குரு திசாவின் பொதுப்பலன்கள்
🌻💦🌻💦🌻💦🌻💦🌻💦
குரு தசா நடைபெறும் காலம் 16 வருஷங்கள். ராஜ லாபம் பூமி லாபம் தன லாபம் தர்ம காரியங்களால் புண்ணிய லாபங்கள் உண்டாகும் . குரு ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் யானை குதிரை பல்லாக்கு வாகன லாபங்களும் அரசர்கள் பிரபுக்களின் அபிமானமும் உண்டாகும் . குரு நீசம் பெற்றிருந்தாலும் 8-12ல் இருந்தாலும் அரச கோபங்கள் சத்ரு பயம் தன தான்யாதிகள் நஷ்டம் அன்னிய தேச சஞ்சாரம்.
🥎🌹🥎🌹🥎🌹🥎🌹🥎🌹
சனி திசாவின் பொதுப்பலன்கள்.
🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁
சனி மகா திசை நடைபெறும் காலம் 19 வருஷங்கள் . சனி உச்சமாக இருந்து திசை நடந்தால் பெரிய அதிகாரியாவர். பூமி லாபமும் வித்தை லாபமும் உண்டாகும். அதிகார வாழ்க்கை உண்டாகும் ஆனால் தந்தைக்கு கண்டம் உண்டாகும். உறவினர்களுடன் பகை உண்டாகும். சனி 2-8 -12ல் இருந்தாலும் நீசம் பெற்றிருந்தாலும்.. அரச பயம் மனைவியால் தொல்லை மனைவிக்கு துரோகம் விவசாய நிலங்கள் நஷ்டங்கள் கடன் துன்பங்கள் உண்டாகும். நோய் அன்னிய தேசத்தில் அவதி படுதல்.
🌹💦🌹💦🌹💦🌹💦🌹
புதன் திசா பொதுப்பலன்கள்
🇧🇲🌿🇧🇲🌿🇧🇲🌿🇧🇲🌿🌿
புதன் திசா நடைபெறும் காலங்கள் 17ஆண்டுகள். மேன்மையான வித்தை தன லாபம் அழகிய பெண்களின் நட்பு மன மகிழ்ச்சி புதன் 6-8-12ல் இருந்தாலும் நீசம் பகை பெற்றாலும் தன தான்ய நஷ்டம் தொழில் நஷ்டம் மனைவி மக்களுக்கு துன்பங்கள் கண்டங்கள் உண்டாகும்
🟢💃🟢💃🟢💃🟢💃🟢💃
கேது திசாவின் பொதுப்பலன்கள்
☘️💃☘️💃☘️💃☘️💃☘️💃
கேது திசா நடைபெறும் காலங்கள் 7 வருடம். கேது 3 -6 -10- 11ல் நின்றாலும் கேந்திர கோணங்களில் நின்றாலும் பூமி பொருள் வாகன லாபங்களும் மனைவி மக்களால் குடும்ப சுகங்களும் உண்டாகும். பலவகை தொழில்களும் மறைமுகமான தனலாபம் கிடைக்கும். கேது 8 -12ல் இருந்தாலும் நீசம் பெற்றிருந்தாலும் பொருள் நஷ்டங்களும் கஷ்டங்களும் உண்டாகும் . அரச பயம் நோய் முதலிய தீய பலன்கள் நடைபெறும்.
🏇🇩🇪🏇🇩🇪🏇🇩🇪🏇🇩🇪🇩🇪🏇
சுக்கிர திசா வின் பொதுப்பலன்கள்
சுக்கிர திசை நடைபெறும் காலம் 20 வருடங்கள். பொருள் வீடு வாகனங்கள் சுகபோஜனம் முதலான நன்மைகள் . வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். விவாகம் கூடும். மகப்பேறு உண்டாகும். சுக்கிரன் 6-8-12ல் இருந்தாலும் நீசம் பகை பெற்றிருந்தாலும் பலவிதமான கஷ்ட நஷ்டங்கள் மனைவி மக்கள் வீடு வாசல் மாடு கன்றுகள் நஷ்டங்களும் சேதாரத்தையும் ஏற்படுத்தும். சுக்கிர திசா வின் இறுதியில் தங்களிடம் உள்ள அசையா சொத்துக்களை அவர்களது மனைவி அல்லது மகன்கள் பெயரில் எழுதி வைத்து விடுவது நலம். 70முதல்80சதவிகிதம் சுக்கிர திசை இறுதியில் ஜாதகரின் அசையா சொத்துகள் அவரை விட்டு சென்று விடுகிறது.
🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾🌸
ஒன்றை- ஒன்று, சேராத கிரகங்களின் திசா-புத்திகள்.
☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁 காற்று ராசிகளுக்கு அதிபதியான புதன் சுக்கிரன் சனி இந்த கிரgaங்கள் ஒன்றுக்கொன்று தன் வீட்டில் நட்சத்திரம் பெறாத கிரகங்கள் ஆகும்.
அதனால் இக் கிரகங்களின் தசா புத்திகளில் பல தோல்விகளையும் பல துக்கங்களையும் பல இழப்புகளையும் பலர் இறப்புகளையும் சந்திக்கிறார்கள்.
🍁➖🍁➖🍁➖🍁➖🍁
இக்கிரகங்களின் கூட்டு தசா புத்தி அந்தரம் ஆவது …
சனி தசா – சுக்கிரன் புக்தி -புதன் அந்தரம்
புதன் புத்தி -சுக்ர அந்திரம்
ராகு புத்தி -புதன் அந்தரம்
ராகு புத்தி -சுக்ர அந்திரம்
கேது புக்தி -புதன் அந்தரம்
கேது புத்தி -சுக்ர அந்திரம்
சனியின் தசாவில், சனியின் புத்தியில், புதன் சுக்கிரன் ராகு /கேது அந்தரம் போன்ற காலங்கள் ஜாதகருக்கு பெரும் பிரச்சினைகளை தரத்தக்கது.
பிறந்த லக்னங்கள் எதுவாயினும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் நிச்சயம் உண்டு 🇧🇯🍂🇧🇯🍂🇧🇯🍂🇧🇯🍂🇧🇯🍂
புதன் திசை –
புதன் தசா வில்.. சுக்கிரன் புத்தி- சுக்ர அந்திரம்
புதன் புத்தி -சனி அந்திரம்
ராகு புத்தி- சுக்ர அந்திரம்
ராகு புத்தி- சனி அந்திரம்
கேது புத்தி -சுக்ர அந்திரம்
கேது புக்தி- சனி அந்திரம்
சனியின் புத்தியில் புதன் சுக்கிரன் ராகு கேது அந்திரம் போன்ற காலங்களில் ஜாதகர் பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
பிறந்த லக்னம் எதுவாக இருந்தாலும் பிரச்சினைகள் ஏற்பட நிச்சயம் வாய்ப்பு உண்டு. 🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺
சுக்கிர தசாவில்.. 💃💦💃💦💃💦💃💦
சுக்கிரன் புக்தி -புதன் அந்தரம்
புதன் புத்தி -சனி அந்திரம்
ராகு புத்தி- புதன் அந்தரம்
ராகு புக்தி -சனி அந்திரம்
கேது புத்தி -புதன் அந்தரம்
கேது புத்தி- சனி அந்திரம்
சுக்கிர திசா வில் சுக்கிரனின் புத்தியில் புதன் சனி ராகு /கேது அந்தரம் போன்ற காலங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்த லக்னம் எதுவாக இருந்தாலும் சினிமா பிரச்சனையை கொடு க்கும்.
🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾🌸
மேற்கண்ட ஒன்று சேராத ராசிகளின் கூட்டு தசா புத்தி நடக்கும் காலங்களில் அந்த ஜாதகர் தோல்வியை சந்திப்பார் என்று அர்த்தம் .
புதன் சுக்கிரன் சனி இருவரில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவருமோ 8-12 ல் இருந்தால் இந்த காலகட்ட பெருத்த அவமான காலமாக இருக்கும்.
மேலும் அவருக்கு இக்கட்டான சூழ்நிலைகள் நிறைய ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே இக் காலங்களில் நீண்ட தூர பயணம் மற்றும் வெளிநாடு செல்லுதல் கூடாது.
சனி சுக்கிரன் புதன் இந்த மூன்று கிரகங்களின் திசாவில் வரக்கூடிய ராகு /கேது புத்தி மற்றும் அந்திரங்கள் மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தை தரும்.
கசப்பை தரும். தலைமறைவு வாழ்க்கை ஜெயில் தண்டனை மற்றும் அவமானம் ஏற்படும். அதிக கவனம் தேவை.