ஆணை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதனை சனியும் கேதுவும் சொல்லும்.
5-ல் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகர் தனது அத்தை / சகோதரிகளுக்கு நிறைய உதவிகள் செய்தால் தான் ஜாதகரின் பெண் குழந்தையின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
குரு வீட்டில் கேது இருப்பவர்கள் பறவைகளுக்கு அன்னம் வைக்க வேண்டும்.
கேது தான் இருக்கும், பார்க்கும் இடங்களுடன் 6-ம் பாவத்து வேலையையும், 12ம் பாவத்து வேலையையும் சேர்த்து செய்யும். கேது தடை / தாமதம் / தீரா நோய் / விபத்து / வழக்கு தருவார். கேது எந்த கிரகத்துடன் சேர்கின்றதோ அந்த காரக உறவிற்கு கடன் ஏற்படும். சூரியன் + கேது எனில் அப்பாவிற்கு கடன்.அப்பாவால் கடன் ஏற்படும்.
செவ்+கேது எனில் சகோதருக்கு கடன்.. சகோதரரால் கடன் ஏற்படும்.
சந்திரன் + கேது எனில் தாயாருக்கு கடன் ஏற்படும். ஜாதகருக்கு தாயாரால் கடன் ஏற்படும்.
சனி கேது – தொழில் செய்ய கடன். தொழிலுக்காக கடன் ஏற்படும். நட்டம் ஏற்படும். அது மட்டுமல்ல. கேது தான சொத்து. எந்த கிரகத்துடன் சேர்ந்துள்ளதோ, அந்த வழி உறவு மூலமாக சொத்து, பூர்வ புண்ணியமும் உண்டு.
விபத்தில் – சனி : அடி குறைவாகவும் காயம் ஏற்படும். அது குணமாக நீண்ட காலமாகும். சூரியன் – அடிபலமாக அதே சமயத்தில் எலும்பு உடையும்.