தம்பதியர்கள் [ கணவன் & மனைவி ]  இடையே குழந்தை பாக்கியம் தடைக்கான காரணங்கள் என்ன ?

Thank you for reading this post, don't forget to subscribe!
  1. ஒருவரது ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் இடம் குழந்தை பாக்கியம் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய ஸ்தானம். புத்திரத்திற்கு காரகனாக குறிப்பிடப் படுபவர் குரு. ஐந்தாம் பாவமும் குரு பாவமும் பலம் பெற்றிருந்தால் குழந்தைப் பேறு உண்டு.  ஐந்தாம் இடம் + குரு – பலவீனமாக இருந்தால் குழந்தைப் பேறு அமைவதில் தடை / தாமதம் ஏற்படுகின்றது. பலவீனம் என்றால் …
  2. லக்னத்திற்கு ஐந்தாம் இடத்து அதிபதி நீச்சம் அடைவது.
  3. ஐந்தாமிடத்து அதிபதி மறைவு ஸ்தானங்களில் [ 3,6,8,12 ] & பாதகஸ்தானங்களில் இருப்பது.
  4. ஐந்தாம் இடத்து அதிபதி சனி அல்லது சர்ப்ப கிரகங்களுடன் அல்லது சர்ப்பங்களின் [ ராகு / கேது ] நட்சத்திர சாரத்தில் இருப்பது.
  5. ஐந்தாம் இடத்து அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைவது
  6. ஐந்தாம் இடத்து அதிபதி லக்னாதிபதி அல்லது ஏழாம் இடத்து அதிபதியுடன் சேர்க்கை பெறுதல்
  7. ஐந்தாம் இடத்து அதிபதி தன் ஆட்சி அல்லது உச்ச வீட்டில் வக்கிரம் பெறுவது
  8. ஐந்தாம் இடத்து அதிபதியுடன் செவ்வாய், சனி, இராகு, கேது, புதன் போன்ற கிரகங்களுடன் தனித்து / சேர்ந்திருந்தாலும் 
  9. புத்திர காரகனான குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும்
  10. புத்திரகாரகன் குரு, ஸுரியனுடன் அஸ்தங்கம் அடைந்தாலும்,
  11. புத்திர காரகன் தன் ஆட்சி / உச்ச வீட்டில் வக்கிரம் அடைந்தாலும்
  12. புத்திர காரகன் லக்னாதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும்
  13. புத்திர காரகன் பாதக அதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும்
  14. ஐந்தாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு மறைவு ஸ்தானங்களில் மறைந்தாலும்,
  15. தோஷமுள்ள ஜாதகத்திற்கு தோஷமில்லா ஜாதகத்தை இணைப்பது போன்ற காரணங்களாலும் குழந்தை பாக்கியம் தடை ஏற்படுகின்றது.

சிறப்பு ஆலய வழிபாட்டிற்கு  

  1. திருக்கருகாவூர் ஆலய வழிபாடு [ தஞ்சாவூர் – கும்பகோணம் செல்லும் சாலையில் பாப நாசத்திலிருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது ]
  2. கருவளர்சேர் . மருதா நல்லூர் [ கும்ப கோணம் அருகே மருதா நல்லூர் அருகில் கருவளர்சேரி – அம்பாள் சக்க்ர மேரு வுடன் சுயம்பு அகிலாண்டேஸ்வரி – பெண்களுக்கு திருமணம் ஆகவும், அவர்களுக்கு கரு நல்ல முறையில் ஏற்படவும் அருள் பாலிக்கின்றார். முக தரிசனம் மட்டுமே கிட்டும். உடல் முழுவதும் திரை மறைவில் இருக்கும். நவராத்திரி ஒன்பது நாள் + சிவராத்திரி ஒரு நாள் மட்டும் முழு தரிசனம் கிட்டும். குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும் அதிக சக்தி வாய்ந்த கோயில்.
  3. சென்னை – முகப்பேறு 
  4. திருவாலங்காடு நரசிங்கம்பேட்டை – கும்பகோணம் – மயிலாடு துறை சாலையில் குத்தாலத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ளது.வட ஆரண்யேஸ்வரர் , வண்டார் குழலி அம்மன் – புத்திரகாமேஸ்வரர் தீர்த்தம் உள்ள தலம்.