ஜோதிட விதிகள் – பகுதி: 2:
Thank you for reading this post, don't forget to subscribe!- ஒரு ஜாதகத்தில் நவாம்சத்தில் கன்னியில் செவ்வாய் இருந்து , ராசிக் கட்டத்தில் செவ்வாய் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கின்றாரோ, அது லக்னத்திற்கு எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக காரகத்தை அழித்தே தீருவார்.
1 – ம் இடத்தில் [ லக்னத்தில் ] செவ்வாய் இருந்தால் தன்னைத் தானே கெடுத்துக் கொள்வார்.
2 – ம் இடத்தில் செவ் – தன் குடும்பத்தையும் & தனத்தையும் அழிப்பார்.
3 – ம் இடத்தில் செவ் – முயற்சி, வீரியம், தைரியம், விளையாட்டு, தகவல் தொடர்பு, சகோதர உறவு பிரிவு கெடும்.
4 – ம் இடத்தில் வண்டி, வாகனம், வீடு, தாய்வழி உறவு கெடும்.
5 – ம் இடத்தில் செவ் – தன் புத்திரனையே அழிக்கும்.
6 – ம் இடத்தில் செவ் – மாமன் வர்க்கத்தை அழிக்கும் / கெடுக்கும்.
7 – ம் இடத்தில் செவ் – மனைவி, நண்பர்கள், உறவு கெடும்.
8 – ம் இடத்தில் செவ் – ஆயுளுக்கு பங்கம் வரும்.
9 – ம் இடத்தில் செவ் – தந்தை & தன் கௌரவத்தை பாதிக்கும்.
10 ம் இடத்தில் செவ் – தொழிலை பாதிக்கும்.
11 – ம் இடத்தில் செவ் – தன்னுடைய மூத்தவரை ; லாபத்தை ; இரண்டாம் மனைவியை பாதிக்கும் / அழிக்கும்.
12 – ம் இடத்தில் செவ் – தன் ஞாபகத் திறனை / தூக்கத்தை / முதலீடு போட்ட தொழிலின் முதலீட்டை – பாதிக்கும்.
- லக்னத்திற்கு 2 – ல் செவ்வாய் இருந்தால் எதையுமே நிலை நிறுத்தும் சாமர்த்தியம் குறைந்து போகும்.
- லக்னத்திற்கு 3 – ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யும் காலத்தில் சகோதரனுக்கு ஹார்ட் அட்டாக் வரும்.
- ஒரு ஜாதகத்தில் தனாதிபதிக்கு வீடு கொடுத்தவன் [ இரண்டாம் அதிபதிக்கு ]லக்னத்திற்கு 6, 8, 12 –ல் மறைந்தால் தனம் அழிந்து குடும்பத்தை பாதிக்கும்.
- ஒரு ஜாதகத்தில் தனாதிபதி நீச்சம் பெற்று, பாவர் தொடர்பு பெற்றால் தனம் அழிந்தே தீரும்.
- ஒரு ஜாதகத்தில், 4 –ம் அதிபதி, 8 –ம் அதிபதி, சுக்ரன் இவர்கள் மூவரில் இருவர் பலம் இழந்தால் வாகன விபத்து மட்டும் ஏற்படும்.
- ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி ஐந்தில் அமர்ந்தால், ஜாதகர் நல்ல அறிவாளி. ஆனால், ஜாதகர் அவரின் ஒரு புத்திரனை இழப்பார்.
- ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை சனி, செவ்வாய் பார்த்தால் பூர்வீக சொத்து, தன்னுடைய புத்திரன், தன் புத்தி மூன்றும் கெட்டுப் போகும். பாதிக்கும்.
- ஒரு ஜாதகத்தில் குரு ஆறில் அமர்ந்திருந்தால் ஊரில் நல்ல பெயர் இருக்காது. பகை வரும்.
- பிரளய ராசிகள் = நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனமாகும். எந்த ஒரு கிரகமும் நவாம்சத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று நீர் ராசிகளில் ஒன்றில் அமர்ந்தால், அந்த கிரகத்தின் காரகத்துவ ரீதியாக ஜாதகர் பிரச்சினையை அனுபவிப்பார்.
சுக்கிரன் எனில் மனைவி, சகோதரியாலும்,
செவ்வாய் எனில் சகோதரனாலும்,
புதன் எனில் தாய் மாமனாலும்
குரு எனில் புத்திரனாலும்,
சூரியன் எனில் தந்தையாலும்,
சந்திரன் எனில் தாயாலும் பிரச்சினை வரும்.
- ஒரு பெண் ஜாதகத்தில் செவ்வாய் – லக்னத்திற்கு 3, 6, 8, 12 –ல் நின்று , அம்சத்திலும் 3, 6, 8, 12 –ல் மறைந்தால் கணவன் வழியில் பணம் இழப்பு, வம்பு வழக்கு வந்தே தீரும். சுபர் பார்க்க நன்மையும் துன்பமும் கிட்டாமல் போகும்.
- ஒரு ஜாதகத்தில் எட்டாம் அதிபதி மூன்றாம் இடத்திலே அமர்ந்து, சுபர் தொடர்பு பெற்றால் பூரண ஆயுள் உண்டு. அதுவே அட்ட்மாதிபதி மூன்றாம் இடத்தில் அமர்ந்து பாவர் தொடர்பு பெற ஆயுள் பங்கம் ஏற்படும்.
- சனி செவ்வாயை பார்த்தால் 32 வயதில் மரணத்திற்கொப்பான கண்டம் ஏற்படும்.
- சனி + ராகு – விஷம் அருந்துவார். சனி + கேது = தூக்கு [ கயிற்றால் ] மாட்டிக் கொள்வார்.
- ஒரு ஜாதகத்தில் எட்டாம் இடத்தை , எட்டாம் அதிபதியை, லக்னாதிபதியை, லக்னத்தை குரு பார்த்தால் ஆயுள் குற்றம் ஏற்பட்டாலும் மீண்டு வந்து விடுவார்.
- ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி நிஷ்பலம் பெற்றால் ஜாதகர் பலவீனம் அடைவார்.
- செவ்வாயை குரு பார்த்தால் ஜாதகர் மிடுக்காக இருப்பார்.
- குருவிற்கு நட்சத்திர சாரம் கொடுத்தவன் லக்னத்திற்கு எந்த பாவத்தில் இருக்கிறாரோ அந்த பாவம் பாதிக்கும். உ-ம். செவ்வாய் –ல் . குரு சித்திரை நட்சத்திர சாரம் எனில், தனம், குடும்பம் கெடும்.
- ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இரண்டு பேரும் மிதுனம் முதல் கன்னி ராசிக்குள் இருந்தால் பெண்களால் துன்பத்தை அடைந்தே தீர்வார். பெண் ஜாதகத்திற்கு பொருந்தாது.
சுக்கிரன் [ மிதுனம் – மிருகசீரிடம் 3, 4; சித்திரை 1, 2ம் பாதத்தில் இருப்பதுவும், செவ்வாய் பூரம் 1, 2, 3, 4ம் பாதத்தில் இருப்பது பெண்களால் பாதிப்பு வந்தே தீரும்.
- ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி பகவான் 3, 6, 8ம் இடத்தில் இருந்தால் கணவனை காலால் எட்டி உதைக்கும் அளவிற்கு தைரியசாலி.
- ரிஷபம், துலாமில் சூரியன் நின்று பாவர் தொடர்பு பெற்றால் பெண்ணிற்கு 28 – 30 வயதில், ஆணிற்கு 32 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும்