தசா காலங்களில் எந்தெந்த தசா தீமை தரும் என்பதை ஒவ்வொரு ஜோதிடரும் அறிந்திருக்க வேண்டும். 

ஒருவரின் ஜாதகத்தில்

  1. வர்கோத்தமத்தில் இருக்கின்ற கோள்கள் தன் தசா புத்தி காலங்களில் நன்மை தருகின்றது.
  2. வர்கோத்தமம் பெறுகின்ற கிரகம் அஸ்தங்கM / நீச்சம் என இருந்தால் சுபமும் அசுபமும் கலந்த பலனைச் செய்கின்றன.
  3. 6 – 8 – 12 க்குரியவர்களின் தசா புத்திகள் மற்றும் அந்த வீட்டில் இருக்கின்ற கிரகங்களில் தசா புத்திகளில் பெரும்பாலும் அசுப பலன்களே நடை பெறும்.
  4. பாவ கிரகங்களின் தசா நடக்கும் போது அசுப பலனே.
  5. ஜென்ம நட்சத்திரத்திற்கு 3 – 5 – 7 வது நட்சத்திரங்களின் அதிபதி தசா நடக்கும் பொழுது தீய பலன்களே நடக்கின்றன. உதாரணமாக, உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திரம் எனில், 3 – ஆம் நட்சத்திரம் – அஸ்வினி. ( அதிபதி – கேது ) 5 – ஆம் நட்சத்திரம் – கிருத்திகை ( சூரியன் , 7 வது நட்சத்திரம் மிருக சீரிடம் ( செவ்வாய் ) ஆகிய கேது, சூரியன், செவ்வாய் திசா காலங்களில் தீய பலன்களே அதிக அளவில் இருக்கும்.
  6. ஜெனன ஜாதகப்படி, நான்காவது தசாவாக சனி பகவானின் தசா நடந்தால் அசுப பலன்கள் அதிகம் இருக்கும்.
  7. ஆறாவதாக வரக்கூடிய குரு தசா தீமை தரும்.
  8. ஐந்தாவதாக வரக் கூடிய செவ்வாய் திசா தீமை தரும்.
  9. ஏழாவதாக வரக்கூடிய ராகு தசா கஷ்டம் தரக் கூடியதாக இருக்கும்.
  10. ராசியின் 30 வது டிகிரியில் இருக்க கூடிய கிரகத்தின் திசா கஷ்டத்தை தரும்.
  11. மீனம் – மேஷம் – ரிஷப லக்ன ஜாதகர்களுக்கு மகரத்தில்  செவ்வாய் இருந்து தசா நடத்தினால் ராஜ யோகம் தான்.
  12. ரிஷபம் – மிதுனம் லக்ன ஜாதகர்களுக்கு மீனத்தில் சுக்கிரன் இருந்து தசா நடந்தால் மிக நல்ல பலன் உண்டு
  13. பொதுவாகவே 6 – 8 – 12 அதிபதி மற்றும் அதில் கிரகங்கள் இருந்து தசா நடக்கும் போது அசுப பலனே.
  14. தசா நாதன் இருக்கும் இடத்தில் இருந்து புத்தி நாதன் எந்த பாவத்தில் இருக்கின்றாரோ அந்த பாவம் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை ஜாதகர் பெறுவார். தசா நாதனுக்கு பகை வீடு , 6 – 8 – 12 பாவங்களில் புத்தி நாதன் இருந்தால் துக்கத்தையும் மற்ற இடங்களில் சௌகரியத்தையும் கொடுப்பார்.
  15. ஒரு பாவாதிபதி தன் பாவத்திற்கு 12-ல் இருந்து தசா நடக்கும் போது செல்வத்திற்கு நாசம் உண்டாகும்.
  16. பத்தாம் இடத்தில் ராகு இருந்தால், அந்த பாவத்தின் அதிபதியின் தசாவில் புண்ணிய தீர்த்த நீராடுதல் உண்டாகும்.
  17. எந்த பாவத்திற்கு 9 – 10 – 11 ஆம் இடங்களில் சுப கிரகம் இருக்கிறதோ அந்த பாவாதிபதி திசையில் வித்தை, பொருள் வரவு, தர்மம், நற்காரியம், நற்கீர்த்தி ஆகியன நடைபெறும்.
  18. எந்த பாவத்திற்கு 5 – 7 ஆம் இடத்தில் உச்சத்தில் இருக்கின்ற கிரகங்கள் அல்லது சுப கிரகங்கள் இருக்கின்றார்களோ அந்த பாவாதிபதியின் திசையில் புத்திரன், களத்திரம் மூலமாக லாபம் / அரசு கௌரவம் உண்டாகும்.
  19. குருவோ சுக்கிரனோ , 9 க்குடையவரோ இருக்கும் பாவாதிபதி தசாவில் திருமணம், திருவிழா கோயில் உற்சவம், சந்தோஷமான காரியம் நடைபெறும்.
  20. எந்த பாவத்திற்க் நாலாம் இடத்தில் உச்ச கிரகங்கள் இருக்கின்றதோ அவரின் திசையில் வாகனம், வாகனம் மூலம் லாபம் கிட்டும்.
  21. கும்ப லக்னத்தினருக்கு ரிஷபத்தில் சனி பகவான் இருந்து தசா நடந்தால் புதையல் / லாட்டரி போன்ற திடீர் எதிர்பாரா வரவு கிடைக்கும்.
  22. திரிகோணாதிபதிகளின் [ 1 – 5 – 9 ] திசா சிறப்பான பலனைக் கொடுக்கும்.
  23. மூன்று – ஆறு – 11 – க்குரியவர்கள்ளின் தசா அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. 
  24. ராகு / கேது சுபர்களின் வீட்டில் இருந்து அல்லது சுபர்களுடன் தொடர்பு கொள்ளும் போது அவர்களது தசா புத்திகள் நன்றாக இருக்கும். 
  25. கிரகங்கள் தங்கள் தசா புத்தியில் தாங்கள் இருக்கின்ற பாவத்திற்கு பெரிய நன்மையோ பெரிய தீமையோ செய்யாது. உதாரணம்: சனி தசா – சனி புத்தி; சுக்கிர திசா – சுக்கிர புத்தி…
  26. 6 – 8 – 12 க்கு உடையவர்கள் 5 – 9 ஆம் பாவாதிபதிகளோடு சம்பந்தம் பெற்று தசா நடத்தும் போது நற்பலன்களைச் செய்கிறார்கள்.
  27. பாவ கிரகங்கள், யோக கிரகங்களின் பார்வையை பெற்று தசா நடத்தும் போதும் நல்ல பலன்களை செய்கிறார்கள்.
  28. குருவிற்கு அல்லது ஒன்பதாம் அதிபதிக்கு திரிகோணம் / கேந்திரங்களில் இருந்து தசா நடத்தும்போது அதிர்ஷ்டத்தை செய்கின்றனர்.
  29. ராகு / கேது – யோக காரர் தொடர்பு ஏற்பட்டு தசா நடத்தும் போது நல்ல பலன்களை செய்கிறார்கள்.
  30. திசா நடத்தும் கிரகம் இருக்கும் வீட்டு அதிபதி நீச்சம் / அஸ்தங்கம் / ராகு – கேதுக்களுடன் இணைந்து இருக்கும் போது திசா புத்திகள் குறைவான நல்ல பலன்களே கிடைக்கும்.
  31. பொதுவாக ராகு / கேது தசா புத்திகள் தொந்தரவும் தடங்கல்களும் தருகின்றன.
  32. குரு திசையில் சுக்கிர புத்தி, சுக்கிர திசையில் குரு புத்தி – திருமண வாழ்வைத் தொந்தரவு செய்யும். 
  33. சுக்கிரன் – சனி இருவரும் நல்ல வீட்டில் இல்லாத போது அவர்களின் தசாவில் துன்பங்களும் பிரச்சினைகளும் அதிக அளவில் இருக்கும்.
  34. சூரியன் – சனி – தசா புத்திகள் நன்றாக இருக்கும் போது, அதிர்ஷ்டத்தை தருகின்றன. [ நல்ல வீட்டிலிருந்து தசா புத்தி நடக்குமானால் ]
  35. குரு – புதன் தசா புத்தி பலமாக இருந்தால் நல்ல பொருளாதார முன்னேற்றம், வங்கி சேமிப்பு அதிகரிக்கும். 
  36. சனி – ராகு யோகக் காரர்களுடன் தொடர்பு கொண்டு தசா நடக்குமானால் நல்ல அந்தஸ்து, கௌரவம் கிடைக்கிறது. ஆனால் ராகு கொடுத்து கெடுக்கும் என்ற விதிப்படி கடைசியில் எதிர்பாராத திடீரென துன்பத்தையும் கொடுத்து விடுகின்றது.
  37. ராகு – மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் வீடுகளில் இருந்து தசா நடத்தும் போது நல்ல பலன்களைக் கொடுக்கின்றது.
  38. ஒரு தசாவில் தசா நாதனின் விளைவுகளை விட புத்தி நாதன் தரும் விளைவுகளே பலமுள்ளதாக இருக்கும்.
  39. மாரக ஸ்தானங்கள், 2 – 7ம் இடம் அதன் அதிபதிகள் பலம் பெற்று, 2 – 7 ம் இடத்திலே இருப்பாரானால் அவர் தனது திசையில் மரணத்திற்கொப்பான கண்டத்தை தருகின்றார்.
  40. எட்டுக்குடையவர் அல்லது பனிரெண்டுக்குடையவர் அதிகம் பலம் இழந்து அந்த 2 – 7 ம் இடத்தை அடைந்திருந்தால் இவ்விருவரும் மரணத்திற்கு இணையான கண்டத்தை தருவார்கள். 
  41. கோச்சாரத்தில் குரு, எட்டுக்குரியவர் இருக்கும் ராசி அல்லது அதன் திரிகோணத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மரணத்திற்கு இணையான கண்டம் உண்டாகும் —————————————————————————————————————————-

தசா புத்தி அந்தரம் நன்மை செய்யுமா என்பதனை நட்சத்திர முறை கொண்டு அறியலாம் .

மொத்த நட்சத்திரங்கள் 27. அவற்றிநை 1. தேவர் மண்டலம் 2. நர [மனுஷ ]மண்டலம் 3. அரக்கர் மண்டலம் என மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளனர்.

  1. தேவர் மண்டலம் – 1. அஸ்வினி 5. மிருக சீரிடம் 7. புனர்பூசம் 8. பூசம் 13. அஸ்தம் 15. சுவாதி 17. அனுஷம் 22. திரு ஓணம் 27. ரேவதி
  2. நர மண்டலம் – 2. பரணி 4. ரோகிணி 6. திருவாதிரை 11. பூரம் 12. உத்திரம் 20. பூராடம் 21. உத்திராடம் 25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி
  3. அரக்கர் மண்டலம் – 3. கிருத்திகை 9. ஆயில்யம் 10. மகம் 14. சித்திரை 16. விசாகம் 18. கேட்டை 19. மூலம் 23. அவிட்டம். 24. சதயம் ஆகியன.

கணக்கிடும் முறை:

  1. மேஷம் முதல் லக்னம் வரை எண்ணி அந்த எண்ணிக்கையை குறித்துக் கொள்ள வேண்டும்.
  2. லக்னம் முதல் தசா நாதன் நின்ற இடம் வரை எண்ணி வந்த எண்ணிக்கையை குறித்துக் கொள்ள வேண்டும்.
  3. தசா நாதனுக்குரிய மொத்த ஆண்டுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். 

கணக்கீடு: (1 + 2 ) X 3 = வரும் தொகையை 27 ஆல் வகுக்க வேண்டும். வகுத்து வரும் ஈவை தள்ளி விட்டு மீதம் உள்ள எண்ணிக்கையே நட்சத்திரத்தின் வரிசை எண். அந்த நட்சத்திர வரிசை எண் எந்த மண்டலத்தில் உள்ளது என பார்த்து அதற்குண்டான பலன் அறிய வேண்டும். 

தேவர் மண்டலம் – பிரயாணம் ஏற்படும். செல்வம் சேரும். நல்லவைகள் நடைபெறும். திருமணம் புத்திரப்பேறு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நர மண்டலம் – பொன் பொருள் சேர்க்கை . நோய்கள் தீரும். மத்திம நற் பலன்கள் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் காலம். 

அரக்கர் மண்டலம் – தோல்வி, துரதிருஷ்டம், காரியத் தடை, பொருள் இழப்பு, வியாதி, விபத்து போன்ற அசுப காரியங்கள் நடை பெறும் 

என அறிய வேண்டும்.

புத்தி நாதன் பலன் காண:

  1. மேஷம் முதல் தசா நாதன் நின்ற இடத்தின் எண்ணிக்கை
  2. தசா நாதன் முதல் புத்தி நாதன் வரை உள்ள எண்ணிக்கை. இவை இரண்டும் தெரிய வேண்டும்.

உதாரண ஜாதகம்: சனி தசா – சுக்கிர புத்தி. சுக்கிர புத்தி நல்ல பலன் தருமா?

சனி நிற்பது மகரத்தில்.

சுக்கிரன் கும்பத்தில் உள்ளதாக எடுத்துக் கொள்வோம். இப்போது சுக்கிர புத்தி நன்மை செய்யுமா? 

தசா நாதன் சனி நின்ற இடம்: மகரம். 

மேஷத்தில் இருந்து மகரம் வரை 10 ராசிகள். மகரத்தில் இருந்து கும்பம் 2 ராசிகள். [ 10 X 2 = 20. வரும் தொகையை 27 – ஆல் வகுக்க வேண்டும். ஆனால்,, வந்த தொகை 27 க்குள் வந்தால் அப்படியே அந்த எண்ணுள்ள நட்சத்திரத்தை நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் 

இங்கு 27 – க்குள் வருவதால் 20 க்குரிய நட்சத்திரம் – பூராடம். இது நர மண்டல வகையை சார்ந்ததாக இருப்பதால், மத்திம பலன் கிடைக்கும். 

தேவ மண்டல நட்சத்திரங்கள்: 

  1. அஸ்வினி 5. மிருக சீரிடம் 7. புனர்பூசம் 8. பூசம் 13. அஸ்தம்15. சுவாதி 17. அனுஷம் 22. திரு ஓணம் 27. ரேவதி

பிரயாணம், செல்வம் சேரும். நல்லவைகள் சுப நிகழ்வுகள் நிகழும்.

2. நர மண்டல நட்சத்திரங்கள்:

2. பரணி 4. ரோகிணி 6. திருவாதிரை 11. பூரம் 12. உத்திரம் 20. பூராடம் 21. உத்திராடம் 25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி.

பொன் பொருள் சேர்க்கை, நோய்கள் தீரும். மத்திம நற்பலன்கள் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். 

3. அரக்கர் மண்டல நட்சத்திரங்கள்:

3. கார்த்திகை, 9. ஆயில்யம். 10. மகம். 14. விசாகம். 18. கேட்டை. 19. மூலம். 23. அவிட்டம். 24. சதயம்.  அரக்க மண்டல நட்சத்திரங்கள் தரும் பலன்கள்: தோல்வி , துரதிர்ஷ்டம். காரியத் தடை, பொருள் இழப்பு. வியாதி. விபத்து போன்ற அசுப காரியங்கள் நடை பெறும்.


ஒருவரின் வாழ் நாளில் பெரும்பாலான நாள்கள் முக்கியத்துவம் இல்லாமலே மிக சாதாரணமாக கடந்து செல்கின்றன. 

வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட சில நாட்களில் தான் நிகழ்கின்றன.

அப்படி குறிப்பாக நன்மையோ தீமையோ எந்த நாட்களில், எந்த நேரத்தில் நிகழும் என்பதைக் கண்டறிவதற்கு தான் அந்தரம் – சூட்சமங்கள் – அதி சூட்சுமம் வரை கணக்கிட்டு பார்க்க வேண்டும். 

ஒருவரின் தசா புத்தி காலத்தில் அந்த புத்தி காலம் முழுவதுமே நல்லதோ அல்லது கெட்டதோ தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதில்லை.  சில நாட்களில் மட்டும் நன்மையும், சில நாட்களில் மட்டுமே அதிக தீமையும் நடந்து விடுகின்றன. மற்ற நாட்கள் மிக சாதாரணமாக வே சென்று விடுகின்றது.

திசா நாதன் – புத்தி நாதன் – அந்தர நாதன் மூவரும் கெட்டவர்கள் ஆகின்ற போது தான் மிகவும் கெட்ட பலன்கள் நிகழ்கின்றன. இவர்கள் மூவரும் சுபராக இருக்கும் போது நற்பலன்கள் நிகழ்கின்றன.

சூட்சுமம் என்பது மிக சிறிய கால அளவு கொண்டது. நாள் – மணி நேர கணக்கு தான். 

ஒரு கோளின் தசா முடிந்து அடுத்த தசா ஆரம்பிக்கும் முபு எதோ ஒரு நிகழ்வை ஏற்படுத்தி விட்டு செல்லும். கெட்ட தசா எனில், பெரிய கெடுதலை செய்து விட்டு போகும். 

தசா புத்தி அந்தரம் + அன்றைய கோட்சாரத்துடன் இணைத்து பலன் பார்க்க வேண்டும் என்பதனை மறக்கலாகாது. தசா புத்தியைச் சார்ந்தே கோச்சாரப் பலன்கள் இருக்கும். ஜாதகத்தில் அமைந்துள்ள ஸ்தானமே உறுதியான பலனைத் தரும்.

  • ஒவ்வொரு திசா நடத்தும் கிரகத்தின் திசை , புத்தி, அந்தரம், சூட்சுமம். பிராணன் – இதில் தன் சுய புத்தி காலத்தில் முழு பலனையும் அளிக்காது.
  • குரு, சுக்கிரன், புதன் – 4,7,10 வீடுகளுக்கு அதிபதி ஆகி, மற்றொரு கேந்திர வீட்டில் அமர்வது கேந்திராதிபத்திய தோஷத்தை குறிக்கும்.
  • இவர்கள் கேந்திராதிபத்ய தோஷம் பெற்று திசா புத்தி நடத்தும் போது சிறப்பான பலனை அளிக்காது. பாதிப்பு அதிகம். இதனினும் குருவும் புதனும் கேந்திராதிபத்திய தோஷத்தில் மிகவும் வலியவர்கள். கெடுதல் செய்வார்கள். இவர்கள் கேந்திராதிபத்ய தோஷம் பெற்று (குரு, புதன்) திசா புத்தி நடத்தும் போது ஜாதகர் மிகப்பெரும் பாதிப்பினை அடைகிறார். உயிர் சார்ந்த பிரச்சினை, தொழிலில் பிரச்சினை, குடும்பத்தில் உடலில் பாதகம், உறவுகளில் பிரிந்தவர் இருப்பார்கள்.