ஆண், பெண் இருவருடைய ஜாதகங்களிலும் – லக்னம் – சந்திரன் – சுக்கிரன் இம்மூன்றையும் லக்னமாக பாவித்து, இவற்றிற்கு 1 – 2 – 4 – 7 – 8 – 12 ஆம் இடங்களில் செவ்வாய், சனி, சூரியன், ராகு, கேது இருந்தால் அதை பாவ தோஷமாக பாவிக்க வேண்டும்.

Thank you for reading this post, don't forget to subscribe!

லக்னத்திலிருந்து கணக்கிட்டதை முழு பாவமாகவும்,

சந்திரனிலிருந்து கணக்கிட்டதை அரை பாவமாகவும்,

சுக்கிரனிலிருந்து கணக்கிட்டதை கால் பாவமாகவும்

எடுத்துக் கொண்டு ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் உள்ள பாவ தோஷத்தின் மொத்த அளவைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

ஆண் பெண் இருவருக்கும் பாவ தோஷத்தின் அளவு சரி சமமாகவோ, அல்லது ஆணுக்கு பெண்ணை விட சற்று அதிகமாக இருந்தால் தோஷ சாம்யம் உண்டு. ஜாதகங்கள் பொருந்தும்.

ஆனால், ஆணை விட பெண்ணுக்கு தோஷம் அதிகமாக இருந்தால் தோஷ சாம்யம் இல்லை. ஜாதகங்கள் பொருந்தாது.

உதாரண ஜாதகம்:

  கே சந்தி செவ் 
  ஆண் ஜாதகம் லக் சுக்
  பு சூரி
  சனி குரு  ராகு 

 

 சனி ராகு சூரியன் புதன் சுக்ரன் சந்திரன்
  பெண் ஜாதகம் குரு
  லக்னம்
   சனி செவ்

 

இனி அட்டவணைப் படுத்த வேண்டும். செவ்வாய், சனி, சூரி, ராகு, கேது ஆகிய கிரகங்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்.

ஸ்தானம்1247812பாவ அளவு
லக்னம்  சூரி ராகு    2 * 1=2
சந்திரன்கேதுசெவ் ராகுசனி 4*1/2=2
சுக்கிரன் சூரி ராகு   2*1/4=1/2

மொத்த பாவ அளவு = 4 + 1/2 [ ஆண் ஜாதகம் ]

ஸ்தானம்1247812பாவ அளவு
லக்னம் செவ்  சனி 2*1=2
சந்திரன்  செவ்   1*1/2=1/2
சுக்கிரன்  செவ்   1*1/4=1/4

பெண்ணின் ஜாதகத்தில் மொத்த பாவ அளவு = 2 + 3/4

இந்த ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் பாவ தோஷ அளவு ஆணிற்கு அதிகம் உள்ளதால் பொருத்தம் உண்டு என அறியலாம்.