ஒருவர் வீடு வாங்க வேண்டுமென்றால் நான்காம் வீட்டு அதிபதி பலம் பெற வேண்டும். பலம் பெற வேண்டும் எனில் ஆட்சி / உச்சமாக இருக்க வேண்டும்.
குரு போன்ற சுப கிரகங்களின் பார்வை இருக்க வேண்டும்.
சனி போன்ற தீய கிரகங்களின் பார்வை இருக்க கூடாது.
நிலத்திற்கு காரகனான செவ்வாய் பலம் பெற்றால் இன்னமும் சிறப்பு.
அழகுக்கும் சுகத்திற்கும் காரகனான சுக்கிரன் பலம் பெற்றாலும் அழகான சொகுசான [ லக்சரி ] வீடு அமையும்.
நான்காம் பாவத்தில் சுபகிரகங்கள் அமர வேண்டும்.
ஒன்பதாம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்று சொல்வோம். ஒருவருக்கு வீடு நல்லபடியாக அமைய அவர் செய்த பாக்கியத்தை ஒன்பதாம் பாவத்தைக் கொண்டும் ஒன்பதில் அமர்ந்த கிரகத்தைக் கொண்டும் அறியலாம். எனவே ஒன்பதாம் வீட்டையும் [ பாவத்தையும் ] கவனிக்க வேண்டும்.
நான்காம் வீட்டு அதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகருக்கு சொந்த வீடு அமையும்.
4-ஆம் வீட்டு அதிபதி தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்தால், அந்த வீட்டின் மூலம் நிறைய வருமானம் வரும். [ ஒரு சிலர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் / வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவார்கள் ] இப்படிப்பட்ட யோகம் அமைய வேண்டுமென்றால் 4-ஆம் வீட்டு அதிபர் இரண்டாம் பாவத்தில் இருக்க வேண்டும்.
அதே போல 2-ஆம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டில் இருந்தாலும், வாடகை வருமானம் வரும்.
நான்காம் வீட்டு அதிபதி மற்றும் இரண்டாம் வீட்டு அதிபதி பரிவர்த்தனையாக இருப்பது வாடகை வருமானத்திற்கு ஒரு நல்ல யோகமாகும்.
நான்காம் வீட்டு அதிபதி 3-ல் அமரக் கூடாது. 4-ம் பாவத்திற்கு விரய (12ம்) பாவமாக மூன்றாம் பாவம் வருவதால், வீடு கை நழுவிப் போக வாய்ப்பு.
3-ம் வீட்டு அதிபர் 4-ம் வீட்டில் இருந்தால் வீடு கட்ட / வாங்க சகோதரர் உதவி / ஆதரவு கிட்டும்.
நான்காம் வீட்டு அதிபதி 5-ல் இருந்தால் தன்னுடைய சொத்து தன் வாரிசிற்கு செல்லும் என்பது உறுதி.
அதே போல ஐந்தாம் வீட்டு அதிபதி 4-ஆம் வீட்டில் இருந்தால் தன்னுடைய குழந்தைகளால் சொத்து கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி + 4 ஆம் வீட்டு அதிபதி இருவரும் சேர்ந்து 2-ம் வீட்டில் நின்றால் தன்னுடைய வாரிசுகளால் சொத்து கிடைத்து அதன் மூலம் நிறைய வருமானம் ஈட்டக் கூடிய நிலை உருவாகும்.
நான்காம் வீட்டு அதிபதி 6 -ஆம் வீட்டில் மறையக் கூடாது. 6 ஆம் வீடு கடன், நோய், எதிரி ஆகியவற்றைக் குறிக்கும். ஆகவே, கடனை குறிக்க கூடிய ஆறாம் வீட்டில் சொத்தைக் குறிக்க கூடிய 4-ம் வீட்டு அதிபர் அமர்ந்தால், அந்த சொத்து கடநால் / கடன் ஏற்பட்டு அழிந்து விடும்.
நான்காம் வீட்டு அதிபருடன் + ஆறாம் வீட்டு அதிபர் சேர்ந்து அமர்ந்திருந்தால் நோய் ஏற்பட்டு, அதற்காக கடன் வாங்கி வைத்தியம் செய்து அதன் மூலம் வீடு பறி போகும். எனவே, இப்படிப்பட்ட அமைப்பு கொண்ட ஜாதகர் சொத்து வாங்கினாலும், வாங்கி இருந்தாலும் தன் பெயரில் உள்ள சொத்தை குடும்பத்தில் யார் ஜாதகம் நன்றாக உள்ளதோ அவர்கள் பெயருக்கு மாற்றி விட வேண்டும். வாங்குவதாக இருந்தாலும் அவர்கள் பெயரில் வாங்க வேண்டும்.
4-ஆம் வீட்டு அதிபதி 7-ல் நின்றாலோ அல்லது 7-ஆம் வீட்டு அதிபர் நான்கில் நின்றாலோ கணவன் / மனைவியால் ஜாதகருக்கு சொத்து கிடைக்கும்.
4-ஆம் வீட்டு அதிபதி 9-ஆம் வீட்டில் இருந்தால் தகப்பனார் சொத்து கிடைக்கும்.
4-ம் வீட்டு அதிபதி 10-ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தன் கடுமையான உழைப்பினால் / தொழிலால் வருமானம் ஈட்டி / தொழிலுக்காக நிறைய சொத்து சேர்ப்பார்.
4-ஆம் வீட்டு அதிபதி 11-ஆம் வீட்டில் இருந்தால் அவருக்கு நிறைய வீடுகளில் கிடைக்கும் வருமானம் அதன் மூலம் லாபம் நிறைய சம்பாதிப்பார்கள்.
4-ஆம் வீட்டு அதிபதி 12-ஆம் வீட்டில் நின்றால் சொத்து பல வகையிலும் விரயமாகும்.
4-ஆம் வீட்டு அதிபருடன் ராகு / கேது சேர்ந்திருந்தால் அவர் வீட்டிற்கு அருகில் பாம்புகள் வாசம் செய்யும். பாம்பு புற்றுகள் கூட இருக்கலாம்.
4-ஆம் வீட்டு அதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் சொகுசான அழகான மாளிகை போன்ற வீடு அமையும்.
4-ஆம் வீட்டு அதிபதியுடன் சந்திரன் + சுக்கிரன் சேர்ந்திருந்தால் அழகிய / தோட்டத்துடன் அழகான வீடு அமையும்.
4-ஆம் வீடு அல்லது 4-ஆம் வீட்டு அதிபதியை சனி பார்த்தாலும் சேர்ந்திருந்தாலும் வீடு வாங்க தடை ஏற்படும். மற்ற அம்சங்கள் சிறப்பாக இருந்தால், தடைகளை மீறி வீடு வாங்குவார்கள்.
உதாரண ஜாதகம்:
சூரியன் புதன் சுக் சனி |
| ராகு |
| |
|
| லக்னம் | ||
செவ்வாய் | குரு | |||
| கேது |
| சந்திரன் | |
கடக லக்னம். 4-ம் வீட்டு அதிபதி: சுக்கிரன். சுக்கிரன் மீனத்தில் உச்சத்தில். வீடு மனைகளுக்கு அதிபதியான செவ்வாய் மகரத்தில் உச்ச நிலை. மேலும், செவ்வாய் 5, 10க்கு அதிபதி. கால புருஷனுக்கு 10ம் வீடு மகரம். அங்கு செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் வீடு / கட்டிடங்கள் உண்டு என்பது உறுதியாகி விட்டது. 4-ஆம் அதிபதியும் உச்ச நிலை. அவருடன் சூரியனும் புதனும் இருப்பதால் கல்வி நிலையங்கள் நிறைய கட்டுவார் என எளிதாக கூறி விடலாம்.
வீடு மனை யோகத்தை அறிய ஒரு பொது விதி: எந்த லக்னமாக இருந்தாலும் 4-ஆம் வீட்டு அதிபதி 3 – 6 – 8 – 12 ல் இருக்க கூடாது. மற்ற பாவங்களான 1 – 2- 4 – 5- 7 – 9 – 10 – 11 ஆகிய பாவங்களில் இருப்பது சொந்த வீட்டிற்கான பாக்கியம் உண்டு என அறியலாம்.
சில நிபந்தனைகள்:
- மேஷ லக்னம்: ராசி மற்றும் நவாம்சத்தில் செவ்வாய் பகவான் – கடகத்தில் நீச்ச நிலையிலும், சந்திரன் [ 4-ஆம் பாவ அதிபதி ] விருச்சிகத்திலும் இருக்க கூடாது.
- ரிஷப லக்னம்: ராசி மற்றும் நவாம்சத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் கன்னியிலும் , 4-ஆம் பாவ அதிபதியான சூரியன் துலாமில் நீச்ச நிலையிலும் இருக்க கூடாது.
- மிதுன லக்னம்: ராசி மற்றும் நவாம்சத்தில் புதன் பகவான் (லக்னாதிபதி) + 4-ஆம் வீட்டு அதிபதி நீச்சம் பெறக் கூடாது.
- இவ்வாறாக 12 லக்னத்திற்கும் அறிய வேண்டும்.
- லக்னாதிபதி மற்றும் 4-ஆம் வீட்டு அதிபதியை குரு பார்த்தால் அழகான வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளும் கிடைக்கும்.
- 4-ஆம் வீடு சுபர் வீடாகி, அந்த வீட்டுக்குரியவர் குரு / 9ம் அதிபதியுடன் கூடியிருந்து செவ்வாய் பார்வை படால் வீடு கண்டிப்பாக உண்டு.
- செவ்வாய் + குரு ; செவ்வாய் + சூரியன் ; செவ்வாய் + சுக்கிரன் ; செவ்வாய் + புதன் ; செவ்வாய் + ராகு = சொத்து வளர்ச்சி உண்டு.
- செவ்வாய் + சந்திரன் எனில் முதல் சொத்து மாற்றம் / விரயமாகும்.
- செவ்வாய் + சனி = சொத்து வாங்க தடை.
- செவ்வாய் + கேது = சொத்து மீது வழக்கு. சொத்திற்காக வழக்கு.
- 4 – ஆம் வீட்டு அதிபதி 6 – 8 – 12 ல் மறைந்து, அவர்களை சூரியன் + செவ்வாய் இருவரும் பார்த்தால் சொத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்.
- செவ்வாயின் 4-ஆம் பார்வையில் உள்ள கிரகத்திற்கு [ கிரக காரக உறவிற்கு ] சொத்து உண்டு. உதாரணம் – செவ்வாயின் 4-ஆம் பார்வையில் சந்திரன் இருந்தால், தாய்க்கு சொத்து உண்டு. சூரியன் இருந்தால் தந்தைக்கு சொத்து உண்டு.
- 4 – ஆம் வீட்டு அதிபதி ராகு சாரம் பெற்றால் மெயின் ரோட்டில் வீடு இருக்கும்.
- 4 – ஆம் வீட்டதிபதி ராகு சாரம் பெற்று அவரை உச்ச குரு / சூரியன் பார்த்தால் ஜாதகருக்கு நிறைய வீடுகள் இருக்கும். அஷ்டமாதிபதி பார்த்தால் ஜாய்வழி சொத்து வந்திருக்கும்.
- 5 – க்குடையவன் 4 -ல் இருந்தால் அவர்கள் தெரு பஜை கோயில் தெரு, பள்ளிக்கூடம் இருக்கும் தெரு, பிள்ளையார் கோயில் தெரு என்ற பெயர்களில் ஒன்று இருக்கும்.
- சூரியன் + கேது = மிகச் சிறிய வீடு [ வீட்டில் ஒரு சிறு பகுதியாவது ஓலை இருக்கும் ]
- சூரியன் + சனி = ஓட்டு வீடு.
- சூரியன் + ராகு = ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு.
- நான்கில் கிரகம் இல்லை எனில், ஜாதகருக்கு இரண்டு அல்லது மூன்று சொத்து இருந்தாலும் அதில் ஒரு சொத்தைப் பற்றிய கவலை இருக்கும்.
- 4 -ல் சந்திரன் இருந்து சனி பார்த்தால், மழைக் காலங்களில் வீடு கட்டக் கூடாது.
- நான்காம் அதிபதி ஆறு எட்டு பனிரெண்டில் இருந்தால் மழை காலங்களில் வீடு கட்டக் கூடாது.
- 4 – ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் வீடு கண்டிப்பாக 90% வாய்ப்புண்டு.
வாகன யோகம்:
வாகன யோகம் அமைய 4 – ஆம் வீட்டு அதிபதி பலம் பெற வேண்டும். அதே போல வாகன காரகனான சுக்கிரனும் பலம் பெற வேண்டும். வாகன யோகம் என்பது தற்காலத்தில் 4 – சக்கர வாகனங்களை மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.
வாகன ஸ்தானாதிபதி லக்னத்தில் பலம் பெற்று இருந்தால் கண்டிப்பாக வாகனம் அமையும்.
4 – ஆம் வீட்டதிபதி தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் இருந்தால் வாகனத்தின் மூலமாக வருவாய் ஈட்டலாம் [ டூரிஸ்ட் – டிராவல்ஸ் – தொழில் செய்தும் , வாகனங்களை வாடகைக்கு விட்டும் தொழில் செய்யலாம் ]
4 – ஆம் வீட்டு அதிபதி + 10 ம் பாவ அதிபதி இணைந்து 2- ஆம் பாவத்தில் இருந்தால் பெரிய அளவில் பஸ் டிராவல்ஸ் போன்ற நிறுவனங்கள் நடத்தி அதன் மூலம் சம்பாதிக்கலாம்.
4 – ஆம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகரின் பெயரில் வண்டி வாங்கினால் நிறைய ரிப்பேர் செலவானது வந்து கொண்டே இருக்கும்.
4 – ம் வீட்டு அதிபதி + 10 ம் வீட்டு அதிபதி இணைந்து விரய ஸ்தானமான 12 – ஆம் வீட்டில் அமர்ந்தால் செய்யும் தொழில் மூலம் பணம் நிறைய விரயமாகும். இப்படிப்பட்ட அமைப்புடையவர்கள் சொந்தமாக கார் டிராவல்ஸ் / டூரிஸ்ட் வண்டிகள் தொழில் செய்யக் கூடாது. மேலும் காப்பீடு – விபத்துக் காப்பீடு, வாகனக் காப்பீடு , பயணிப்போருக்கான காப்பீடு, டிரைவருக்கான காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இவர்கள் வாடகைக்கு வாகனம் எடுத்து வெளியூர் / வெளி மா நிலம் சென்றாலும் காப்பீடு – எடுத்துக் கொண்டு செல்வது நல்லது. உடன் பயணிப்போருக்கும் காப்பீடு அவசியம் என்பதனை மறக்கலாகாது. ஆறு / எட்டு / பனிரெண்டில் இருந்தாலே காப்பீடு அவசியம்.
குரு போன்ற சுப கிரகங்கள் பார்த்தால் பிரச்னைகள் இருக்காது.
சுக்கிரன் ஆட்சி / உச்ச நிலையில் இருப்பது நல்லது / சிறப்பு.
4 – ஆம் வீட்டில் எத்தனை சுப கிரகங்கள் இருக்கின்றனவோ அல்லது 4 – ஆம் வீட்டு அதிபதியுடன் எத்தனை சுப கிரகங்கள் சேர்ந்திருக்கின்றனவோ அத்தனை வாகனங்கள் அமையும்.
சந்திரனும், சுக்கிரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் என்றாலும் நிறைய வாகனங்கள் வைத்திருப்பார்கள்.
சுக்கிரன் + குரு + 4 ஆம் வீட்டு அதிபர் இணைந்து அமர்ந்தால் பல வாகனங்கள் அமையும்.
4 – ஆம் அதிபதி லாப ஸ்தானமான 11 – ல் அமர்ந்து குருவால் பார்க்கப் பட்டால் வாகன யோகம் அமையும்.
9 , 10, 11 ஆகிய வீட்டின் அதிபர்கள் பலம் பெற்று வாகன ஸ்தானமான 4 – ஆம் வீட்டில் இருந்தால் வாகன யோகம் அமையும்.