கோச்சார பலன்கள்

கிரகங்கள் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு…. கோள்கள் என்று பொருள் .

சாரம் …என்பதற்கு அசைதல் என்று பொருள்.

ஆக கோள்களின் அசைவினால் ஒரு தனி மனிதனுக்கு ஏற்படக்கூடிய பலனையே கோச்சார பலன் என்பர்.

கோச்சார பலன் பார்க்க 9கிரகங்களை 1.வருட கிரகங்கள் 2.மாத கிரகங்கள் 3.நாள் அல்லது தின கிரகம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

வருட கிரகங்கள்

குரு – 1 வருடம்; சனி பகவான் – இரண்டரை வருடம், ராகு / கேது – ஒன்றரை வருடம் – ஒரு ராசியை கடக்க எடுத்துக் கொள்ளும் காலங்கள் என்பதால் குரு, சனி, ராகு / கேது – வருட கிரகங்களாகும். 

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் – இவைகள் மாதக் கிரகங்களாகும். 

சந்திரன் – தின கிரகமாகும். ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் இருக்கின்றன. ஒரு மாதத்தில் 27 நட்சத்திரத்தை கடக்கின்றன. 

கிரகங்கள் – வக்ரம், அதிசாரம் போன்ற நிலைகளில் இவற்றின் கால அளவுகள் சற்று வித்தியாசப்படும். 

சூரியன், ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்கள் வக்கிரம், அதிசாரம் பெறுவதில்லை. 

தினக் கோளான சந்திரனுக்கும் வக்கிரம், அதிசாரம் போன்ற நிலை இல்லை.

கோட்சாரப் பலன்களை அறிவதற்கு

  1. சுப – அசுப பலன்கள் – சந்திரனிலிருந்து கோள்கள் இருக்கும் ராசிகளை வைத்து சுப அசுப பலன்களை பார்ப்பது தான் நடைமுறையில் உள்ளது.
  2. வருட கிரகங்களுக்கு – மூர்த்தி நிர்ணய முறை – பலரால் பயன்படுத்தி வரப்படுகின்றது.
  3. இது தவிர கோச்சார வேதை – விபரீத வேதை கொண்டும்
  4. நட்சத்திர ஆதிபத்யப் பலன்களைக் கொண்டும்
  5. நட்சத்திர அங்க கோச்சாரப் பலன்கள்
  6. அஷ்ட வர்க்க கோச்சாரப் பலன்கள்
  7. சமாகம கோச்சாரப் பலன்கள்
  8. கிரகண கோச்சாரப் பலன்கள்
  9. வருட கிரக கோச்சாரப் பலன்கள் என பல வழிகளில் கோச்சாரப் பலன்கள் பார்த்து சொல்லப் படுகிறது.

சந்திரன்:

சந்திரன் 2 – 4 – 5 – 12 ஆகிய இடங்களில் அசுப பலன்களாக – துன்பம், பல வகை நோய் எண்ணிய காரியம், தடங்கல், வீண் செலவு, கெட்ட பெயர் உண்டாகும்.

8 – ல் அதிக தீமை – மிக மிக கெட்ட பலனைத் தருகின்றார்.

தாங்க முடியாத துன்பம், பயம், மன கலக்கம், அரிஷ்டம், நோய்கள், வம்பு, வழக்கு, சண்டை, சிறை பயம் முதலியன. இந்த எட்டாம் இடத்தில் இருப்பதை சந்திராஷ்டமம் என்றும் அழைப்பர்.

மேலும், சந்திரன் 1 – 3- 6 – 7 – 10 -11 ஆகிய இடங்களில் மிக நன்மை செய்கின்றார். உடல் நலம், சுக சௌக்கியம், போஜன சுகம், வாகன சுகம், தன தான்ய விருத்தி என பல வகையான நல்ல பலன்களைத் தருகின்றார்.

சுக்கிரன்

சுக்கிரன் 7 – 10 ம் இடங்களில் அசுப பலன்களைக் கொடுக்கின்றார்.

துன்பம், வீண் பகை, மனைவிக்கு சுகமின்மை, நோய், அலைச்சல், நேரம் தவறி உணவு உண்ணுதல், பெண் சுகம் இன்மை முதலியன.

சுக்கிரன் 6 -ல் அதி தீமையான பலன் – பல வகையான பெண் சம்பந்தப்பட்ட பால்வினை நோய்கள் , கடன், சண்டை, சிறை, மான பங்கம், மாரக பயம் முதலியன தருகின்றார்.

சுக்கிரன் 1 -2 -3 – 4 – 5 – 8 – 9 – 11 – 12 ஆகிய இடங்களில் சுப பலன்களையும் தருகின்றார்.

தேக சுகம், நிம்பதி, பூரண பெண் சுகம், திருப்தியான உணவு, தன தான்ய விருத்தி, தொழிலில் லாபம், பெண்களால் முன்னேற்றம், கிட்டும். 

செவ்வாய் 

செவ்வாய் ➖ 1 – 2 -4 -5 –  8 –  9 – 10 –  12 ல் அசுப பலன்களை தருவார்.

பல வகையிலும் துன்பம் துயரம் பண விரயம் நஷ்டம் உஷ்ண சம்பந்தமான நோய்கள் விபத்துகள் முதலியன உண்டாகும் .

7 -ல் அதிக தீமை – கலகம், வழக்கு, சண்டை, நோய்கள்

செவ்வாய்  3 – 6 – 11 ல் சுப பலன்களைத் தருவார்.

புதன் 

புதன் 1 -3 – 5 – 7 – 9 – 12 ல் அசுப பலன்களான தன விரயம், கஷ்டம், சண்டை, நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.

புதன் 2 -ல் அதி தீமையான பலன்களான நோய், சிறைக்காவல், மாரக பயம், நஷ்டாம், கஷ்டம் நோயால் துன்பம் 

புதன் ர் – 6 – 8 – 10 – 11 ஆகிய இடங்களில் சுப பலன்கள் தருகின்றார். மனம் உடல் மகிழ்ச்சி, கல்வி வெற்றி, நிம்மதி, தன தான்ய விருத்தி, சுகமான சௌக்கியம், உத்தியோகம் தொழில் விருத்தி, வழக்கு வெற்றி உண்டாகும். 

குரு 

குரு 1 -4 – 6 – 8 – 10 – 12 ஆகிய இடங்களில் அசுப பலன்கள் – மன பயம், கண்டம், இட மாற்றம், பதவி நாசம், சுகம், தூக்க குறைவு, வீண் விரயம், ஆரோக்கிய பாதிப்பு, இருமல், சளி நோய் முதலியன உண்டாகும்.

3ம் இடத்தில் தான் அதிக கெடுதி செய்கிறார். நோய், மாரக பயம், சிறை பயம், கௌரவ பங்கம், சண்டை, பகை முதலியன.

குரு 2- 5- 7 – 9 – 11 ல் மிக்க நன்மை செய்கின்றார்.  சுகமான வாழ்வு, வாகன ஆடை அலங்காரம், சுவர்ண லாபம், தொழில் உத்தியோகம் விருத்தி, உள் நாட்டு வெளி நாட்டு பயண வாய்ப்பு என எல்லா வகையிலும் நண்மை உண்டாகும்.

இராகு & கேது 

இராகு கேது – 1 – 2 – 4 – 5 – 7 – 8 – 10 – 12 ஆகிய இடங்களில் அசுப பலன்களையும்,

9 – ல் மிக கொடிய பலன்களையும் [ துர்பாக்கியம், தோல்வி, வழக்கு, எல்லா வகை துன்பம், நோய்கள் உண்டாகும் ]

இராகு கேது – 3 – 6 – 11 ல் நன்மைகளை செய்கின்றார்கள். 

சுப பலன்களைத் தருகின்றனர்.

சூரியன் 

சூரியன் 1 – 2- 4 – 5- 8 – 9 – 12 ஆகீய இடங்களில் அசுப பலன்களையும்,  7 -ல் சஞ்சாரம் செய்யும் போது அதிக தீமையும்  3 – 6 – 10 – 11 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது நன்மைகளை செய்கின்றார்.

சனி பகவான் 

சனி பகவான் 2 – 4- 5 – 7 – 8 – 10 – 12 ஆகிய இடங்களி அசுப பலன்களைத் தருகின்றார்.

2ம் இடம் ஏழரை சனியின் கடைசி பகுதி. 12 -ல் ஏழரை சனி ஆரம்பம். இக்காலங்களில் கடன், கஷ்டம், நோய், வீண் விரயம் எனப்படும்.

4-ல் சனி அர்த்தாஷ்டம சனி எனப்படும்.

7 -ல் கண்ட சனி எனப்படும்.

8 – ல சனி அஷ்டம சனி எனப்படும். இடமாற்றம், வீண் செலவு, மனைவி வழியில் பகை, சொத்து அழிவு ஆகியன ஏற்படும்.

1 -ல் ஜென்ம சனி காலத்தில் அதிக தீமை – மான கௌரவ பங்கம், பெற்றோரை இழப்பது, பெருந்தொகை இழப்பு , சிறை, காவல், துரோகத்தால் பாதிக்கப் படுதல்.

சனி பகவான் 3 – 6 – 9 – 11 ல் நன்மை செய்வார். சர்வ சௌக்கியம். தன லாபம் என எல்லா வகையிலும் நன்மை கிட்டும்.

மூர்த்தி நிர்ணய முறை

கோட்சார பலன் நிர்ணயிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று மூர்த்தி நிர்ணயம்.

இந்த முறையில், ஒரு கோள் ஒரு புதிய ராசியில் நுழையும் நேரத்தில் கோட்சார சந்திரன் உள்ள ராசி பிறப்பு ஜாதகத்தில் ஜென்ம ராசியிலிருந்து, எத்தனையாவது ராசியாக அமைகிறது என்பதனைக் கொண்டு பலன் நிர்ணயிப்பது ஆகும்.

4 வகைகளில் பலனை பிரிக்கலாம்:

  1. ஸ்வர்ண மூர்த்தி 2.ரஜத மூர்த்தி தாமிர மூர்த்தி.  4. உலோக மூர்த்தி  ஆகியனவாம்.

ஸ்வர்ண மூர்த்தி:

ஒரு கோள் புதிய ஒரு ராசியில் நுழையும் பொழுது கோட்சார சந்திரன் உள்ள ராசி – ஜென்ம ராசியில் இருந்து 1 – 6 – 11 ஆம் ராசிகளானால் அது ஸ்வர்ண மூர்த்தி [ தங்கத்தால் ஆனது ] ஆகும்.

ரஜத மூர்த்தி

      ஜென்ம ராசியிலிருந்து கோட்சார சந்திரன் 2 – 5 – 9 –ல் இருந்தால் அது ரஜத மூர்த்தி – வெள்ளியால் ஆனது.

தாமிர மூர்த்தி

      ஜென்ம ராசியிலிருந்து கோட்சார சந்திரன் 3 – 7 – 10 –ல் இருந்தால் தாமிர மூர்த்தி. செம்பினால் ஆனது.

உலோக மூர்த்தி

      ஜென்ம ராசியிலிருந்து கோட்சார சந்திரன் 4 – 8 – 12 –ல் இருந்தால் அது உலோக மூர்த்தி இரும்பினால் ஆனது.

சுவர்ண மூர்த்தி: முழு பங்கு சுப பலனையும்;

ரஜத மூர்த்தி – முக்கால் பங்கு சுப பலனையும்;

தாமிர மூர்த்தி – அரைப்பங்கு சுப பலனையும்;

உலோக மூர்த்தி – கால் பங்கு சுப பலனையும் தருகின்றனவாம். இந்த 4 மூர்த்திகள் தரும் பலனை சிறப்பு விதி என்பர்.

  1. இயல்பாக கோள்கள் தரும் பலனை பொது விதி என்றும்
  2. சிறப்பு விதிப்படி கோள்கள் தரும் பலனையும் =        

[ பொது விதி ( 0.50 ) + சிறப்பு விதி (0.50 ) = முழு பலன் ]

சிறப்பு விதி = [ ஸ்வர்ண மூர்த்தி (0.50 + ரஜத மூர்த்தி ( 0.250 ) + தாமிர மூர்த்தி ( 0.125) + உலோக மூர்த்தி ( 0.0625 ) = சிறப்பு விதிப்படி ஜாதகர் அனுபவிப்பது.

ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்:

 

குரு பெயர்ச்சிக்கான பலன் – கோட்சார குரு மகர ராசிக்கு வருதல்

ரிஷப லக்னம் –

கிரக நிலைகள்:

லக்னத்தில் ( ரிஷபத்தில் ) ராகு ; துலாமில் – சுக்கிரன் + புதன். விருச்சிகத்தில் சூரியன் + கேது; மகரத்தில் குரு + சனி + சந்திரன்.; மீனத்தில் செவ்வாய்.

கோள்சார சந்திரன் உள்ள ராசி ஜென்ம ராசியிலிருந்து – பொது விதிப்படி

2 -5 – 7 – 9 – 11 ம் இடத்திற்கு சுப பலன்.

மேஷ ராசிக்காரர்களுக்கு பலன் பார்க்க:

ராசி

சுபம் / அசுபம்

பொது விதிப்படி

சிறப்பு விதிப்படி

  

மேஷம் –

10 வது ராசி

அசுபம்

0

0.125 – தாமிர மூர்த்தி

ரிஷபம் – 9

சுபம்

0.50

0.250 ரஜத மூர்த்தி

மிதுனம் – 8

அசுபம்

0

0.0625 உலோகமூர்த்தி

கடகம் – 7

சுபம்

0.50

0..125 தாமிர மூர்த்தி

 

சிம்மம் – 6

அசுபம்

0

0.500 ஸ்வர்ண மூர்த்தி

 

 

கன்னி – 5

சுபம்

0.50

0.250 ரஜத மூர்த்தி

 

துலாம் – 4

அசுபம்

0

0.0625 உலோக மூர்த்தி

 

 

 

விருச்சிகம் – 3

அசுபம்

0

0.125 தாமிர மூர்த்தி

 

 

 

தனுசு – 2

சுபம்

0.50

0.250 ரஜத மூர்த்தி

மீனம் – 11

சுபம்

0.50

0.50 ஸ்வர்ண மூர்த்தி

கும்பம் – 12

அசுபம்

0

0.0625 உலோக மூர்த்தி

பொது விதி + சிறப்பு விதி யின் படி பலன்களைப் பார்க்க

மீன ராசி மட்டுமே ( 0.5 + 0. 50 = 1.0 ) என முழு பலன் பெறுகின்றது. ஆக, மகர ராசியில் குருப்பெயர்ச்சியால் மீன ராசியினர் மிக மிக அதிக நன்மை கிடைக்கும்.

அடுத்து நன்மை பெறும் ராசிகளாக கூடுதல் தொகையைப் பார்க்க ரிஷபம், கன்னி, துலாம் , கடகம், மகரம், சிம்மம், மேஷம், விருச்சிகம், மிதுனம், துலாம், கும்பம்… என்ற வரிசைப் படி நன்மையான பலன்களைப் பெறுகின்றனர்.

கோட்சார வேதை:

கோட்சார பலன் பார்க்கும் போது ஜென்ம ராசியில் இருந்து, ஒரு கோட்சார கிரம் சுப பலன் தரும் ராசியில் இருக்கும் போது, வேறு ஒரு கோள் ஜென்ம ராசியில் இருந்து ஒரு குறிப்பிட்ட ராசியில் இருந்தால் அது வேதையை தருகின்றது. அதனை கோட்சார வேதை என்பர். இதன் காரணமாக கோட்ச்சார கிரகம் தரும் நற்பலநை ஜாதகர் அனுபவிக்க இயலாமல் போய்விடுகின்றது. 

விபரீத கோட்சார வேதை :

பொது விதிப்படி, சுபம் அல்லது அசுப பலன்களைத் தரும் போது, ஜென்ம ராசியிலிருந்து ஒரு குறிப்பிட்ட ராசியில் வேறு கோள் அல்லது கோள்கள் இருந்தால், அந்த கோளின் கோச்சார சுபம் அல்லது அசுப பலன் இல்லாமல் இல்லாமல் போகும். 

சுப பலன் இல்லாத நிலைக்கு கோச்சார வேதை எனவும்,

அசுப பலன் இல்லாத நிலைக்கு விபரீத கோச்சார வேதை எனவும் அறிக

நட்சத்திர ஆதிபத்தியப் பலன்கள்

ஒருவர் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து நாம் பலன் அறிய விரும்பும் கோள் எத்தனையாவது நட்சத்திரத்தில் அன்றைய தினம் உள்ளதோ, அந்த கணக்குப்படி 9 வகையாக பலன் அறியப்படும். அதனை தாராபலன் கொண்டு அறியலாம். 

நட்சத்திர அங்க கோச்சாரப் பலன்கள்:

ஒருவர் ஜென்ம நட்சத்திரம் முதற்கொண்டு கோச்சாரத்தில் ஒவ்வொரு கோளூம் இருக்கும் நட்சத்திரங்கள் – மனிதனின் தலை முதல் கால் வரை – சில பல நட்சத்திரங்கள் ஒவ்வொரு அங்கங்களிலும் சஞ்சரிப்பதாகக் கொண்டு பலன்கள் சொல்லப் படுகின்றது. [ திம்ப சக்கரம் ] இதுவே நட்சத்திர அங்க கோச்சாரப் பலன்கள்.

அஷ்ட வர்க்க கோச்சாரப் பலன்கள்:

ஜாதக கணிதத்தில் முக்கிய பங்கு வகிப்பது அஷ்ட வர்க்கம். இந்த அஷ்ட வர்க்கம் – சர்வாஷ்ட வர்க்கம், பின்னாஷ்ட வர்க்கம் என இரு முக்கியப் பிரிவுகள் கொண்டது. 

ஒவ்வொரு கோளும், ஒவ்வொரு வீட்டிலும் தரும் சுப அசுப பலன்களை இந்த அஷ்ட வர்க்க பரல்களைக் கொண்டு அறிந்து, கோச்சார கிரகங்கள் அந்த வீட்டிற்கான பலன்கள் எப்படி தரும் என அறியும் முறையாகும்.

சமாகம கோச்சாரப் பலன்கள்: 

ஒருவர் ஜென்ம ஜாதகத்தில் தானிருந்த இடத்திற்கே வந்து இணைவது சமாகமம் எனப்படும். இதற்கு தனி பலனுண்டு.

இது மட்டுமல்லாமல், ஒரு கோள் கோச்சாரத்தில் வரும் போது தான் பிறப்பு ஜாதகத்தில் உள்ள இடத்தில் பார்வை என்ற முறையில் பார்ப்பது உண்டு. இதற்கான பலனை கூறுவது திருஷ்டி (பார்வை) பலன் எனப்படும்.

ஒரு கிரகம் ஜாதகத்தில் பிறக்கும் கோள்களின் நிலையைக் கடக்கும் போது பாதிப்பை / நன்மையை ஏற்படுத்துகின்றன.

ஒருவர் ஜாதகத்தில் 10 ஆம் இடம் என்பது உச்சிஸ்தானம்

[ சூரியன் உச்சம் பெறுவது 10ம் இடத்தில் – சூரியன் குறிப்பது தலைப் பகுதி ] இந்த உச்சிஸ்தானத்திலிருந்து கோச்சாரப் பலன் அறிவதும் உண்டு. இதன் பெயர் தசம சமாகமம் ஆகும்.

கிரகண கோச்சாரப் பலன்:

ஓவ்வொரு வருடமும் சூரிய சந்திர கிரகணங்கால் ஏற்படுகின்றன. இவற்றால், தனி நபர் அளவிலும், உலக அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன.

தனி நபர் அளவில் – லக்னத்திலிருந்தும் சந்திரனிலிருந்தும் (ஜென்ம சந்திரன் உள்ள ராசியிலிருந்தும் ) எந்தெந்த ராசிகளில் கிரகணம் நிகழுமோ அதற்கேற்ப தனி நபருக்கான / உலக நாடுகளுக்கான சுபம் அல்லது அசுபப் பலன்களை அறிவது கிரகண கோச்சாரப் பலன்கள் ஆகும்.

இவ்வாறு பல முறைகளில் கோச்சார பலன்கள் – கால தேச வர்த்தமானப் படி – சொல்லப்பட்டு வருகின்றது.

கோச்சாரப் பலனறிதல்: அல்லது பலனை எவ்விதம் எடுப்பது?

உ-ம்: கோட்சார சனி மீனத்தில். மேஷத்தில் செவ். கடகத்தில் சனி. சிம்மத்தில் கோட்சார கேது. [ பெண் ஜாதகம் ]. சனியுடன் கேது சேர்வதால் வேலை போகும். கணவன் (செவ்வாய்) – பிரச்னை வரும். சனி+ செவ் இணைவால் பெரிய அளவில் பிரச்னை வரும். இருவர் ஜாதகத்திலும் பிரிவினை காட்டினால் தான் பிரிவினை வரும். ஒருவர் ஜாதகத்தில் மட்டுமெனில் பிரிவினை வராது ஆனால் சண்டை சச்சரவு தொடர்ந்து கொண்டே இருக்கும். 

கேள்வியைப் பொறுத்து கிரக நிலையை கவனிக்க வேண்டும்.

செவ்வாய் எனில் குடும்பம் / கணவன் 

மன நிலை எனில் சந்திரன்.

புதன் எனில் கல்வி

சனி எனில் வேலை / தொழில்

பணம் எனில் சுக்ரன். 

உ-ம். கடகத்தில் சுக்+புதன்+செவ்வாய். கோட்சார கேது கடகத்தில் எனில், 

கேது நுழைவதால் கணவன் மனைவி பிரச்னை மற்றும் புதன் இருப்பதால் சொத்து பிரச்னையும் வரும். செவ்வாய் எனில் காரசாரமான வாதம் இருக்கும். மோதிப் பார்க்கும் நிலையை உருவாக்கும். 

ராகு எங்கு இருக்கிறதோ அந்த காரக உறவு கிரிமினலாக செயல்படும். 

புதன் – இளைய சகோதரன், சகோதரி. 

கடகத்தில் இருக்கும் சுக்கிரன் [ பெண் ] எனில் அடிக்கடி அம்மா வீட்டிற்கு செல்வார். அம்மா பாசத்தால் கணவனிடம் அடிக்கடி வாக்குவாதம் சண்டை வரும். 

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்தால் ராகுவின் தோஷம் – கண்டிப்பாக செயல்படும். 

உ-ம். சனி செவ் மகரத்தில். கோட்சார ராகு கும்பத்தில் எனில் – விபத்து, அறுவை சிகிச்சை ஏற்படப் போகிறது. கால் பகுதியில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படப் போகிறது. 

உ-ம்: மகரத்தில் குரு. [ ஆண் ஜாதகம் ] சுக்கிரன் கடகத்தில் [ பெண் ஜாதகம் என்பதால், பொருத்தம் சேர்க்க கூடாது. கேதுவிற்கு அன்பு, கருணை, இரக்கம் இருக்காது. 

ஆண் ஜாதகருக்கு குரு இருக்கும் இடத்திற்கு ராகு செல்வதால் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார். [ விபத்தும் ஏற்படலாம் ]