பாவக காரகம் மற்றும் காரக கிரக ஆதிபத்தியம் கொண்டு பலன் காணுதல் – டிப்ஸ் 1

ஒரு காரண காரியங்கள் நடக்க வேண்டுமெனில் கிரக சேர்க்கை அவசியம் தேவை.

திருமணம் எனில் சுக்கிரன், செவ்வாய், புதன் நன்றாக இருக்க வேண்டும். ஒரு பாவகத்தையும் கிரகத்தோட காரகத்தையும் சேர்த்து தான் பார்க்க வேண்டும். 

ஜாதகர் எனில் ஆண் என்றால் குரு. பெண் என்றால் சுக்கிரன். 

கல்வி எனில் 4 பாவங்களை ஆராய வேண்டும். 

கல்வி

2, 4, 5, 11ம் பாவம் [ 2 ஆரம்பக்கல்வி, 4 –  மேல் நிலைக் கல்வி – டிப்ளமா, 5 டிகிரி & மாஸ்டர் டிகிரி , 9 – மாஸ்டர் டிகிரி, 11 டாக்டரேட்]   – புதனும் குருவும் பலம் பெற வேண்டும் . – சிறந்த கல்வியாளர்.

11- ஆசிரியர் நிலையை குறிக்கும்.

சகோதரம்

3,11 இடத்து அதிபதிகளை பார்க்க வேண்டும். செவ்வாயும் குருவும் பலம் பெற வேண்டும். 

குரு , செவ்வாய் இணக்கமாகி 11ம் இடதொடர்பு வந்தால் சகோதரர் உண்டு.

திருமணப் பொருத்தம் – சுகமாக இருப்பார்களா ?

சுகத்தை கணிக்க ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். நீச்சம் அஸ்தங்கம், பாதகம், திதி சூன்யமாக குரு இருக்க கூடாது. 

பாவகம் எனில் 2, 4, 7, 12 ம் இடங்கள் பார்க்க வேண்டும்.  இவை சுகத்தை குறிக்க கூடிய இடங்கள்

வாகன யோகம் பற்றி பார்க்க

4, 11, சுக்கிரன். வாகனம் எனில் சுக்கிரனை பார்க்க வேண்டும். [ செவ்வாயிம் சுக்கிரனும் வாகனத்தை குறிக்கும். செவ்வாய் உஷ்ணத்தையும், சுக்கிரன் குளிர்ச்சியையும் குறிக்கும் வாகனங்கள். லாரி, ட்ரக் போன்ற கனரக வாகனங்கள் – டூ வீலர் – செவ்வாயும், ஆடம்பர , அலங்கார சொகுசு வாகனங்கள் – சுக்கிரன். ஏரோப்ளேன் – சுக்கிரன்.

ரயில் – நீளமானவை – ராகு செவ்வாய்.

படகு, மீன்பிடி படகு – சந்திரன் + ராகு.  சூடான, வெயிலில் இருக்கும் எஞ்சின் எல்லாமே செவ்வாய் வரும்.

சுற்றுலாப் பேரூந்து – சுக்கிரன்.

அரசு வாகனங்கள் – சூரியன் செவ்வாய் இணைவு.

வாகனத்திற்கு 4, 11 பார்க்க வேண்டும். 11 என்பது லாபம் இருந்தால் தானே [ 2மிடத்திற்கு லாபஸ்தானம் ] சனியின் ஆதிக்கம் மற்றும் லக்னத்திற்கு தொடர்பு வந்தால் பழைய வாகனங்கள் பழைய வீடு என வாங்கினால் நன்மை தரும். 

மேஷ லக்னம் , மேஷ ராசியினர் வீட்டில் பயன்படுத்தாத ஒரு பழைய பொருள் இருக்கும். அது வாகனமோ பொருளோ இருக்கும். [ செவ்வாய் – வாகனம். சனி நீச்சம் – பயன்படாத பழைய ]

சனி லக்னத்திற்கு தொடர்பு வந்தாலே தன் பெயரில் வாகனமோ சொத்தோ வாங்கக் கூடாது. சனி லக்னத்துடனோ, 4ம் இடத்துடனோ, 4ம் அதிபதியுடனோ, லக்னாதிபதியுடனோ தொடர்பு கொண்டாலே தன் பெயரில் வாங்கக் கூடாது. மற்றவரிடமிருந்து வாங்கிய வீடோ, பழைய வாகனமாகவோ தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். புதிய வீடு / வாகனம் வாங்கி இருந்தாலோ, இவர்கள் 40 வயதிற்கு மேல் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும். [ பெண்கள் 36 வயது. ஆண்களுக்கு 40 வயது ] 

சனி பகவான் பார்க்கும் பொருளை உடைப்பார். அதனை அனுபவிக்க விடமாட்டார். அது சார்ந்த விஷயங்கள் மந்தமாக தான் செயல்படும். 

4மிடம் பாதிக்கப் பட்டால் பயன்படுத்திய பொருளை வாங்குவதே சிறப்பு. 7-ல் சனி நின்றாலோ அல்லது 7ம் இடத்தை சனி பார்க்கப்பட்டாலோ [ 7ம் இடம் – பெட் ரூம். துலாம் – இணையக் கூடிய இடம். இடுப்பு. இடுப்பழகு (சுக்கிரன்) படுக்கறையில் கட்டில் பயன்படுத்தாமல் தரையில் பாயில் படுத்துறங்குவதே பரிகாரம். கட்டில் மற்றும் பெட் பயன்படுத்தினால் தொழில் இறக்கமாகி விடும். பெண்களால் தொழில் செய்யும் இடத்தில் அவப்பெயர், பிரச்சினை வரும். குடும்பத்தில் இணக்கம் இருக்காது. நல்ல தூக்கம் வராது. உடல் அசதி , வலி அதிகமிருக்கும். ]

மண் – சனி பகவானின் ஆதிக்கம் அதிகம். சனி பகவான் எளிமை விரும்பி.

எந்த கிரகத்தையும் இழுத்து பிடிக்கும் சக்தி சனிபகவானுக்கு உண்டு. சனி பகவான் உண்டி வில். கல் வைத்து இழுக்க இழுக்க விடும் போது அதிக வேகத்தில் செல்லும். ஜாதகரின் சனி 7ம் அதிபதியை / 7ம் இடத்தை பார்த்தாலோ / சுக்ரனை பார்த்தாலோ மனைவியை எதனையும் சுயமாக செய்ய விடாமல் இழுத்து பிடிப்பார். கண்ட்ரோல் செய்து கொண்டே இருப்பார்.

டிப்ஸ்: வீட்டின் தலை வாசலுக்கு ஸ்க்ரீன் போடுதல், பூட்டி வைத்தல் கூடாது. அப்படி செய்தால் குடும்பத் தலைவருக்கோ தலைப்பிள்ளைக்கோ எதிர்பாராத துன்பம் திடீரென வரும். வந்தே தீரும். அதே போல குடங்களை கவிழ்த்து வைக்க கூடாது. 

வீடு யோகம்

வீடு – சுக்ரன். 4, 10 ம் இடம் + சுக்ரன். 

தாயார் பற்றி

சந்திரன் மற்றும்2, 4, 7 ம் இடம் பார்க்க வேண்டும்., பகலில் பிறந்த ஜாதகருக்கு சுக்ரனையும், இரவில் பிறந்த ஜாதகருக்கு சந்திரனையும் பார்க்க வேண்டும். 

புத்திர ஸ்தானம் 

குரு + 5, 9

தாய்மாமன்

புதன் + 5ம் பாவம், 6ம் பாவம்.

சத்துரு ஜெயம்

6ம் பாவமும் லக்னாதிபதியும் வலுவாக இருந்தால் சத்ரு ஜெயம்.

கடன் இல்லாத நிலை – 

3, 6, 8 + செவ்வாட் + சனி வலுத்தால் கடன் அடைந்து விடும். கடன் கிடையாது. கடனால் பாதிக்கப்பட மாட்டார். 

சனி செவ் இணைவு இருக்கும் ஜாதகருக்கு கோட்சார சனியின் பார்வை அல்லது சனியின் மீது சனி செல்லும் போது நீண்ட நாள் கடன் அடையும். 

கடன் அடைய பரிகாரம்: சனி பகவானின் காரக பொருளான நல்லெண்ணெய். சூரிய உதயத்தில் நல்லெண்ணெய் தலையில் தடவி ஊற விட வேண்டும். காய வைத்த பொருட்கள்: கேது. இலை, தழை, சித்தா எல்லாமே கேது. முடி – அஸ்வினி. குளித்த பின் சாம்பிராணி புகை போடவேண்டும். இவ்வாறு செய்து வர கடன் அடைய வழி கிடைக்கும். மாலையில் லஷ்மி பூஜை செய்ய வேண்டும். லட்டு வைத்து வழிபட வேண்டும். அதனை பலருக்கும் வினியோகம் செய்ய வேண்டும்.