பெயர் பொருத்தம்:
திருமணப் பொருத்தம் பார்க்க ஜனன ஜாதகம் இல்லை எனில் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு நட்சத்திரம், ராசி தீர்மானித்து ஜோதிடம் சொல்லவோ பொருத்தம் பார்க்கவோ செய்தனர். இவ்வழக்கம் தற்போது பின்பற்றப்படுவதில்லை.
பிரசன்ன முறைகளைக் கொண்டு பலன் சொல்லவும், பொருத்தம் இருக்கின்றதா இல்லையா எனக் கூறும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. பெயருக்கான நாம எழுத்துக்களைக் கொண்டு நட்சத்திரங்களை அறிய பஞ்சாங்கம் பார்த்து அறியவும்.
ஆண் – பெண் ஜாதக லக்னப் பொருத்தம்
ஆறு லக்னம் – ஆண் ராசி; ஆறு லக்னம் – பெண் ராசிகளாகும்.
ஆண் ராசிகளில் ஆண் தன்மை அதிகம் கொண்டது சிம்மம். பெண் ராசிகளில் பெண் தன்மை அதிகம் கொண்டது கன்னி,
ஆணின் பிறப்பு ஆண் லக்னத்திலும், பெண்ணின் பிறப்பு பெண் லக்னத்திலும் அமைவதே சிறப்பு.ஆனால் பிறப்பவர் யாவரும் இவ்வாறு இருப்பதில்லை.
சிம்ம லக்னத்திற்கு மேஷம், விருச்சிகம், தனுசு;
கன்னி லக்னத்தில் பிறந்த பெண்கள் எந்த லக்னத்தில் பிறந்த ஆணுடனும் ஒத்துப் போவார்கள்.
சாந்தமான பொருளாசை அற்ற நட்சத்திரங்களாக தனுசு மீனம் சொல்லப்படுகிறது.
வேகமாக பொருள் சேர்க்க ரிஷபம், துலாம் ஆசை கொண்டவர்கள்.
தனுசு, மீனம் லக்கினத்தினரை ரிஷபம், துலாம் லக்னத்தாரால் எளிதில் வீழ்ச்சி வந்து விடும்.
சிம்ம லக்னத்தினருக்கு மகரமும் கும்பமும் ஆகாது.
சிம்மத்திற்கு 7-ம் பாவம் கும்பம். சந்திரனுக்கு 7-ம் பாவம் மகரம். இரண்டும் இருளும் ஒளியும் போன்றது. இரண்டும் சேர்ந்தால் விருப்பம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
கணவனை மனைவியும் மனைவியை கணவனும் அச்சுறுத்தும்படி நடந்து கொண்டிருப்பார்கள்.
கடக லக்னத்தினர் காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். இவர்களீடம் வளைவு நெளிவு சுளிவு அதிகம் உண்டு.
மிதுன லக்னத்தினர் கொஞ்சம் வாய்த் துடுக்கானவர்கள். எப்போது என்ன பேசுவார்கள் என யாராலும் யூகிக்க முடியாதபடி பூடகமாக பேசுவார்கள். மிதுன லக்னப் பெண்களிடம் துடுக்குத் தனம் அதிகமிருக்கும். மிதுன லக்னப் பெண்களுக்கு மேஷம், சிம்மம், துலாம், விருச்ச்சிக லக்னத்தினரை சேர்ப்பது நல்லது ஒத்து வரும்.
திருமணத்திற்குப் பெண் ஆண் பெண் குணங்கள் மாறுவது உண்டு. இதற்கு முக்கிய காரணம் லக்ன சேர்க்கையே காரணமாகும்.
விசித்திர திருமணங்கள்:
1. உறவு முறையில் அக்காள் மகள், மாமன் மகள் என உறவு முறையைக் கொண்டு திருமணம் செய்து வைத்தனர் – உறவு முறைத் திருமணமாகும்.
2. ஒரு குழந்தை கர்ப்பத்திலிருக்கும் போதே பெண்ணாக பிறந்தால் என் மகனுக்கு திருமணம் செய்து வைப்பேன் என்றும் ஆணாக பிறந்தால் என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பேன் என குழந்தை பிறப்புக்கு முன்பே நிச்சயிப்பது – கர்ப்ப நிச்சிதம்.
3. கந்தர்வ திருமணம்: காதல் திருமணங்கள் – ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடு கடந்தது.
4. தெய்வ நிச்சிதம்: இன்னாருக்கு இன்னாரை திருமணம் செய்து கொள்ளலாம் என அருள்வாக்கு கூறி செய்வது – தெய்வ நிச்சிதம்.
5. ஆன்மீக குருமார் ஒருவர் – இருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறுவது குரு நிச்சிதம் எனப்படும்.
6. பெண் – ஆண் இருவருடைய சந்திப்பினால் இன்ப நிகழ்வு ஏற்படுமானால், ஒருவருக்கொருவர் ஈர்ப்பு ஏற்பட்டு பொருத்தம் பாராமல் திருமணம் செய்து கொள்வது – சுப சகுனத் திருமணம்.
7. இருவருக்கும் மனப் பொருத்தம் இருந்தால் ஜாதகப் பொருத்தம் பாராமல் திருமணம் செய்து கொள்வது – மனப் பொருத்தம்.
8. மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்கள் ஆதிக்க பலம் உள்ள நட்சத்திரமாகும். இந்த 4 நட்சத்திரங்களில் ஆண் / பெண்ணிற்கு இருந்தால் பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்து வைக்கலாம் – ஆதிக்க பலமுள்ள நட்சத்திர திருமணம்.
இவ்வாறு பல வகைகளிலும் திருமணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
=====================================================
நாடி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் முறை:
ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் கிரகம்: குரு. மனைவியைக் குறிக்கும் கிரகம்: சுக்கிரன். குருவிற்கும், சுக்கிரனுக்கும் 1-5-9, 3-7-11, 2-12 ல் அமர்ந்த கிரகங்களை குறித்துக் கொள்ள வேண்டும். அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ளக்னம் | 1 | 5 | 9 | 3 | 7 | 11 | 2 | 12 |
குருவிற்கு |
|
|
|
|
|
|
|
|
சுக்கிரனிற்கு |
|
|
|
|
|
|
|
|
பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் கிரகம் – சுக்கிரன். கணவரைக் குறிக்கும் கிரகம்: செவ்வாய். சுக்கிரன் மற்றும் செவ்வாய்க்கு 1-5-9, 3-7-11, 2-12 ல் அமர்ந்த கிரகங்களை மேலே குறிப்பிட்டவாறு அட்டவணை தயாரித்து கொள்ளவும்.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு [ 1-5-9 ] [3-7-11] [2-12] ல் எந்த கிரகங்கள் உள்ளனவோ அதே கிரகங்கள் பெண் ஜாதகத்தில் இருக்க வேண்டும். உ-ம். ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 5-ல் ஒரு கிரகம் இருந்தால் பெண் ஜாதகத்தில் [ 1-5-9] [3-7-11][2-12] இந்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். மொத்தத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரனோடு தொடர்புடைய கிரகங்கள் எல்லாம் பெண் ஜாதகத்தில் சுக்கிரனோடு தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கு [ 1-5-9] [3-7-11] [ 2-12] ல் எந்தெந்த கிரகங்கள் உள்ளனவோ அதே கிரகங்கள் ஆண் ஜாதகத்தில் குருவிற்கு [1-5-9] [ 3-7-11] [ 2-12] ல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு விதிகளில் ஒரு விதியாவது பொருந்தி வந்தால் பொருத்தம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
இல்லை என்றால் பொருந்தாது. இது கிரக காரகத்துவம் ரீதியாக பார்க்கப்படும் பொருத்தமாகும்.
உதாரண ஜாதகம்:
| குரு | |||
| சந்தி ராகு | ஆணின் ராசிக் கட்டம் | சூ செவ் பு | |
| சுக் கேது | |||
| சனி | லக் | ||
| லக்னம் | 1 | 5 | 9 | 3 | 7 | 11 | 2 | 12 | ||
| குரு | குரு | – | சந்தி ரா | சுக் கே | சனி | – | சூ செ பு | |||
| சுக்ரன் | கேது | சனி | – | – | சந்தி ரா | குரு | – | சூ செ பு | ||