செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் இருக்கும் இடங்களைக் கொண்டு அறியப்படுவது.
செவ்வாய் என்பது இரத்தம். கணவன் மனைவி இருவரின் இரத்தம் சரியாக இணைய வேண்டும் என்பதால், செவ்வாய் தோஷம் பார்க்கப்படுவது.
விதிகள்:
லக்னத்திற்கு 1 – 2 – 4 – 7 – 8 – 12 ல் செவ்வாய் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம்.
இந்த ஸ்தானங்களை முதலில் 1. லக்னத்திலிருந்தும் 2. சந்திரனிலிருந்தும் 3. சுக்கிரனிலிருந்தும் கணக்கிடப்பட வேண்டும்.
லக்னத்திலிருந்து கணக்கிடும் செவ்வாய் தோஷம் முழு பங்கும், சந்திரனிலிருந்து கணக்கிடும் செவ்வாய் தோஷம் முக்கால் பங்கும், சுக்கிரனிலிருந்து கணக்கிடும் செவ்வாய் தோஷம் அரை பங்கும் கெடு பலனைச் செய்வார்கள்.
ஆனோ, பெண்ணோ ஜாதகத்தில் மேற்கூறிய இடத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகரை ஒன்றும் செய்யாது. ஆனால் அவருக்கு வரும் துணை / [ கணவனையோ அல்லது மனைவியையோ ] பாதிக்கும். பாதிப்பு என்பது எதிர்ப்பு தானே தவிர அந்த ஜாதகர் அல்ல.
செவ்வாயினால் ஏற்படும் தீய பலன் – ஒவ்வொரு இடத்திற்கும்:
1. லக்னத்தில் அமர்ந்த செவ்வாய் – நோய் நொடியின்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வைத்திருக்கும். ஆனால், லக்னத்திற்கு 7-ம் இடம் மாரக ஸ்தானம் என்பதால், வாழ்க்கைத் துணைக்கு பிரச்சினை கொடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.
2. செவ்வாய் -2ஆம் இடத்தில் – ஜாதகருக்கு மரணம் தரக்கூடிய மாரக ஸ்தானம் ஆகும்.
3. செவ்வாய் – 4ம் இடத்தில்: பொதுவாக எந்த ஒரு ஸ்தானத்தில் இருந்தும் 4 அல்லது 8ம் இடங்களினை செவ்வாய் கெடுத்து விடுவார். செவ்வாய் பகவானிற்கு 4 மற்றும் 8 விசேஷ பார்வை உண்டு. 4-ஆம் பார்வையால் சொத்து அல்லது வீடு யோகம் மட்டும் உண்டு என அறிக. மற்ற காரகங்கள் அடிபட்டுப் போகும். லக்னத்தினால் கிடைக்கும் நற்பலன் களை முற்றிலும் அழித்து விடுவார். பார்வைபடக் கூடிய ஸ்தானத்தின் நற்பலன் களையும் கெடுத்து விடுவார்.
4. செவ்வாய் – 7 -ஆம் இடத்தில்: 7ம் இடம் என்பது மாரக ஸ்தானமாகும். எனவே 7 -ல் அமர்ந்த செவ்வாய், அந்த ஜாதகருக்கு மாரகத்தைக் கொடுத்து விடுவார். ஆனால் அவரது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தைரியம், துணிச்சல், அகம்பாவம், இறுமாப்பு ஆகியவற்றைக் கொடுத்து விடுவார். 7-ஆம் இடத்தில் அமர்ந்த செவ்வாய் தரக்கூடிய பலங்கள் ஒன்று கூட தம்பதியருக்கு நல்லதல்ல. [ மாரகம் – அதன் தொடர்புடைய தசா புத்தி காலங்களில் தான் நடக்கும் என்று அறிக ]
5. செவ்வாய் 8 ஆம் இடத்தில்: எட்டாமிடம் ஜாதகருக்கு ஏற்படும் துன்பங்கள், தண்டனைகள், மன வருத்தங்கள் ஆகியவற்றைத் தரக்கூடியதாகும்.
மேலும், 8ம் இடம் என்பது 7-ம் இடத்திற்கு இரண்டாமிடம். அதாவது, கணவன் / மனைவிக்கு குடும்ப ஸ்தானம் மட்டுமல்ல மாரக ஸ்தானமும் கூட. ஆக, 8-மிடத்து செவ்வாய் பண நஷ்டம், எதிபாலினத்தினருக்கு மாரகம் / அதற்கொப்பான கண்டத்தை தருகிறார்.
அடுத்து, 12-ஆம் இடத்தில் செவ்வாய்: 12-ஆம் இடம் அயன – சயன – ஸ்தானம்.
இல்லற சுகம் அனுபவித்தல் பற்றிக் கூறுமிடம். இந்த 12-ம் இடத்தில் அமர்ந்த செவ்வாய், அந்த சொர்க்க இன்பத்தை முழுமையாகக் கிடைக்காமல் செய்து விடுவார். பொதுவாகவே, ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் அதற்கு 6 – 8 – 12 ஆம் இடங்கள் அந்த ஸ்தானத்திற்கு ஆகாத இடங்கள் ஆகும். 12ம் இடம் என்பது , 7-ம் இடத்திற்கு ஆறாம் இடமாகின்றது. ஆக, கணவன், மனைவி இருவருக்குமே, 12-ம் இட செவ்வாய் பாதகத்தைச் செய்து விடுகின்றது.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்:
- குரு / சுக்கிரன் பலமுடன் லக்னத்தில் இருந்தால் செவ்வாய் சாந்தமாகி விடும். செவ்வாய் தோஷம் நீங்கி விடும்.
- செவ்வாய் நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், பகை பெற்று 1 – 2 – 4 – 7 – 8 – 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாயின் ஆக்ரோஷம் தணிந்து சுப லட்சணம் கொண்டவராகின்றார். ஜாதகரது செவ்வாய் தோஷம் நீங்கி விடுகிறது.
- ஸெவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று 1 – 2 – 4- 7 – 8 – 12 ல் இருந்தாலும், செவ்வாய் தோஷம் நீங்கி விடுகிறது.
- லக்னாதிபதி – ஐந்தாம் இடத்து அதிபதி – ஒன்பதாம் இடத்து அதிபதி ஆகிய மூவரும் அவர்களின் லக்னத்திற்கு அதிகம் தீமை செய்ய மாட்டார்கள்.
- செவ்வாய் தன் வீடுகளில் [ மேஷம் / விருச்சிகம் ] இருந்தால் தோஷமில்லை.
- செவ்வாய் மகரத்தில் [ உச்சம் ] இருந்தால் தோஷமில்லை.
- கன்னி / மிதுனம் இரண்டாம் பாவமாக வந்து அங்கு செவ்வாய் நின்றிருந்தாலும் தோஷம் இல்லை.
- கடகம் / மகரம் – 7ம் இடமாகி, அங்க்கு செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.
- ரிஷபம் / துலாம் – 12ம் பாவமாக அமைந்து அங்கு செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.
- தனுசு, மீனம் 8-ம் இடமாக அமைந்து அங்கு செவ்வாய் நின்றிருந்தாலும் தோஷமில்லை.
- கடகம் , சிம்ம லக்னத்திற்கு யோகக் காரகன் – செவ்வாய் என்பதால் செவ்வாய் எங்கு இருந்தாலும் தோஷமில்லை.
- கும்ப லக்னத்திற்கு 4-ம் இடமான ரிஷபம் , 8-ம் இடமான கன்னியில் செவ்வாய் நின்றாலும் தோஷமில்லை.
- செவ்வாயுடன் – சூரியன், புதன், சனி, ராகு, கேது சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷம் இல்லை.
- செவ்வாய்க்கு வீடு கொடுத்த கிரகம் கேந்திரத்தில் / திரிகோணத்தில் நின்றாலும் தோஷமில்லை.
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள்
- சிவப்பு நிற கர்ச்சீப் வைத்திருத்தல்.
- வெள்ளி மோதிரம் அணிதல்
- பவள மோதிரம் அணிதல்
- வெள்ளியும் தாமிரமும் கலந்த வளையல் அணிதல்
- சிவப்பு நிறம் பூசப்பட்ட வெள்ளி வளையல் அணிதல்
- வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குரங்குகளுக்கு உணவு / தின்பண்டங்கள் கொடுப்பது.
- நாய்களுக்கு இனிப்புகள் போடுதல்
- ஆலயங்களில் இனிப்பு வழங்குதல்
- செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு அர்ச்சனை செய்தல்
- செவ்வாய் கிழமை முருகணுக்கு அபிசேஷகம் & அர்ச்சனை செய்தல்
- கந்த சஷ்டி கவசம் படித்தல்
பொதுவாக,
இருவர் ஜாதகங்களில் லக்னாதிபதி – ஏழாம் அதிபதி நிற்கும் ராசிகளைக் கவனியுங்கள்.
பெண் ஜாதகத்தில் லக்னாதிபதி நிற்கும் ராசியும் – ஆணின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி நிற்கும் ராசியும்,
ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதி நிற்கும் ராசியும் – பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி நிற்கும் ராசியும்
ஒன்றுக்கொண்று 3 / 11 ; 4 / 10; 5 / 9; 1 / 1 ஆக வந்தால் நல்ல பொருத்தம் என்க.
7 / 7, 2 / 12, 6 / 8 ஆக வந்தால் பொருத்தம் இல்லை என அறியவும்.
| லக் | ராகு | குரு | |
| சனி | பெண் | ||
| சந்திரன் | |||
| கேது | சுக் செவ் | பு சூரி | |
| செ சந்தி லக்னம் | |||
| கேது | ஆண் | ||
| ராகு சூரி | |||
| குரு சனி | புதன் சுக்கிரன் | ||
பெண்ணின் ஜாதகத்தில் – மீன லக்னம். அதிபதி குரு. குரு பகவான் மிதுனத்தில். ஆணின் ஜாதகத்தில் குரு பகவான் தனுசுவில். மிதுனமும் தனுசுவும் 7 / 7 .
பெண் ஜாதகத்தில் மீன லக்னத்திற்கு 7-மிடம் கன்னி. அதன் அதிபதி புதன் கன்னியில். ஆண் ஜாதகத்திலும் கன்னியில் புதன். ஆகவே 1 / 1.
இரண்டு ஜாதகத்திலும் பொருத்தம் அமைந்தால் 100% சதவீதம் ஆகும். அதே போல் இருவர் ஜாதகத்தில் ஒன்றில் மட்டும் பொருந்தினால் 50% என்று பொருள் கொள்க.