திருமணப் பொருத்தம் 

  • தசவித பொருத்தங்கள்
  • பெயர் பொருத்தம்
  • ஆண் / பெண் லக்னப் பொருத்தம்
  • யாருக்கு பொருத்தம் பார்க்கத் தேவையில்லை
  •  நாடிமுறையில் ஜாதகப் பொருத்தம்
  • ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரசன்னம் மூலம் பொருத்தம் பார்க்கும் முறை.
  • தசா புத்தி பொருத்தம்
  • ஜாதகத்தில் எந்தெந்த பாவங்க்களை பார்க்க வேண்டும்
  • ஆயுள்
  • குழந்தை பாக்கியம்
  • தோஷ சாம்யம்
  • தோஷ பரிகாரம்
  • இவ்வாறு பல விஷயங்கள் பார்க்கப்பட வேண்டியுள்ளது.

திருமணம் – திருமணப் பொருத்தம் ஏன் பார்க்கப்படுகின்றது ?

 நாம் வாழும் வீட்டிற்கு அழகான வாசல், கதவுகள் பொருத்துகின்றோம். வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் தேவைக்கேற்ப நமக்கேற்ற பயன்பாட்டிற்கு உதவவேண்டும் என்ற அடிப்படையில் வாங்கி அல்லது செய்து கொள்கின்றோம். 

எங்கும், எப்போதும் இனிமையை விரும்பி வாழும் நாம், நமக்காக நம்முடன் காலம் முழுவதும் வாழப் போகும் களத்திரம் பற்றி அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவே – திருமணப் பொருத்தம் – பார்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அம்சங்கள் அதாவது – ஆயுள், தொழில், குழந்தை பாக்கியம் – பிரச்சினை – பிரிவு – வழக்கு இவற்றிற்கான தடைகளைத் தரும் அம்சங்கள் இவற்றை நாம் தெரிந்து அதற்கேற்ப நம்மைத் தயார் செய்து கொள்வதற்கும், குறைகளை நிவர்த்தி செய்து வாழும் வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கவும் நிம்மதி தேடவும் நிம்மதியை அடையவும் ஜோதிடம் உதவுகின்றது.

நமக்கு விதிக்கப்பட்ட விதிப்படி மனைவி / கணவன் அமைகின்றது. 

என்னதான் பொருத்தம் பார்த்து மணந்து கொண்டாலும் காலம் அவர்கள் வாழ்வில் நிறைய மாற்றங்களை கொடுத்து விடுகிறது.

இனி பொருத்தங்க்கள் பற்றி பார்க்க இருக்கின்றோம்.

தசவிதப் பொருத்தம் – நட்சத்திர பொருத்தங்கள் -10.

ராசி அடிப்படையில் 4 பொருத்தங்கள் – ராசிப் பொருத்தம், வசியப் பொருத்தம் , அஷ்ட வர்க்கம், வர்ண பொருத்தம்

ராசி அதிபதி பொருத்தம் – 1.

 நட்சத்திரங்கள் அடிப்படையில் பார்க்கப்படும் பொருத்தங்கள்:

 1. தினம்

2. மகேந்திரம்

 3. கணம்

4. யோனி

5. ஸ்திரி தீர்க்கம்

6. கோத்திரம்

7. பட்சி

8. மிருகம்

9. மரம் 10. பூதம்

11. வேதனை / வேதை

12. ரஜ்ஜு

13. லாப நஷ்டம்

14. ஜோடிப் பொருத்தம்

15. கடன் 16. முதல்

17. நாடிப் பொருத்தம்

18. வர்ணப் பொருத்தம்

தற்காலத்தில் சுருக்கி 10 பொருத்தங்களாக – தினம் – கணம் – மகேந்திரம் – ஸ்திரி தீர்க்கம் – யோனி – ராசி – ராசி அதிபதி – வசியம் – ரஜ்ஜு – வேதை பொருத்தங்களாக பார்க்கப்படுகின்றது.

இதில் பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் பொருந்துமா ? இந்தப் பெண்ணிற்கு இந்த ஆணின் நட்சத்திரம் பொருந்தி வருகின்றதா? இந்த ஆண் பொருத்தமானவர் தானா ? என்று தான் பார்க்கப்படுகின்றதே தவிர ஆணுக்கு இந்த பெண் பொருத்தமானவரா என்று பார்ப்பதில்லை.

1. தினப் பொருத்தம்:

பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜெந்ம நட்சத்திரம் வரை எண்ண வேண்டும். 2 – 4- 6 – 8 – 9 – 11 – 13 – 15 – 17 – 18 – 20 – 22 – 26 – 27 வது நட்சத்திரங்கள் உத்தமம்.

எளிமையாக, ஒரு விதி:

பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை வந்த எண்ணிக்கையை 9 -ஆல் வகுத்து மீதம் 0 – 2 – 4- 6 – 8 என்று வந்தால் தினப் பொருத்தம் உண்டு.

மீதம் 1 – 3- 5 – 7 என்று வந்தால் தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம்

3 கணங்களாக 27 நட்சத்திரங்களை பிரித்துள்ளனர்.

  • தேவ கணம் – அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருஓணம், ரேவதி
  • அசுர கணம் – கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்
  • மனுஷ கணம் – பரணி, ரோகிணி, திரு ஆதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

கணப் பொருத்த பட்டியல்: 

பெண்           –    ஆண்

தேவ கணம் – தேவ கணம் – பொருந்தும்

தேவ கணம் – அசுர கணம் – மத்திமம்

தேவ கணம் – மனுஷ கணம் – மத்திமம்

 

அசுர கணம் – அசுர கணம் = மத்திமம்

அசுர கணம் – தேவ கணம் = பொருந்தாது

அசுர கணம் – மனுஷ கணம் = பொருந்தாது

மனுஷ கணம் – மனுஷ கணம் = பொருந்தும்

மனுஷ கணம் – தேவ கணம் = பொருந்தும்

மனுஷ கணம் – அசுர கணம் = பொருந்தாது

கணப் பொருத்த விதி விலக்கு – ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு.

3. மகேந்திரப் பொருத்தம்

பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் எண்ண 1 – 4- 7 – 10 – 13 – 16 – 19 – 22 – 25 ஆனால் உத்தமம்.

1234
13141516
252627 
12

மகேந்திரப்

பொருத்தம் – சிவப்பு எண்கள் உத்தமம்

5
2417
  
116
2318
  
10987
22212019
    

உபய ராசிகளான – தனுசு- மீனம் – மிதுனம் – கன்னி யில் உள்ள எண்கள் உத்தமம்.

உதாரணமாக

பெண்: அஸ்வினி நட்சத்திரம்; ஆண்: பூராடம் 

அஸ்வினி – முதல் – பூராடம் வரை எண்ண: 20 நட்சத்திரம். பூராடம் முதல் – அஸ்வினி வரை எண்ண = ஒன்பது வரும்.

ஆண் நட்சத்திரத்திலிருந்து பெண் நட்சத்திரம் அருகில் இருப்பதால், ஆண் பெண்ணை நோக்கி நெருங்கி வருவான். பெண் ஆணை விட்டு விலகி இருப்பது போல நடந்து கொள்வாள். இவ்வாறு இருந்தால் தான் ஒரு பெண் திருமணம் செய்யும் ஆணை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

உ-ம்:2.

பெண் நட்சத்திரம்: பரணி. ஆண் நட்சத்திரம் புனர்பூசம் எனில் பெண் – ஆண்: 6 எண்ணிக்கையும், ஆண் – பெண்: 23 ஆகவும் வரும். இதில் பெண்ணின் நட்சத்திரத்திற்கும் ஆண் நட்சத்திரத்திற்கும் இடைவெளி குறைவு என்பதால், ஆண் பெண்ணை விட்டு விலகி நிற்பான். இது பெண்ணிற்கு துரதிருஷ்டமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் விதிகள் வருகின்றது.

4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்: 

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி 13 க்கு மேல் வந்தால் உத்தமம். 7-க்கு மேல் வந்தால் மத்திமம்; 7க்கு குறைவானால் அதமம் என்றும் ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் இல்லை. பொருத்தம் இருந்தால் மனைவி தன் கணவனை கட்டுக்குள் கொண்டு வைத்து இருப்பாள் – இதனால் தன சேர்க்கை கிடைப்பதற்கும் குடும்பம் விருத்தியும் ஏற்படும்.

5. யோனிப் பொருத்தம்:

ஓவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருகம் உண்டு. சில நட்சத்திரங்களுக்கு ஆண் மிருகமும், சில நட்சத்திரங்களுக்கு பெண் மிருகமும் வரும். இருவர் மிருகமும் பகை இல்லாமல் இருக்க வேண்டும். 

மனைவிக்கு பெண் யோனியும் – ஆணிற்கு ஆண் யோனியும் வருவது சிறப்பு.

யோனிப் பொருத்தம் – கணவன் மனைவி இருவருக்கும் நல்ல ஒற்றுமையும் சிறப்பான தாம்பத்திய உறவும் ஏற்படும்.

 
 1. அஸ்வினி – ஆண் குதிரை 10.மகம் – ஆண் எலி

2. பரணி – ஆண் யானை         11. பூரம் – பெண் எலி

3. கிருத்திகை – பெண் ஆடு     12. உத்திரம் – ஆண் எருது

4. ரோகிணி – ஆண் நாகம்       13. அஸ்தம் – ஆண் எருது

5. மிருக சீரிடம் – பெண் சாரை  14. சித்திரை – ஆண் புலி

6. திருவாதிரை – ஆண் நாய்      15. சுவாதி – ஆண் எருமை

7. புனர்பூசம் – பெண் பூனை’      16. விசாகம் – பெண் எலி

8. பூசம் – ஆண் ஆடு                   17. அனுஷம் – பெண் மான்

9. ஆயில்யம் – ஆண் பூனை        18. கேட்டை – ஆண் கலைமான்

19. மூலம் – பெண் நாய்   20. பூராடம் – ஆண் குரங்கு

21. உத்திராடம் – கீரி    22. திரு ஓணம் – குரங்கு  23. அவிட்டம் – பெண் சிங்கம் 24. சதயம் – பெண் குதிரை  25. பூரட்டாதி – ஆண் சிங்கம்  26. உத்திரட்டாதி – பெண் பசு. 27. ரேவதி – பெண் யானை

ஆகியன 27 நட்சத்திரங்களுக்குரிய யோனி மிருகமாகும்.

விதிகள்:

1. மனைவிக்கு பெண் யோனி – கணவனுக்கு ஆண் யோனி = உத்தமம்

2. மனைவிக்கு ஆண் யோனி – கணவனுக்கு ஆண் யோனி = அதமம்

3. மனைவிக்கு பெண் யோனி – கணவனுக்கு பெண் யோனி = மத்திமம்

4. மனைவிக்கு ஆண் யோனி – கணவனுக்கு பெண் யோனி =அதமம்.

ஆண் – பெண் இருவருக்கும் பகை யோனியும் சேர்க்க கூடாது.

1. யானைக்கு சிங்கம் 2. குதிரைக்கு எருமை.  3. குரங்கிற்கு ஆடு 

4. பசுவிற்கு புலி.  5. எலிக்கு பூனை மற்றும் பாம்பு.

6. பூனைக்கு நாய் மற்றும் எலி. 7. எருமைக்கு புலி  8. மானுக்கு புலி

9. பாம்பிற்கு கீரி.  10. நாய் – மான் மற்றும் புலி இணைக்க கூடாது. இதனின் சாராம்சம் என்னவென்றால்

பூராடம் / திருவோணம் ## பூசம் / கிருத்திகை

அவிட்டம் / பூரட்டாதி ## பரணி / ரேவதி

அஸ்வினி / சதயம் ## சுவாதி / அஸ்தம்

உத்திரம் / உத்திராடம் / உத்திரட்டாதி ## விசாகம் / சித்திரை

மகம் / பூரம் ## ஆயில்யம் / புனர்பூசம்

கேட்டை / அனுஷம் ## மூலம் / திருவாதிரை

உத்திராடம் ## ரோகிணி / மிருக சீரிடம் 

இவைகள் பகை யோனியாக வருவதால் பொருந்தாது.

6. ராசிப் பொருத்தம்

மொத்தம் 12 ராசிகள்.

பெண் ராசி முதல் ஆண் ராசி வரை எண்ணினால் ஆறுக்கு மேற்பட்டு வந்தால் உத்தமம். ஆறுக்கு குறைவாக இருந்தால் பொருந்தாது.

ஆணும் பெண்ணும் ஒரே ராசி மற்றும் சம சப்தம ராசியும் பொருந்தும்.

ஏன் ராசிப் பொருத்தம் எனில்,

1. குடும்பத்தில் உள்ள மாமனார், மாமியார் எல்லோரும் ஒற்றுமையுடன் இருப்பதற்கும்; குடும்பம் ஒற்றுமையாக நடத்துவதற்கும் ராசி பொருத்தம் பார்க்க வேண்டும். 

பெண் ராசிக்கு ஆண் ராசி = உத்தமம்;

பெண் ராசிக்கு இரண்டாவது ராசியாக ஆணின் ராசி வந்தால் கண்டம்.

பெண் ராசிக்கு ஆண் ராசி 3வதாக வந்தால் துக்கம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 4வதாக வந்தால் தரித்திரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 5வதாக வந்தால் பாதி வயதில் விதவை.

பெண் ராசிக்கு ஆண் ராசி 6 ஆக வந்தால் புத்திர நாசம்.

பெண் ராசிக்கு ஆண் ராசி 7 எனில் சகல விருத்தி – உத்தமம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 8 எனில் புத்திர லாபம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 9 எனில் சௌமாங்கல்யம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 10 எனில் ஐஸ்வர்யம் , தனவிருத்தி

பெண் ராசிக்கு ஆண் ராசி 11 எனில் சுக விருத்தி

பெண் ராசிக்கு ஆண் ராசி 12 வது ராசியானால் ஆயுள் விருத்தி.

இவை பொது விதி என்றாலும் விதிவிலக்கும் உள்ளது.

7. ராசி அதிபதிப் பொருத்தம்

பெண் ராசி – ஆண் ராசி அதிபதிகள் இருவரும் நட்பெனில் உத்தமம். சம நிலை எனில் மத்திமம். பகை எனில் அதமம். 

உ-ம். மேஷ ராசி – அதிபதி செவ்வாய் – நட்பு – சிம்மம், தனுசு – சூரி, குரு. சந்திரன். சமம் – புதன்; பகை – சனி, சுக்.

இவ்வாறு ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க வேண்டும்.

குடும்ப ஒற்றுமை, எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க; கணவன் மனைவி நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பொருத்தம் பார்க்கப்படுகிறது.

8. வசியப் பொருத்தம்

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் ஏதாவது ஒன்றிரண்டு ராசிகள் வசியத்திற்கும் உட்பட்டிருக்கும். 

வசியம் உள்ள ராசிகளுக்குள் ஆண் பெண் இருவரது நட்சத்திரமும் இருப்பது நல்ல வசியமாகும்.

1. பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் – உத்தமம்.

2. ஆணின் ராசிக்கு பெண் ராசி வசியமானால் – மத்திமம்

3. வசியம் இல்லாவிட்டால் வசியப்பொருத்தம் இல்லை என பொருள்.

மேஷத்திற்கு – சிம்மம், விருச்சிகம்

ரிஷபத்திற்கு – கடகம், துலாம்

மிதுனத்திற்கு – கன்னி

கடகத்திற்கு – தனுசு, விருச்சிகம்

சிம்மத்திற்கு – துலாம்

கன்னிக்கு – மிதுனம்

துலாமிற்கு – மகரம்

விருச்சிகத்திற்கு – கடகம், கன்னி

தனுசுவிற்கு – மீனம்

மகரத்திற்கு – மேஷம், கும்பம்

கும்பத்திற்கு – மேஷம்

மீனத்திற்கு – மகரம் வசிய ராசிகளாகும்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்

1. பாத ரஜ்ஜு – அஸ்வினி, மகம் , மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி. [ புதன், கேது நட்சத்திரங்கள் ]

2. தொடை ரஜ்ஜு – பரணி, பூரம் – பூராடம் – பூசம் – அனுஷம் – உத்திரட்டாதி [ சுக்கிரன், சனி நட்சத்திரங்கள் ]

3. வயிறு ரஜ்ஜு – கார்த்திகை – உத்திரம் – உத்திராடம், புனர்பூசம் – விசாகம் – பூரட்டாதி [ சூரியன், குரு நட்சத்திரங்கள் ]

4. கழுத்து ரஜ்ஜு – ரோகிணி – அஸ்தம் – திருஓணம் – திருவாதிரை – சுவாதி – சதயம் [ சந்திரன், ராகு நட்சத்திரங்கள் ]

5. சிரசு ரஜ்ஜு – மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் [ செவ்வாய் நட்சத்திரம் ]

ஆண் – பெண் இருவருடைய நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜில் வந்தால் பொருத்தம் இல்லை. வேறுபட்ட ரஜ்ஜுவானால் பொருத்தம் உண்டு.

ஆண் – பெண் = இருவரின் ரஜ்ஜு சிரசு எனில் கணவருக்கு கண்டம்.

கழுத்து ரஜ்ஜு எனில் மனைவிக்கு கண்டம். வயிறு ரஜ்ஜு எனில் புத்திர தோஷம். தொடை ரஜ்ஜு எனில் ஒற்றுமைக் குறைவு. பாத ரஜ்ஜு எனில் நோய்வாய்ப்படுதல்.

ஆண், பெண் இருவருக்கும் தனித் தனி ரஜ்ஜுவாக இருந்தால் தான் மாங்கல்யக் கயிறு நிலைக்கும். ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் வேறு பொருத்தம் இருந்தாலும் திருமணம் செய்யக் கூடாது.

10. வேதைப் பொருத்தம்

வேதை என்றால் தடை – தாக்குதல் – பாதிப்பு என்று பொருள். இதன் பலன் நாசத்தை ஏற்படுத்தும்.

வேதைகள்: பல வகைகள் உள்ளன. அவற்றுள் பரஸ்பர வேதை, தற்காலிக வேதை, சமசப்தம வேதை, ரஜ்ஜு வேதை, அனுலோம வேதை, பிரதிலோமா வேதை .

பரஸ்பர வேதை – அஸ்வினிக்கு கேட்டை. பரணிக்கு அனுஷம்; கிருத்திகைக்கு – விசாகம்; ரோகிணிக்கு – சுவாதி. திருவாதிரைக்கு – திருஓணம்; புனர்பூசத்திற்கு – உத்திராடம்; பூசத்திற்கு – பூராடம்; ஆயில்யத்திற்கு மூலம்.;

மகத்திற்கு ரேவதி; பூரத்திற்கு உத்திரட்டாதி; உத்திரத்திற்கு பூரட்டாதி; அஸ்தத்திற்கு சதயம்; இவை ஒன்றுக்கொன்று பரஸ்பர வேதையாகும்.

இது தவிர மிருக சீரிடம் – சித்திரை – அவிட்டம் ஆகிய செவ்வாயின் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதையாகும். வேதை நட்சத்திரங்களைக் கொண்ட ஆண் – பெண் இணைக்கக் கூடாது.

நசட்சத்திரங்கள் சஷ்டாஷ்டக தோஷம் பெறும். எனவே வசியம் மகேந்திரம் இருந்தால் கூடபொருந்தியதாக இருக்ககூடாது. மீறி பொருத்தினால் குல நாசம், வம்ச நாசம் ஏற்படும். அசுப பலன் தரும். எனவே, நட்சத்திரம் வேதையானால் திருமணம் செய்யக் கூடாது.