கோட்சார கிரகங்களுக்கான வேதை தரும் இடங்கள்:
1. சூரியன்:
ஜெனன கால சந்திரன் [ ஜென்ம ராசிக்கு ] நிற்கும் இடத்திலிருந்து கோட்சார சூரியன் 3 – 6 – 10 – 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது சுப பலன்களைத் தருவார் என்பது பொது விதி.
ஆனால், சூரியனின் வேதை ஸ்தானங்கள் 9 – 12 – 4 – 5ம் இடங்களாகும். அதாவது 3 ம் பாவத்திற்கு 9 -ம் பாவம் வேதை ஆகும்.
6 -ம் இடத்திற்கு 12 ம் இடம் வேதை.
10ம் பாவத்திற்கு 4 -ம் இடம் வேதை.
11ம் இடத்திற்கு 5-ம் இடம் வேதை. [ வேதையை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது என்றால் ஒரு கிரகம் உச்சம் பெறும் இடத்திற்கு 7-ம் இடத்தில் நீச்சம் பெறுவது போல ஒரு கிரகம் சுப பலனைத் தரும் இடத்திற்கு 7-ம் இடம் வேதை [ வதை ] ஆக வருகின்றது.
உதாரணமாக ஜெனன கால சந்திரன் மேஷத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். கோட்சார சூரியன் மிதுனத்தின் மீதும், கோட்சார குரு தனுசுவிலும் என எடுத்துக் கொண்டால், சூரியன் 3-ல் சுப பலனைத் தர வேண்டும். 3ம் இடத்திற்கு 9ம் இடம் வேதையாக தனுசு வருகிறது. அங்கு கோட்சார குரு. வேதை ஸ்தானத்தில் இருப்பதால் சூரியனால் சுப பலனைத் தர இயலாது. தனுசுவில் எந்த கிரகமும் இல்லை எனில் சுப பலனால் ஜாதகர் மகிழ்ச்சி கொள்வார் .
சூரியனுக்கு சனியினால் வேதை கிடையாது. அப்படி எனில் வேதை ஸ்தானத்தில் சனி இருந்தால் சுப பலனையே தருவார்.
சந்திரன்: 1 -3 -6 -7 -10 – 11 ஆகிய இடங்களில் சுப பலன்களையும், 5 – 9 – 12 – 2 – 4 – 8 ஆகிய இடங்கள் வேதை. சந்திரனுக்கு புதனால் வேதை கிடையாது.
செவ்வாய் : சுப பலன் 3 – 6 – 11 . வேதை தரும் இடங்கள் : 12 – 9 – 5 ஆகும்.
புதன் : சுப பலன்: 2 -4 – 6 – 8 – 10 – 11 . வேதை : 5 – 3 – 9 – 1 & 12. புதனுக்கு சந்திரனால் வேதை கிடையாது.
குரு : சுப பலன் : 2 – 5- 7 – 9 – 11. வேதை 12 – 4- 3 – 10 – 8.
சுக்கிரன் : சுப பலன்: 1 – 2- 3 – 4 – 5- 8 – 9 – 11 – 12. வேதைள் 8 – 7 – 1 – 10 – 9 – 5- 11 – 6 – 3 ஆகிய இடங்களில் ஒரு கிரகம் இருந்தால் வேதையாக செயல்பட்டு சுப பலனைத் தர இயலாது.
சனி, இராகு & கேது: சுப பலன் 3 – 6 – 11. வேதைள் 12 – 9 – 5. சனிக்கு மட்டும் சூரியனால் வேதை கிடையாது.
கோட்சார கோள் பொது விதிப்படி அசுபம் தரும் நிலையில் இருக்கும் போது, அதற்கு இணையாக வேறு குறிப்பிட்ட ஓர் இடத்தில் வேறு ஒரு கோள் கோச்சாரத்தில் இருந்து அசுப பலனை இல்லாமல் செய்வது – இது விபரீத வேதை எனப்படும். உ-ம் : சூரியனுக்கு அசுபம் தரும் ஸ்தானங்கள் 9 – 12 – 4 – 5 எனில் விபரீத வேதை ஸ்தானங்களாக 3 – 6- 10 – 11 என வரும். இவ்வாறே ஒவ்வொரு கிரகத்திற்கும் அறியவும்.
உதாரணமாக சந்திரன் நின்ற ஜென்ம ராசியில் இருந்து கோச்சார செவ்வாய் 12 -ல் வரும் போது அசுப பலனைத் தருவார். ஆனால், ஜென்ம ராசியில் இருந்து 3ம் பாவத்தில் கோட்ச்சாரத்தில் ஏதேனும் கிரகம் இருந்தால் செவ்வாய் அசுப பலனைத் தரமாட்டார். செவ்வாய் 12ல். புதன் 3-ல் இருப்பதாக கொண்டால், புதன் அங்கு இருக்கும் வரை செவ்வாய் அசுப பலனைத் தரமாட்டார்.
ஒருவரின் ஏழரை சனியின் ஆரம்ப காலம் எனில் [ ஜென்ம ராசிக்கு 12-ல் சனி வரும் போது ] ஜென்ம ராசிக்கு 3 -ல் கோட்சார குரு இருந்தால், கோட்சார குரு இருக்கும் ஓராண்டு காலம் சனியின் கொடுமை இருக்காது.
ஜென்ம குரு [ 1-ல் ] விபரீத வேதை ஸ்தானம் இல்லை என்பதால் ஜென்ம குரு கோச்சாரத்தில் இருக்கும் காலத்தில் அந்த ஜாதகர் குருவின் முழு அசுப பலனை அனுபவித்து தான் தீர வேண்டும்.
கோச்சார சந்திரன் எந்த ராசியில் பயணிக்கின்றதோ அன்று அந்த ராசிப்படியான உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. உதாரணமாக சிம்ம ராசியில் சந்திரன் போகும் போது வயிறு தொடர்பான அறுவை சிகிச்சை கூடாது. செய்தால், அதிக உதிரப் போக்கு ஏற்படும். தொந்தரவுகள் அதிகமாகும். சீக்கிரம் குணம் கிட்டாது.
கோட்சாரம் தரும் சம்பவம் உடனே மாறிவிடும். ஆனால், தசா புத்தி தரும் சம்பவம் நிரந்தரமானது. நோய் வந்தவுடன் தீர்வது கோச்சாரம். வாழ் நாள் முழுவதும் மருந்து சாப்பிட வைப்பது தசா புத்தி பலனாகும்.
பிறந்த கால ஜாதகத்தில் பகை கிரகத்துடன் சேர்ந்த கிரகம், கோட்சாரத்தில் பகை கிரகத்துடன் சேரும் போது / பகை கிரகத்தின் மீது வரும் போது பாதிப்பு அதிக அளவில் இருக்கும்.
பிறந்த கால ஜாதகத்தில் பகை கிரகத்துடன் சேர்ந்த கிரகம் கோச்சாரத்தில் தனது நட்பு கிரகத்துடன் சேரும் போது பாதிப்பை சற்று குறைவாகவே தான் கொடுக்கிறது.
கோட்சாரம் கெட்ட பலனை கொடுத்தாலும் தசா, புத்தி, அந்திரம் சாதகமாக இருந்தால் ஜாதகரால் கெட்ட பலனால் ஏற்படும் விளைவுகளை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கும்.
சாதகமாக இல்லை எனில், அவரால் தாங்கிக் கொள்ள முடியாதபடி இருக்கும்.
ஒருவருக்கு பிறந்த காலத்தில் பல கிரகங்களுடன் சேர்ந்த கிரகம், கோச்சாரத்திலும் தனது பலனை வெளிப்படுத்தும் போது பல கிரகங்களின் தன்மையை காட்டுகிறது.
பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் பாகையில் வேறு எந்த ராசியிலாவது அதே பாகையில் ஒரு கிரகம் இருந்தால் அக்கிரகத்தின் காரக பலனையும் தனது தசா புத்தியில் அந்த கிரம் தருகின்றது.
கோச்சாரத்தில் ஒரு கிரகம் ஒரு ராசிக்குள் போகும் போது, அந்த ராசியில் எந்த கிரகமும் இல்லாத போது, பெரிதாக ஜாதகருக்கு நன்மையோ தீமையோ தருவதில்லை.
கோச்சாரத்தில் ஜென்ம ராசிக்கு 4 -ம் இடத்திற்கு கோச்சார குரு வரும் போதோ அல்லது 4 -ம் இடத்தை பார்க்கும் போதோ ஜாதகருக்கு வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
கோச்சார குரு – ஜெனன கால 4-ம் அதிபதி மீது அல்லது செவ்வாய் மீது செல்லும் போது வீடு / மனை வாங்கும் யோகம் ஏற்படும்.
கிரக காரகத்துவம் பார்க்கும் விதம்
சனியை – தொழில் என்றும்,
ராகுவை – தொழிலுக்கு ஏற்படும் தடை என்றும்,
கேதுவை – தொழிலில் ஏற்படும் நெருக்கடி என்றும்,
சூரியனை – கட்டளையிடும் / மேற்பார்வையிடும் அதிகாரி எனவும்
சந்திரனை – தொழிலில் கவனம் – முயற்சியில் மாற்றம் – இடமாற்றம் என்றும்
செவ்வாயை – தொழிலாளர்களின் மேற்பார்வையாளர் எனவும்,
புதனை – தொழிலை பராமரிக்கும் வரவு செலவு திட்டம் எனவும்
சுக்கிரனை – தொழிலுக்கு , தொழிலை நடத்த தேவையான பணம் எனவும்,
குருவை – தொழிலில் வளர்ச்சி என்றும், வரவு செலவு என்றும்
இராகு – கேது – ஒரு அதிகார்யின் கீழ் செயல்படும் வேலை ஆட்கள் எனவும் எடுத்துக் கொண்டு பலன் சொல்ல பழகிக் கொள்ள வேண்டும். அதாவது கிரகத்தின் தன்மையை உணர்ந்து காரகத்துவ பலனை சொல்ல வேண்டும்.
உ-ம். சிம்மத்தில் பிறந்த கால சனி. அதன் மீது கோச்சார சூரியன் எனில்
- சூரியன் – மேலதிகாரி எனில் சனி வேலைக்காரர். வேலைக்காரரை வேலை வாங்க சூரியன் வருகின்றார்.
- சனி நோய் எனில் சூரியன் மருந்தாகும். சனியின் காரக பாவ நோயை சூரியன் குணப்படுத்தி விடுவார். சனி – இருட்டு. சூரியன் – வெளிச்சம். வாழ்க்கையில் ஏற்பட்ட இருட்டு நீங்கி வெளிச்சம் ஏற்படும்.
- சூரியன் – தந்தை / நிர்வாகி / கட்டளையிடும் அதிகாரி / உயர்ந்த இடம்…. சனி – மகன் / என எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளை மகனுக்கு பிடிக்காது. சனி செய்யும் வேலைக்கு சூரியனின் நிர்வாகியின் இடையூறு இருக்கும். இவ்வாறு பலன் எடுக்க வேண்டும்.
கோச்சாரத்தில் கஷ்டம் தரும் ராசிகள்:
பொதுவாக ஒருவருக்கு ஜென்ம ராசியில் இருந்து எட்டில் சந்திரன் வரும்போது சந்திராஷ்டமம் என்றும் அந்த எட்டில் சந்திரன் உள்ள இரண்டரை நாளும் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு கஷ்டம் நோய் துன்பம் இழப்பு ஏற்படும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆனால் எல்லா ராசாகாரர்களையும் சந்திராஷ்டமம் வருத்துவது இல்லை. அதற்கு மாறாக வேறு சில இராசிகள் அதற்கு சமமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
இந்த ராசிகள் ஏற்படுத்தும் படுத்தும் ராசிகள் அல்லது பாட்டு ராசிகள் என்று அழைக்கப்படுகிறது. இது உண்மையில் துன்பம் தரும் ராசிகளாகும்.
ஒவ்வொரு ராசிக்கும் கோச்சாரப்படி
1.ஆகாத ராசி(பாட்டு ராசி) 2.ஆகாத மாதம். 3.ஆகாத வாரம்(கிழமை) 4.ஆகாத யோகம் 5.ஆகாத நட்சத்திரம் 6.ஆகாத கரணம் 7.ஆகாத ஜாமம் 8.ஆகாத திதிகள் ஆகியவற்றை பட்டியலாக கொடுக்கபட்டுள்ளது
அன்றன்றைய கோச்சார பலன் அறியும் பொழுது இது மிகவும் உபயோகமாக இருக்கும் .
1 ஜாமம் என்பது 3 மணி நேரம்.
காலை 6 – 9 வரை முதல் ஜாமம்; 9- 12 வரை 2-ம் ஜாமம். 12 – 3 மாலை வரை 3-ம் ஜாமம்; 3 – 6 மாலை வரை 4 -ம் ஜாமம். இரவு 6 – 9 வரை 5ம் ஜாமம். இரவு 9 – 12 நடு நிசி வரை 6-ம் ஜாமம். பின்னிரவு 12 – அதிகாலை 3 மணி வரை 7ம் ஜாமம். அதிகாலை 3 – காலை 6 மணிவரை 8ம் ஜாமம்.
12 ராசிகளில் முதல் ராசியாக மேஷ ராசிக்கு – 1. விருச்சிகம். 2. கார்த்திகை மாதம். 3. ஞாயிறு. 4. விஷ்கம்பம் நாம யோகம். 5. மகம் நட்சத்திரம். 6. பவ கரணம். 7. முதல் ஜாமம். 8. பிரதமை திதி – சஷ்டி மற்றும் ஏகாதசி திதி . இதற்கான விளக்கம் என்னவென்றால்
ஜென்ம ராசியாக மேஷம் ஆக இருப்பவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலம் துன்பம் தரும். கார்த்திகை மாதம் துன்பத்தை தரும். இவர்கள் எந்த புதிய மற்றும் முக்கிய விஷயங்களை ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்க கூடாது. விஷ்கம்ப நாம யோகம் துன்பம் தரும். பவ கரணம் துன்பத்தை தரும். மகம் நட்சத்திர நாளன்று கவனம் தேவை. முதல் ஜாமத்தில் வழக்கமான காரியத்தை தவிர வேறு எதையும் செய்யக் கூடாது. இவர்களுக்கு ஆகாத திதிகள்: பிரதமை – சஷ்டி – ஏகாதசி ஆகும்.
ஜென்ம ராசி ரிஷபம் எனில் –
சிம்ம ராசி – மார்கழி மாதம் – சனிக்கிழமை – சுக்கிரன் – அஸ்தம் – சகுனி கரணம் – 4 வது ஜாமம் – பஞ்சமி திதி – தசமி திதி – பௌர்ணமி, அமாவாசை திதி – மேற்கண்ட கோச்சார காலங்கள் அவ்வளவு நல்லதை செய்வதில்லை.
ஜென்ம ராசி மிதுனம் எனில்
மகர ராசி – ஆடி மாதம் – திங்கள் கிழமை – பரிகம் நாம யோகம் – சுவாதி நட்சத்திரம் – கௌலவ கரணம் – 3 வது ஜாமம் – பிரதமை திதி – சப்தமி திதி – துவாதசி
ஜென்ம ராசி கடகம் எனில்
சிம்மம் – மாசி மாதம் – புதன் கிழமை – வியாகதம் – அனுஷம் – முதல் ஜாமம் – நாகவம் – துவிதியை – சப்தமி – துவாதசி.
ஜென்ம ராசி சிம்மம் எனில் இவர்களுக்கு
மீன ராசி – ஆடி மாதம் – சனிக் கிழமை – திருதியை திதி – மூல நட்சத்திரம் – பவ கரணம் – முதல் ஜாமம். – திரிதியை, அஷ்டமி , திரயோதசி – ஆகியன துன்பம் தரக் கூடியது.
ஜென்ம ராசி: கன்னி – துன்பம் தரும் ராசி – நட்சத்திரம் – நாள் – கரணம் – திதி – மாதம் – கிழமை.
சிம்மம் ராசி யில் சந்திரன் சஞ்சரிக்கும் | புரட்டாசி | சனிக்கிழமை |
சுக்லம் | திரு ஓணம் | கௌலவம் |
முதல் ஜாமம் | பஞ்சமி – தசமி – பௌர்ணமி |
|
ஜென்ம ராசி துலாம் எனில்
கன்னி ராசி – தை – வியாழன் – சுக்ல பட்சம் – சதயம் – தைதுலம் – 4-ம் ஜாமம் – சதுர்த்தி – நவமி – சதுர்தசி போன்ற கோச்சார காலங்கள் துலா ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நல்லது அல்ல.
ஜென்ம ராசி விருச்சிகம் எனில்
மிதுனம் – ஐப்பசி – வெள்ளிக்கிழமை – வியதீபாதம் – ரேவதி – கரசை – முதல் ஜாமம் – பிரதமை திதி – சஷ்டி திதி – ஏகாதசி போன்ற கோச்சார காலங்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வதில்லை.
ஜென்ம ராசி தனுசு எனில்
மீனம் – ஆடி – வெள்ளிக்கிழமை – வஜ்ரம் – பரணி – தைதுலை, முதல் ஜாமம் – திரிதியை – அஷ்டமி – திரயோதசி ஆகிய கோச்சார காலங்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பல்ல.
ஜென்ம ராசி மகரம் எனில்
சிம்மம் – ஆவணி – செவ்வாய் – வைதிருதி – ரோகிணி – சகுனி – 4-ம் ஜாமம் – சதுர்த்தி – நவமி – சதுர்தசி போன்ற கோச்சார காலங்கள் மகர ராசிக் காரர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல.
ஜென்ம ராசி கும்பம் எனில்
மகரம் – வைகாசி – வியாழன் – கண்டம் – திருவாதிரை – மூன்றாம் ஜாமம் – கிம்ஸ்துக்னம் – திரிதியை – அஷ்டமி – திரயோதசி போன்ற கோச்சார காலங்கள் கும்ப ராசிக் காரர்களுக்கு அவ்வளவு நன்மை செய்வதில்லை.
ஜென்ம ராசி மீனம் எனில்
கும்பம் – பங்குனி – வெள்ளிக்கிழமை – வஜ்ரம் – ஆயில்யம் – சதுஷ்பாதம் – 4-ம் ஜாமம் – பஞ்சமி – நவமி – அமாவாசை, பௌர்ணமி போன்ற கோச்சார காலங்கள் மீன ராசிக் காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை.
இது வரை பிறந்த கால சந்திரனைக் கொண்டு கோட்சார கிரகங்கள் தரும் பலன்கள் நன்மையா தீமையா என்பதனை பார்த்தோம்.
லக்னம் இருக்கும் இடத்தில் இருந்து கோட்சார கிரகங்கள் இருக்கும் நிலை , சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து, குரு இருக்கும் இடத்தில் இருந்து, லக்னாதிபதி இருக்கும் இடத்தில் இருந்தும் கோச்சார பலன்களைக் கண்டறியலாம்.
- ராசியிலிருந்து – முழு பலன் – மதிப்பெண் 1.
- லக்னத்திலிருந்து ( 1/2 மதிப்பெண் )
- சூரியனிலிருந்து (1/4 மதிப்பெண் )
- குருவிலிருந்து (1/4 மதிப்பெண் )
- லக்னாதிபதியில் இருந்து (1/8 மதிப்பெண் ) என கொள்வோம்.