ராசி – பொருள் காரகம் [ பொருள் வாங்க, உபயோகப்படுத்துவது ]
உயிர்காரகம் – லக்னம் பார்க்க வேண்டும்.
திதி – பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். மகர லக்னத்திற்குரிய திதி சூன்ய நாளில் பித்ரு வழிபாடும், ராசிக்குரிய திதி சூன்ய நாளில் குல தெய்வ வழிபாடும் செய்வது நிவர்த்தி செய்வது பொருளாதார வளர்ச்சி கொடுக்கும்.
இயற்கை சுபர் / இயற்கை பாவரைக் கொண்டு சில பொதுவான பலனை மட்டுமே சொல்ல முடியும். உ-ம் மகர லக்னத்திற்கு குரு ( 3,12க்குரியவர்) அசுபராக செயல்படுவார்.
ஒரு கோண வீட்டிற்கும் ஒரு கேந்திர வீட்டிற்கும் அதிபதியாக வருபவரே யோகாதிபதி. கடக லக்னத்திற்கு 5ம்( கோணம்) 10க்கும்( கேந்திரத்திற்கும்) அதிபதியாக செவ்வாய் வருவதால் கடக லக்னத்திற்கு செவ்வாய் யோகாதிபதியாவார்.
மாரக அதிபதி: இறப்பு, கண்டம் தருபவர். இறுதி மூச்சு. மரனம் – ஒரு காரியம் செயலிழப்பது. ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகர் உண்டு. பலன் எடுக்கும் போது சுபர், யோகாதிபதி, மாரக அதிபதி, இவர்களை கவனிக்க வேண்டும்.
லக்னம் | சுபர் | அசுபர் | மாரகர் |
மேஷ லக்னம் | சூரியன், குரு | புதன், சனி | புதன், சனி |
ரிஷபம் | சூரியன், புதன், சனி | சந்திரன், குரு, சுக்கிரன் | சந்திரன், குரு, செவ்வாய் |
மிதுனம் | குரு, சுக்கிரன், சனி | சூரியன், செவ்வாய், குரு | சூரியன், செவ்வாய், குரு |
கடகம் | செவ்வாய், குரு | புதன், சுக்கிரன் | புதன், சுக்கிரன், சனி |
சிம்மம் | சூரியன், சுக்கிரன், செவ்வாய், | புதன், சுக்கிரன் | சுக்கிரன், சனி, புதன் |
கன்னி | புதன், சுக்கிரன் | சந்திரன், குரு, செவ்வாய் | சந்திரன், குரு, செவ்வாய் |
துலாம் | புதன், சுக்கிரன், சனி | சூரியன், செவ்வாய், குரு | சூரியன், குரு |
விருச்சிகம் | சூரியன், சந்திரன்,குரு | செவ்வாய், புதன், சுக்கிரன் | புதன், சுக்கிரன் |
தனுசு | சூரியன், செவ்வாய்,புதன் | சுக்கிரன் | புதன், சுக்கிரன் |
மகரம் | செவ்வாய், புதன், சுக்கிரன் | சந்திரன், குரு | சந்திரன், குரு |
கும்பம் | சுக்கிரன், புதன், சனி | சந்திரன், செவ்வாய், குரு | சந்திரன், செவ்வாய் |
மீனம் | சந்திரன், செவ்வாய் | சூரியன், புதன், சுக்கிரன், சனி, | சூரியன், புதன், சுக்கிரன், சனி |
மாரக கிரகம் -மரணம், கண்டம் எல்லா நேரத்திலும் திசா புத்தியிலும் வரும்போது தருவதில்லை. மாரகர் – ஏண்டா வாழ்கிறோம் என்ற எண்ணத்தை தந்துவிடுவா. தனது கொடுமையான பலங்களால். தப்பான எண்ணங்கள், தப்பான காரியம் செய்ய வைப்பார். திடீரென நன்மையை தடுத்து நிறுத்தி விடுபவர்.
கோச்சாரத்தில் மாரகர் 9-ம் வீட்டுக்கு வரும்போது சாமி கும்பிடமாட்டார். தடை செய்வார். தந்தை யுடன் இணக்கமற்ற செயல் தருவார். மறைமுகமாக எதாவதொரு தடை பிரச்சினை கொடுத்து கொண்டிருப்பார்.
ஒரு செயலை ஸ்தம்பனம் செய்பவர். தடை, தவறான எண்ணம் தருபவர். தவறான செயலை செய்யத் தூண்டுபவர்.
மாரக அதிபதி, 3ம் அதிபதி, 8ம் அதிபதி, பாதாதிபதி, திதி சூன்ய அதிபதி தொடர்பு கொள்ளும் போது கடுமையான பாதிப்பு கொடுக்கும். மாந்தி + அஷ்டமாதிபதி + மாரக அதிபதி + சனி தொடர்புகொள்ளும் போது மாரகம் நிகழும்.
மாரக அதிபதி ஓரை காலத்திலும் அவரின் நாளிலும் கவனம் தேவை. கோட்சாரத்தில் லக்னாதிபதியுடன் மாரகாதிபதி தொடர்பு கொள்ளும் நாளில் ஓரையில் அவர் செய்யும் காரியங்கள் அதிகப்படியான துன்பத்தையோ – வாகனத்தில் செல்லும் போது விபத்தையோ தருவார்.
மாரக அதிபதியாக வரும் நாள் கிரகங்கள் அடிக்கடி பாதிப்பு கொடுக்கும்.
எப்போது கொடுக்கும் என்றால்,
மாரக அதிபதி கோட்சாரத்தில் லக்னாதிபதியுடன் சேர்க்கை பெறும் காலம் – அக்காலத்தில் மாரக அதிபதியின் கிழமை – ஓரை [ சந்திரன் எனில் திங்கட்கிழமை – சந்திர ஓரை பாதிப்பு தரும். அடிக்கடி நிகழும் ]யில் தரும்.